search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொறியியல் கலந்தாய்வில் போட்டி கடுமையாக இருக்கும்- கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி
    X

    பொறியியல் கலந்தாய்வில் போட்டி கடுமையாக இருக்கும்- கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி

    • கட்ஆப் மதிப்பெண் 160- ல் இருந்து 170-க்குள் எடுத்தவர்கள் எண்ணிக்கையில் கடந்த ஆண்டுக்கும், தற்போதும் எந்த மாற்றமும் இல்லை.
    • கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு விரும்பிய தரமான கல்லூரிகளும், பாடப்பிரிவுகளும் கிடைப்பது கடினம்.

    சென்னை:

    என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் கட்ஆப் மதிப்பெண் நிலவரம் குறித்து கல்வி ஆலோசகர் ஜெயப் பிரகாஷ் காந்தி கூறியதாவது:-

    கடந்த ஆண்டில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 278 பேருக்கு என்ஜினீயரிங் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு 1 லட்சத்து 76 ஆயிரத்து 744 பேருக்கு தரவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி கடந்த ஆண்டை விட 20 ஆயிரம் பேர் வரை கூடுதலாக கவுன்சிலிங்கில் பங்கேற்கின்றனர். அதனால் பாடப்பிரிவுகள் மற்றும் கல்லூரிகள் தேர்வில் போட்டி அதிகரித்துள்ளது.

    மொத்தம் 195-ல் இருந்து 170-க்குள் கட்ஆப் மதிப் பெண்ணை ஒப்பிட்டால் கடந்த ஆண்டை விட குறைந்த பட்சம் 2 ஆயிரம் பேர் வரை இந்த ஆண்டு அதிகமாக கவுன்சிங்கில் பங்கேற்கின்றனர்.

    அதனால் 170-க்கு மேல் கட்ஆப் பெற்றவர்களுக்கு கடந்த ஆண்டை போன்றே கல்லூரிகள், பாடப்பிரிவுகள் கிடைக்கும்.

    கட்ஆப் மதிப்பெண் 160- ல் இருந்து 170-க்குள் எடுத் தவர்கள் எண்ணிக்கையில் கடந்த ஆண்டுக்கும், தற்போதும் எந்த மாற்றமும் இல்லை. அதனால் கடந்த ஆண்டு கிடைத்தது போன்ற கல்லூரிகள், பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு கிடைக்கும். 150-ல் இருந்து 160 பெற்றவர்களுக்கு கடந்த ஆண்டை விட கட்ஆப் அளவு சற்று அதிகரிக்கும்.

    ஆனால் 100-க்கு மேல் 30 ஆயிரம், 120-க்கும் மேல் 25 ஆயிரம், 140-க்கு மேல் 11 ஆயிரம் என கடந்த ஆண்டை விட அதிகம் பேர் உள்ளதால் இந்த கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு விரும்பிய தரமான கல்லூரிகளும், பாடப்பிரிவுகளும் கிடைப்பது கடினம்.

    இதற்கு தமிழக என்ஜினீயரிங் கவுன்சிலிங் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள 4 ஆண்டு கட்ஆப் மதிப்பெண்ணுக்கு கிடைத்த கல்லூரி விபரங்களை பார்த்து கொள்வதும் நல்லதாகும்.

    பிளஸ்-2 பொதுத் தேர்வில் கணித வினாத்தாள் கடினம் என்பதால் அதிக மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் தேர்ச்சி விகிதம் குறையவில்லை. எனவே கட்ஆப் அதிகரித்து என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் போட்டியும் அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×