search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    3 மாநிலத்துக்கும் புதுமுக முதல்-மந்திரிகள் தேர்வு? மோடி இல்லத்தில் நடந்த கூட்டத்தில் ஆலோசனை
    X

    3 மாநிலத்துக்கும் புதுமுக முதல்-மந்திரிகள் தேர்வு? மோடி இல்லத்தில் நடந்த கூட்டத்தில் ஆலோசனை

    • ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.
    • மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் முதல்-மந்திரியாக இருக்கிறார்.

    புதுடெல்லி:

    5 மாநில சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது.

    மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.

    3 மாநிலத்தில் பெற்ற வெற்றியால் பா.ஜனதா மிகுந்த உற்சாகம் அடைந்து உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்ற ஆர்வத்தில் உள்ளது.

    இந்த நிலையில் 3 மாநிலத்துக்கும் புதுமுக முதல்-மந்திரிகள் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்-மந்திரி தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அவரது வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மாநில தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். 4½ மணி நேரத்துக்கு மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நீடித்தது. கட்சி தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்வதற்காக புதுமுகம் அவசியம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதனால் புதுமுக முதல்-மந்திரிகள் தேர்வு செய்யப் படலாம் என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

    மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் முதல்-மந்திரியாக இருக்கிறார். அவருக்கு 5-வது முறையாக முதல்-மந்திரி பதவி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் மேலிடம் அவருக்கு மீண்டும் பதவி கொடுக்க தயக்கம் காட்டி வருகிறது.

    Next Story
    ×