search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்காளர் சிறப்பு முகாம்"

    • திருப்பூர் வடக்கு தொகுதியில் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வரும் 25 மற்றும் 26ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.
    • ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், தாசில்தார் மகேஸ்வரன் தலைமை வகித்தார்.

    திருப்பூர்: 

    திருப்பூர் வடக்கு தொகுதியில் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வரும் 25 மற்றும் 26ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் போன்ற பணிகள் நடந்து வருகின்றன. சிறப்பு முகாமுக்கு, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் தயாராகும் வகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், தாசில்தார் மகேஸ்வரன் தலைமை வகித்தார்.

    தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ரம்யா மற்றும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பங்கேற்றனர். வாக்காளரிடம் படிவங்களை கொடுத்து, பூர்த்தி செய்து பெறுவது, தேவையான ஆதார ஆவணங்களை பெற்று இணைப்பது. ஆன்லைனில் அவ்விவரங்களை பதிவேற்றம் செய்யும் முன் சரிபார்க்க வேண்டும். சிறப்பு முகாம் நாட்களில், ஓட்டுச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய சிறப்பு ஏற்பாடுகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. 

    • கடந்த 12, 13-ம் தேதி முதல் கட்டமாகவும் 26, 27 ஆகிய தேதிகளில் 2-ம் கட்டமாகவும் தமிழகம் முழுவதும் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றன.
    • சென்னையில் கடந்த 2 நாட்களாக நடந்த சிறப்பு முகாம்களில் 43 ஆயிரம் பேர் பெயர் சேர்த்தல், திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடந்த 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 01.01.2023 தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி வரைவு வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்கள் பெயர் உள்ளதா என சரி பார்த்துக்கொள்ள அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    பொதுமக்கள் தங்களது பெயர்கள், குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விவரங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா என சரிபார்த்து கொள்ள வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

    மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் 01.01.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் தங்கள் பெயரை சேர்க்கவும் ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு இடம் மாறியவர்கள் திருத்தம், இறந்தவர்கள் மற்றும் 2 இடங்களில் பெயர்கள் உள்ளவர்கள் நீக்கம் செய்யவும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    கடந்த 12, 13-ம் தேதி முதல் கட்டமாகவும் 26, 27 ஆகிய தேதிகளில் 2-ம் கட்டமாகவும் தமிழகம் முழுவதும் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றன.

    சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 3723 வாக்குசாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டன.

    ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள் வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு சென்று நேற்று நடந்த சிறப்பு முகாம்களில் புதிதாக பெயர்களை சேர்த்தனர்.

    சென்னையில் கடந்த 2 நாட்களாக நடந்த சிறப்பு முகாம்களில் 43 ஆயிரம் பேர் பெயர் சேர்த்தல், திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர். புதியதாக சேர 26 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    முதல் கட்ட முகாமில் 23 ஆயிரம் பேர் பங்கேற்று மனுக்கள் கொடுத்தனர். 4 நாட்கள் நடந்த சிறப்பு முகாம்கள் மூலம் மொத்தம் 66,671 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர். புதிதாக பெயர்களை சேர்க்க கோரி மட்டும் 42,707 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    • தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தங்கள் மேற்கொள்வ தற்கான சிறப்பு முகாம்கள் நேற்று, நேற்று முன்தினமும் நடைபெற்றது.
    • 18 வயதானவர்கள், இடம் மாறி சென்றவர்கள் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தங்கள் மேற்கொள்வ தற்கான சிறப்பு முகாம்கள் நேற்று, நேற்று முன்தினமும் நடைபெற்றது.

    இதில் 18 வயதானவர்கள், இடம் மாறி சென்றவர்கள் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் வீர பாண்டி சட்டமன்ற தொகு

    திக்கு உட்பட்ட ஆட்டை யாம்பட்டி, இளம்பிள்ளை, எருமாபா ளையம், நிலவா

    ரப்பட்டி, தாசநா யக்கன்பட்டி உள்ளிட்டபல்வேறு வாக்குச்சாவடி மையங்க ளில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாம்களை வீர பாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ராஜா என்கிற ராஜ

    முத்து நேரில் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம்,

    திருத்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட விண்ணப்பங்கள் முறையாக வழங்கப்படு கிறதா ? அதற்கு தேவையான விண்ணப்பங்கள் போது

    மான அளவு இருப்பில் உள்ளதா? என வாக்குச்சா வடி மைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது ஒன்றிய செயலாளர்கள் வருதராஜ், பாலச்சந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • 1-1-2023-ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற்று வருகிறது.
    • அடுத்த மாதம் 8-ந்தேதி வரை கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளுக்கான படிவங்களான 6, 6A, 6B, 7 மற்றும் 8 வழங்கலாம்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிக்காட்டுதலின்படி 1-1-2023-ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற்று வருகிறது.

    எனவே 18 வயது பூர்த்தியானவர்கள் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், பெயர் நீக்கம், தொகுதி, முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்தல் தொடர்பாக அடுத்த மாதம் 8-ந்தேதி வரை கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளுக்கான படிவங்களான 6, 6A, 6B, 7 மற்றும் 8 வழங்கலாம்.

    மேலும், தங்களது பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் 26 மற்றும் 27-ந்தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இந்த முகாம்களை குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    1-4-2023, 1-7-2023 மற்றும் 1-10-2023 ஆகிய தினங்களை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடையும் இளம் வாக்காளர்கள் தங்கள் பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பொருட்டு பதிவு செய்ய சிறப்பு முகாமில் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வழங்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×