search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு முகாமில் 63 ஆயிரம் பேர் மனு கொடுத்தனர்
    X

    சென்னை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு முகாமில் 63 ஆயிரம் பேர் மனு கொடுத்தனர்

    • கடந்த 12, 13-ம் தேதி முதல் கட்டமாகவும் 26, 27 ஆகிய தேதிகளில் 2-ம் கட்டமாகவும் தமிழகம் முழுவதும் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றன.
    • சென்னையில் கடந்த 2 நாட்களாக நடந்த சிறப்பு முகாம்களில் 43 ஆயிரம் பேர் பெயர் சேர்த்தல், திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடந்த 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 01.01.2023 தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி வரைவு வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்கள் பெயர் உள்ளதா என சரி பார்த்துக்கொள்ள அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    பொதுமக்கள் தங்களது பெயர்கள், குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விவரங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா என சரிபார்த்து கொள்ள வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

    மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் 01.01.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் தங்கள் பெயரை சேர்க்கவும் ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு இடம் மாறியவர்கள் திருத்தம், இறந்தவர்கள் மற்றும் 2 இடங்களில் பெயர்கள் உள்ளவர்கள் நீக்கம் செய்யவும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    கடந்த 12, 13-ம் தேதி முதல் கட்டமாகவும் 26, 27 ஆகிய தேதிகளில் 2-ம் கட்டமாகவும் தமிழகம் முழுவதும் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றன.

    சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 3723 வாக்குசாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டன.

    ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள் வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு சென்று நேற்று நடந்த சிறப்பு முகாம்களில் புதிதாக பெயர்களை சேர்த்தனர்.

    சென்னையில் கடந்த 2 நாட்களாக நடந்த சிறப்பு முகாம்களில் 43 ஆயிரம் பேர் பெயர் சேர்த்தல், திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர். புதியதாக சேர 26 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    முதல் கட்ட முகாமில் 23 ஆயிரம் பேர் பங்கேற்று மனுக்கள் கொடுத்தனர். 4 நாட்கள் நடந்த சிறப்பு முகாம்கள் மூலம் மொத்தம் 66,671 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர். புதிதாக பெயர்களை சேர்க்க கோரி மட்டும் 42,707 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    Next Story
    ×