என் மலர்
இந்தியா

துணை முதல்-மந்திரிக்கு 2 வாக்காளர் அட்டை உள்ளது- தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
- தேர்தல் ஆணையத்தின் சிறப்பு திருத்தம் முழு செயல்முறையும் மோசடியானது.
- வாக்காளர் சிறப்பு திருத்தத்தை திரும்பப் பெற்று தேர்தல் கமிஷனர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
பாட்னா:
ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பீகாரில் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் ஒரு பெரிய மோசடி என்று நாங்கள் பலமுறை கூறி உள்ளோம். பீகாரின் துணை முதல்-மந்திரி விஜய் குமார் சின்காவுக்கு 2 வாக்காளர் அடையாள அட்டை எண்கள் உள்ளன. இவை 2 வெவ்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் இருக்கிறது. ஒன்றில் 57 வயது என்றும் மற்றொன்றில் 60 வயது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் உள்ளது. எனவே யார் மோசடி செய்கிறார்கள் என்பதை மக்கள் இதை அறிந்து கொள்ள வேண்டும். இதில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு திருத்தம் முழு செயல்முறையும் மோசடியானது அல்லது பீகார் துணை முதல்-மந்திரி ஒரு மோசடி செய்துள்ளார் என்பதாகும்.
இவ்விவகாரத்தில் விஜய் சின்கா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், வாக்காளர் சிறப்பு திருத்தத்தை திரும்பப் பெற்று தேர்தல் கமிஷனர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு பிறகும், பீகாரின் துணை முதல்-மந்திரியின் பெயர் 2 இடங்களில் வாக்காளர் பட்டியலில் உள்ளது என்பது இந்த மோசடிக்கு இதைவிட பெரிய உதாரணம் என்ன இருக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.






