search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young man"

    • ஈரோடு மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி வாலிபர், பள்ளி மாணவன் பலியானார்கள்.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வாய்க்கால் தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சிதம்பரநாதன் (42) விவசாயி.

    சிதம்பரநாதன் பழைய ரேடியோ உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை பழுது பார்க்கும் வேலை களை வீட்டிலேயே செய்து வந்தார்.

    இந்நிலையில் சிதம்பர நாதன் வீட்டில் இருந்த பழைய ரேடியோ வயர் இணைப்பு துண்டிக்கப்பட்டதை சரி செய்து கொண்டு இருந்தார். அப்போது சிதம்பரநாதன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    இதில் சிதம்பரநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிதம்பரநாதன் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    இது குறித்து பங்களா ப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர் தவிட்டுப் பாளையம் பகுதியை சேர்ந்த–வர் பாபு. இவரது மனைவி ஆனந்தி. இவர்களுக்கு சபரிஸ்ரீ (13) என்ற மகன் உள்ளார். இவர் தவிட்டுபாளையம் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். ஆனந்தி கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மாணவன் சபரிஸ்ரீ விடுமுறை நாட்களில் அருகே உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் சபரிஸ்ரீ வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அப்போது மின்சார பிளக்கில் வயரை இணைக்க முயன்றார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை மீட்டு அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    மேல் சிகி ச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஈரோட்டில் டாஸ்மாக் கடை அருகே அதிக மதுபோதையில் மயங்கி இறந்து கிடந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
    • இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்த்தவர் மூர்த்தி (38). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மூர்த்தியை விட்டு பிரிந்து அவரது மனைவி 2 குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இதனால் மன வருத்தத்தில் இருந்த மூர்த்தி அடிக்கடி மது குடித்து வந்தார். சம்பவத்தன்று ஜெயகோபால் தெருவில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே அதிக மதுபோதையில் பேச்சு மூச்சு இல்லாமல் மூர்த்தி மயங்கி கிடந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மூர்த்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிவி.ஹோம், தியேட்டரை நொறுக்கிய பக்கத்து வீட்டு வாலிபரால் பரபரப்பு
    • சப்தம் வைத்து சினிமா பார்த்து ரசித்துள்ளார்

    திருச்சி :

    திருச்சி கருமண்டபம் குளக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன்(வயது21). இவரின் வீட்டில் அருகில் கார்த்திக்(27) என்பவர் வசித்துவருகிறார். இந்நிலையில் கங்காதரன் தனது வீட்டு டிவி மற்றும் ஹோம் தியேட்டரில் அதிக அளவு சப்தம் வைத்து சினிமா பார்த்து ரசித்துள்ளார்.

    காதைச் செவிடாக்கும் சப்தத்தால் ஆத்திரமடைந்த கார்த்திக் டிவி சத்தத்தை குறைக்கும்படி கேட்டுக் கொண்டார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. கோபமடைந்த கார்த்திக் அவரது சகோதரர் பாலு ஆகியோர் சேர்ந்து கங்காதரன் வீட்டிலிருந்த டிவி, மற்றும்

    ஹோம் தியேட்டரை அடித்து நொறுக்கினர். இதில் கங்காதரன் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் வாலு ஆகிய இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • சிங்கம்புணரி அருகே பைக்கில் சென்ற வாலிபர் பாலத்தில் மோதி பலியானார்.
    • சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்கம்புணரி

    சிதம்பரம் ஆயக்குடியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் கார்த்திக் (வயது 22). இவர் சிங்கம்புணரி அருகே உள்ள ஒடுவன்பட்டியில் தனது பெரியம்மா இல்ல நிகழ்ச்சிக்கு வந்தார். பெரியம்மா மகன் அருண்குமாருடன் சிங்கம்புணரி வங்கியில் பண பரிவர்த்தனைக்காக சென்றனர்.

    அதற்கான ஆவணம் தேவைப்பட்டதால் கார்த்திக் மட்டும் இருசக்கர வாகனத்தில் ஒடுவன்பட்டி நோக்கி சென்றார். அதிவேகமாக பைக்கில் வந்த கார்த்திக் அணைக்கரைப்பட்டி பாலாற்றில் அமைந்துள்ள பாலத்தில் எதிர்பாராத விதமாக மோதியதில் படுகாயம் அடைந்தார்.

    உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    பின்னர் கார்த்திக்கை சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கார்த்திக் இறந்து விட்டதாக கூறினர்.

    சிங்கம்புணரி காவல்துறையினர் கார்த்திக்கின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமலைக்கு சுற்றுலா சென்று வந்தவர் திடீரென இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே திருமலாபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் சசிக்குமார்(27). இவர் தனது நண்பர்களுடன் திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தபின்னர் அவர்கள் மாலை வீடு திரும்பியுள்ளனர்.

    அப்போது சசிக்குமார் முதுகு வலிப்பதாக கூறி வாந்தி எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சசிக்குமாரை போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சசிக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து போடி நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இறந்த நபருக்கு ஏற்கனவே அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது.

    எனவே குளிர்ச்சியான சூழலுக்கு சென்றதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தற்கொலை செய்த வாலிபர் காதல் திருமணம் செய்தவர்.
    • குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தேவர்குளம் அருகே உள்ள முத்தையாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவரது மகன் ரவிக்குமார்(வயது 29).

    இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மாவட்டத்தில் நூற்பாலை ஒன்றில் வேலை பார்த்தபோது அங்கு வேலை பார்த்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தேவர்குளம் போலீசார் அங்கு விரைந்து சென்று ரவிக்குமார் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ரவிக்குமார் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்ததோடு குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

    கடந்த 2 நாட்களாக தனது செல்போனில் 'வாட்ஸ்-அப்'பில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஸ்டேட்டஸ் வைத்துள்ளார் என்ற விபரம் தெரியவந்தது.

    எனவே அவர் அதன் காரணமாக தான் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    • தச்சநல்லூர் அருகே உள்ள சேந்திமங்கலத்தில் மாயமான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • கடந்த 9-ந்தேதி காலை வீட்டை விட்டு வெளியேறினார்.

    நெல்லை:

    தச்சநல்லூர் அருகே உள்ள சேந்திமங்கலம் பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து(வயது 34).

    கடந்த 9-ந்தேதி காலை வீட்டை விட்டு ெவளியே சென்ற அவர் இரவு வெகுநேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மகாலெட்சுமி தச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிமுத்துவை தேடி வருகின்றனர்.

    • சரிவர வேலைக்கு வராததால் சமீபத்தில் அவரை வேலையை விட்டு நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
    • சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    நெல்லை:

    பாளையை அடுத்த சிவந்திபட்டி அருகே உள்ள முத்தூர் நடுத்தெருவை சேர்ந்தவர் அழகப்பன் (வயது 23). இவர் அங்குள்ள தானியக் கிடங்கில் வேலை பார்த்து வந்தார்.

    அவர் சரிவர வேலைக்கு வராததால் சமீபத்தில் அவரை வேலையை விட்டு நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அழகப்பன் யாரிடமும் பேசாமல் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். கடந்த 7-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    இது தொடர்பாக சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர்-முதியவர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • கிணற்றில் விழுந்து மற்றும் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அப்பயநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 34). இவரது மனைவி கிருஷ்ணம்மாள். கருப்பசாமி தினமும் மது குடித்து விட்டு வந்ததால் கிருஷ்ணம்மாள் கண்டித்துள்ளார். இதை தொடர்ந்து வெளியில் சென்ற கருப்பசாமி அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி (வயது 68). இவர் நோயால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மன வேதனை அடைந்த அவர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அவரது மகன் புஷ்பராஜ் ஆவியூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை ெரயில் நிலைய வளாகத்தில் சுவரில் தலையை மோதி வாலிபர் தற்கொலை செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    ஆரப்பாளையம் மஞ்சள் மேடு காலனியை சேர்ந்த மாரியப்பன் மகன் காளிதாஸ் மாரிமுத்து(37). இவர் மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

    சம்பவத்தன்று இவர் மதுரை ெரயில் நிலைய கிழக்கு நுழைவுவாயில் சுவற்றில் தனக்குத்தானே பலமாக மோதிக்கொண்டார். தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் சொட்ட, சொட்ட உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காளிதாஸ் மாரிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தாயார் கருப்பாயி அம்மாள் திலகர் திடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் முதல் தெரு, சோனையா கோவில் சந்து பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகள் சர்மிளா (14).

    இவர் சில தினங்களாக மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். வீட்டில் தனியாக இருந்தபோது சர்மிளா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீக்குளிக்க முயன்ற வாலிபரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
    • மனவேதனை அடைந்த மாரிமுத்து இன்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்

    மதுரை

    மதுரை ஆண்டார் கொட்டாரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 33). இவரது நிலத்தை யாரோ சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக மாரிமுத்து ஏற்கனவே சிலைமான் போலீஸ் நிலையம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்து உள்ளார். ஆனாலும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் மனவேதனை அடைந்த மாரிமுத்து இன்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அலுவலக வளாகத்தில் வைத்து மறைத்து வைத்து கொண்டு வந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை அருகில் நின்றவர்கள் பார்த்ததும் அவரை தடுத்து நிறுத்தி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் அவரிடம் நிலம் ஆக்கிரமிப்பு பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது. அப்போது அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் போலீசார், நுழைவு வாயிலில் பலத்த சோதனை நடத்தி, அதன்பிறகே பொதுமக்களை வளாகத்தில் அனுமதித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போலீசாரின் சோதனைகளையும் மீறி, வாலிபர் மாரிமுத்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலைக்கு முயன்றார்.
    • ரத்தம் சிந்திய நிலையில் அவசர சிகிச்சை பிரிவு பகுதிக்கு நடந்து வந்தார்.

    உசிலம்பட்டி

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா பாலக்கோம்பை ராய வேலூரைச் சேர்ந்தவர் ராமன். இவரது மகன் பெருமாள் (வயது 35). இவர் இன்று காலை உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தனது கழுத்தை அறுத்து ரத்தம் சிந்திய நிலையில் அவசர சிகிச்சை பிரிவு பகுதிக்கு நடந்து வந்தார்.

    செவிலியர்கள், டாக்டர்கள் உடனடியாக அவருக்கு சிகிச்சை அளித்தனர். எதற்காக அவர் தற்கொலைக்கு முயன்றார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வாலிபர் ஒருவர் ஆஸ்பத்திரி வளாகத்தில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×