என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுவரில் தலையை மோதி வாலிபர் தற்கொலை
- மதுரை ெரயில் நிலைய வளாகத்தில் சுவரில் தலையை மோதி வாலிபர் தற்கொலை செய்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மதுரை
ஆரப்பாளையம் மஞ்சள் மேடு காலனியை சேர்ந்த மாரியப்பன் மகன் காளிதாஸ் மாரிமுத்து(37). இவர் மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
சம்பவத்தன்று இவர் மதுரை ெரயில் நிலைய கிழக்கு நுழைவுவாயில் சுவற்றில் தனக்குத்தானே பலமாக மோதிக்கொண்டார். தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் சொட்ட, சொட்ட உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காளிதாஸ் மாரிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தாயார் கருப்பாயி அம்மாள் திலகர் திடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் முதல் தெரு, சோனையா கோவில் சந்து பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகள் சர்மிளா (14).
இவர் சில தினங்களாக மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். வீட்டில் தனியாக இருந்தபோது சர்மிளா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.