search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிடந்த"

    • வண்ணார்காடு பகுதியில், நேற்று விவசாயநிலத்தில் 2 ஆண்மயில் மற்றும் 2 பெண்மயில் என நான்கு மயில்கள் உயிரிழந்து கிடந்தது.
    • மேலும் ஒரே நேரத்தில் 4 மயில்கள் உயிரிழந்ததால், அப்பகுதியில் உள்ள யாரேனும் மயில்களுக்கு விஷம்வைத்து கொன்றார்களா?

    எடப்பாடி:

    எடப்பாடி அடுத்த குரும்பபட்டி ஊராட்சிக்குட்பட்ட, நாச்சியூர் அடுத்த வண்ணார்காடு பகுதியில், நேற்று விவசாயநிலத்தில் 2 ஆண்மயில் மற்றும் 2 பெண்மயில் என நான்கு மயில்கள் உயிரிழந்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அலுவலர்கள், மயில்களின் உடலினை கைப்பற்றி , கொங்கணாபுரம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் ஒரே நேரத்தில் 4 மயில்கள் உயிரிழந்ததால், அப்பகுதியில் உள்ள யாரேனும் மயில்களுக்கு விஷம்வைத்து கொன்றார்களா? மேலும் புதர்பகுதியில் மயில்கள் இறந்து கிடக்கின்றனவா? என வனவர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    தேசியபறவையான மயில்கள் மர்மமான முறையில் இறந்துகிடந்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • பெருந்துறை அருகே டாஸ்மாக் கடை அருகே இறந்து கிடந்த தொழிலாளி சாவில் சந்தேகம் இருப்பதாக சகோதரி போலீசில் புகார் தெரிவித்தார்.
    • இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே தலையம்பாளையம் நடுத்தோ–ட்டத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (42). கூலி தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி.

    வேலுச்சாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி மகாலட்சுமி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து வேலுச்சாமி பெற்றோருடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் வேலுச்சாமி கடந்த 2 நாட்க ளுக்கு முன்பு பெருந்துறை அடுத்த சீனாபுரம் டாஸ்மாக் மதுக் கடைக்கு மது குடிக்க சென்றுள்ளார். அப்போது வேலுச்சாமிக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வேலுச்சாமி டாஸ்மாக் மதுக்கடை அருகே மர்ம மான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து தனது அண்ணன் சாவில் மர்மம் இருப்பதாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலுச்சாமி யின் தங்கை சித்ரா பெருந்துறை போலீசில் புகார் செய்தார்.

    இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    • ஈரோட்டில் டாஸ்மாக் கடை அருகே அதிக மதுபோதையில் மயங்கி இறந்து கிடந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
    • இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்த்தவர் மூர்த்தி (38). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மூர்த்தியை விட்டு பிரிந்து அவரது மனைவி 2 குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இதனால் மன வருத்தத்தில் இருந்த மூர்த்தி அடிக்கடி மது குடித்து வந்தார். சம்பவத்தன்று ஜெயகோபால் தெருவில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே அதிக மதுபோதையில் பேச்சு மூச்சு இல்லாமல் மூர்த்தி மயங்கி கிடந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மூர்த்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாகனத்தில் அடிபட்டு கிடந்த புள்ளிமானை மீட்ட சிறுவர்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடியைச் சேர்ந்த ஆங்கில மருந்துக்கடை உரிமையாளர் முகமது இப்ராகிம். இவரது மகன்கள் ஷிஃபாக் அஹ்மத், அல்ஃபார் அஹ்மத் சிறுவர்களான இருவரும், 2 நாட்களுக்கு முன், பெற்றோருடன் காரில் நாமக்கல் பகுதியில் திருமணத்திற்கு சென்றனர்.

    நாமக்கல் சுங்கச்சாவடி அடுத்த வேலக வுண்டம்பட்டி அருகே நெடு ஞ்சாலையில் சென்று கொண்டி ருந்தபோது, வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்து சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் குட்டி ஓன்று அவ்வழியாக சென்ற வாகனம் மோதியதில் கால்கள் முறிந்து படுகாயமடைந்த நிலையில் சாலையிலேயே கிடந்துள்ளது.

    இதனைக் கண்ட சிறுவர்கள் இருவரும், காரை நிறுத்தி புள்ளிமானை மீட்டு அவ்வழியாக சென்ற 108 அவரச சிகிச்சை வாகனத்தில் இருந்து மருந்துகளை கொண்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து புள்ளிமானை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    புள்ளிமானை பெற்றுக்கொண்ட வனத்துறையினர் சிறுவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். புள்ளிமானை நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்று மேல்சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துச் சென்றனர்.

    ×