search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "schoolboy"

    • கோவிந்தன் (56). இவரது மகன் நந்தீஸ்வரன் (14). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • சித்தையன், மகன் நந்தீஸ்வரன் ஆகியோருடன் எடப்பாடி அருகே உள்ள பெரிய ஏரிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஆலச்சம்பாளையம் மணியக்காரன் வளவு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (56). இவரது மகன் நந்தீஸ்வரன் (14). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் கோவிந்தன் நேற்று முன்தினம் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த சித்தையன், மகன் நந்தீஸ்வரன் ஆகியோருடன் எடப்பாடி அருகே உள்ள பெரிய ஏரிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்.

    அங்குள்ள ஏரிக்கரையில் மகனை அமர வைத்துவிட்டு நண்பர் சித்தையனுடன் கோவிந்தன் ஏரிக்குள் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    மாயம்

    மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய கோவிந்தன் அங்கே மகனை காணாமல் திடுக்கிட்டார். பின்னர் தனது உறவினர்களுடன் ஏரிக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேடினார்.

    எங்கு தேடியும் நந்தீஸ்வரன் கிடைக்காத நிலையில் இது குறித்து கோவிந்தன் எடப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவன் நந்தீஸ்வரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • திறமையாக சைக்கிளை ஓட்டி மாணவர் அங்கு நின்றிருந்த மாணவிகள் மட்டுமல்லாது பொது மக்களையும் கவர்ந்தார்.
    • சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு தகுந்த அறிவுரையை சொல்ல வேண்டும் என பஸ்சுக்கு நின்றிருந்த பலரும் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடும் வெயில் காரணமாக கோடை விடுமுறை 9 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

    இந்த விடுமுறைக்கு மாற்றாக சனிக்கிழமைகளில் முழு நாளும் புதுவை மற்றும் காரைக்காலில் பள்ளிகள் இயங்குகின்றன. அந்த வகையில் நேற்று சனிக்கிழமை பள்ளிகள் இயங்கியது.

    மாலை பள்ளி முடிந்து வீடு திரும்ப புதுவை- கடலூர் சாலையில் மாணவ-மாணவிகள் பஸ்சுக்கு காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பள்ளி மாணவர் ஒருவர் திடீரென தனது சைக்கிளில் சாகசம் செய்ய தொடங்கினார்.

    பஸ்சுக்கு காத்திருந்த மாணவிகளை கவரும் வகையில் கையை விட்டு ஓட்டுவது, முன் சக்கரத்தை தூக்கி ஓட்டுவது, ஹாண்டில் பாரில் சாய்ந்தபடி செல்வது என கெத்து காட்டினார்.

    திறமையாக சைக்கிளை ஓட்டி மாணவர் அங்கு நின்றிருந்த மாணவிகள் மட்டுமல்லாது பொது மக்களையும் கவர்ந்தார்.

    ஆனாலும், மிகவும் பரபரப்பான புதுவை - கடலூர் சாலையில் சைக்கிள் சாகம் செய்வது ஆபத்தானது. கெத்து காட்டி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் பெற்றோர் மனம் என்னவாகும்?

    எனவே, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு தகுந்த அறிவுரையை சொல்ல வேண்டும் என பஸ்சுக்கு நின்றிருந்த பலரும் தெரிவித்தனர்.

    இதனிடையே மாணவனின் சைக்கிள் சாகச வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

    • கிரி பிரம்மதேசம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • விவசாய கிணற்றில் கிரி பிணமாக மிதந்தான்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ்அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேல். இவரது மகன் கிரி (வயது13) இவர் பிரம்மதேசம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை அதே பகுதியில் உள்ள கல் குவாரியில் வேலை செய்து வருகிறார். தாய் மாலாவும் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் தனியாக இருந்த கிரி திடீரெனமாயமானார். அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் கிராமம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் நேற்று மாலை பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர், இந்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் சிறுவனை தேடி வந்த நிலையில் இன்று காலை அதேகிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் கிரி பிணமாக மிதந்தான்.இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போன சிறுவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • இளவரசன் சங்கராபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • போலீசார் மூரார்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருேக கெட்டுவன்னஞ்சூரை சேர்ந்தவர் துரை. அவரது மகன் இளவரசன் (வயது17). இவர் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் சங்கராபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், திடீரென கத்தியை காட்டி மிரட்டி இளவரசனிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசி ம்மஜோதி தலைமையிலான போலீசார் மூரார்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் மறித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கள்ளக்குறிச்சி தாலுகா, புக்கிரவாரியை சேர்ந்த அய்யப்பன் (23) மற்றும் 16 வயது சிறுவன் என்பதும், இளவரசனிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அய்யப்பன் மற்றும் சிறுவனை கைது செய்த போலீசார், செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவனை செஞ்சி சீர்திருத்த பள்ளியில் சேர்க்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • பள்ளியில் உணவு இடைவெளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் சாப்பாடு கொண்டு செல்லும் போது 9-ம் வகுப்பு மாணவன் மீது எதிர்பாராமல் பட்டுவிட்டது.
    • மறுநாள் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் 11 ஆம் வகுப்பு மாணவனை தாக்கியதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அருகே ஆடுர்குப்பம் சேர்ந்தவர் 15 வயது மாணவன். இவர் கடலூர் அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளியில் உணவு இடைவெளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் சாப்பாடு கொண்டு செல்லும் போது 9-ம் வகுப்பு மாணவன் மீது எதிர்பாராமல் பட்டுவிட்டது. இதனால் இரு மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவனை அடித்ததாக கூறப்படுகிறது.

    அதனை தொடர்ந்து மறுநாள் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் 11 ஆம் வகுப்பு மாணவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த முன் விரோத காரணமாக கடலூரில் இருந்து குறிஞ்சிப்பாடிக்கு அரசு பஸ்சில் 9-ம் வகுப்பு மாணவன் செல்லும்போது அடையாளம் தெரியாத 8 நபர்கள் அரசு பஸ்ருசில் இருந்து இறக்கி சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த 9-ம் வகுப்பு மாணவன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து 8 நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • ஈரோடு மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி வாலிபர், பள்ளி மாணவன் பலியானார்கள்.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வாய்க்கால் தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சிதம்பரநாதன் (42) விவசாயி.

    சிதம்பரநாதன் பழைய ரேடியோ உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை பழுது பார்க்கும் வேலை களை வீட்டிலேயே செய்து வந்தார்.

    இந்நிலையில் சிதம்பர நாதன் வீட்டில் இருந்த பழைய ரேடியோ வயர் இணைப்பு துண்டிக்கப்பட்டதை சரி செய்து கொண்டு இருந்தார். அப்போது சிதம்பரநாதன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    இதில் சிதம்பரநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிதம்பரநாதன் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    இது குறித்து பங்களா ப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர் தவிட்டுப் பாளையம் பகுதியை சேர்ந்த–வர் பாபு. இவரது மனைவி ஆனந்தி. இவர்களுக்கு சபரிஸ்ரீ (13) என்ற மகன் உள்ளார். இவர் தவிட்டுபாளையம் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். ஆனந்தி கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மாணவன் சபரிஸ்ரீ விடுமுறை நாட்களில் அருகே உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் சபரிஸ்ரீ வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அப்போது மின்சார பிளக்கில் வயரை இணைக்க முயன்றார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை மீட்டு அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    மேல் சிகி ச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×