என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மிரட்டல்"
- கன்னியாகுடி ரெயில்வே கேட் பகுதிக்கு சைக்கிளில் பணிக்கு சென்று கொண்டிருந்தார்.
- 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே கன்னியாகுடி பகுதியில் ரயில்வே கேட் கீப்பராக பணியாற்றி வருபவர் கேரள மாநிலம் அயன்சேரி பகுதியை சேர்ந்த விஜின் (வயது 40).இவர் கடந்த 12-ம் தேதி தான் தங்கியுள்ள வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் இருந்து கன்னியாகுடி ரயில்வே கேட் பகுதிக்கு பணிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருப்புங்கூர் ரைஸ்மில் அருகே விஜின் சைக்கிளில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் விஜினை வழிமறித்து அவரை மிரட்டி தங்களது வாகனத்தில் ஏற்றிக் கொண்டனர். அதில் ஒருவர் விஜினின் சைக்கிளையும் எடுத்துச் சென்றார். ஆள் இல்லாத காட்டுப் பகுதியில் விஜினை மிரட்டி அவரிடம் இருந்த பணம் ரூ 2 ஆயிரத்து 400 மற்றும் அவரது செல்போனை பிடுங்கி தங்களுக்கு போன் பே மூலம் பணம் செலுத்த சொல்லி மிரட்டி ரூபாய் 6 ஆயிரம் போன் பே செய்துக்கொண்டு சைக்கிளையும் எடுத்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இது குறித்து விஜின் வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர். இதில் வைத்தீஸ்வரன் கோயில் அருகே புலவனூர் பகுதியைச் சேர்ந்த கவியரசன்,அபிஷேக் மற்றும் கடலூர் தர்மநல்லூர் பகுதியை சேர்ந்த ஜெயகாந்தன் ஆகிய 3 பேரும் விஜினை கடத்தி சென்று வழிப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கைதான பட்டதாரி வாலிபர் நாகர்.ஜெயிலில் அடைப்பு
- ஆபாசமாக மார்பிங் செய்யும் சம்பவங்கள் நடந்து வருகிறது. பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றனர்.
நாகர்கோவில் :
தக்கலை அருகே மண லிக்கரை புதூர் கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டான்லி பிரின்ஸ் (வயது 32), பி.ஏ.பி.எட் பட்டதாரி.
இவர் நாகர்கோவிலில் உள்ள கவரிங் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அந்த கடைக்கு தக்கலை பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் அடிக்கடி வந்து சென்றார். இதையடுத்து ஸ்டான்லி பிரின்சுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்ப ட்டது. இருவரும் காதலித்து வந்தனர்.
பின்னர் ஸ்டாலின் பிரின்ஸ், இளம் பெண்ணை ஒரு கோவிலிலுக்கு அழைத்து சென்று மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார். கணவன்-மனைவி இருவரும் கருங்கல் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். திருமணம் முடிந்த சில நாட்களில் ஸ்டான்லி பிரின்சின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த இளம் பெண் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஸ்டான்லி பிரின்ஸ் அந்த பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்த ரித்து அவரது செல்போன் எண்ணிற்கு அனுப்பினார். தன்னுடன் குடும்ப நடத்த வரவில்லை என்றால் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடு வதாகவும் மிர ட்டினார்.
இது குறித்து இளம்பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ஸ்டா ன்லி பிரின்ஸ் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 28 வயது கல்லூரி பேராசிரியர் ஒருவரும் கவரிங் கடையில் நகை ஆர்டர் கொடுத்துள்ளார். அந்த நகை தான் அணிந்தி ருக்கும் நகை மாடலை போன்று இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தனது திருமண போட்டோவை ஸ்டான்லி பிரின்ஸ் வாட்ஸ் அப் எண்ணிற்கு பேராசி ரியர் அனுப்பி உள்ளார்.
இந்த நிலையில் ஸ்டான்லி பிரின்ஸ் வாட்ஸ் அப் மூலம் பேராசிரியருக்கு மெசேஜ் அனுப்பி உள்ளார். இதை கண்டித்ததால் ஆத்தி ரம் அடைந்த ஸ்டான்லி பிரின்ஸ், பேராசிரியர் போட்டோவை மார்பிங் செய்து அவரது வாட்ஸ் அப்பிற்கு அனுப்பினார். என்னிடம் பேசாவிட்டால் ஆபாச போட்டோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இது தொடர்பாக ஸ்டான்லி பிரின்ஸ் மீது பேராசிரியரும் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் ஸ்டான்லி பிரின்ஸ் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று ஸ்டான்லி பிரின்சை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஸ்டா ன்லி பிரின்சிடம் போலீசார் விசாரணை மேற்கொ ண்டனர். ஸ்டான்லிபிரின்ஸ் வேறு ஏதாவது பெண்க ளுக்கு ஆபாச படங்களை சித்தரித்து சமூக வலைதள ங்களில் அனுப்பி உள்ளா ரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொ ண்டனர். இதற்கிடையில் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.
சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், புகைப்பட ங்களை மார்பிங் செய்து மிரட்டல் விடுத்தால் உடனடியாக போலீசில் புகார் செய்தால் நடவடி க்கை எடுக்கப்படும். பெண்கள் தங்களது புகை ப்பட ங்களை அறிமுகம் இல்லாத நபர்களுக்கு அனுப்பி வைப்பதை தவிர்க்க வேண்டும். புகைப்படங்களை வைத்து ஆபாசமாக மார்பிங் செய்யும் சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றனர்.
- முசிறியில் இளைஞர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- முசிறி போலீசார் நடவடிக்கை
முசிறி,
திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த உமையாள்புரம் கிராமத்தை சேர்ந்த பாலகுமார் மகன் ராகுல் (வயது 20). இவர் அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகில் அமர்ந்து இருந்தபோது, உமையாள்புரம் கீழத்தெருவை சேர்ந்த கௌரிதாசன் (28), புதுராஜா (33) ஆகிய இருவரும் குடிபோதையில் ராகுலை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர். இதனை கண்டி ராகுலின் அண்ணன் ராஜேஷ் தடுத்துள்ளார். அவரை கெளரிதாசன் மற்றும் புதுராஜா இருவரும் சேர்ந்து குவாட்டர் பாட்டிலால் தாக்கியும், மேலும் உடைந்த பாட்டிலில் ராகுலின் உடலில் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ராகுல் முசிறி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் கௌரி ராஜன் மற்றும் புதுராஜா கைது செய்யப்பட்டனர்.
- குர்பத்வர்த் சிங் பன்னூன் மீண்டும் ஒரு மிரட்டல் விடுத்துள்ளார்.
- கைது செய்பவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பான சீக்கியவர்களுக்கான நீதி அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் பன்னூன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், ஏர்-இந்தியா விமானங்களுக்கு மிரட்டல் விடுத்தார்.
இந்த நிலையில் குர்பத்வர்த் சிங் பன்னூன் மீண்டும் ஒரு மிரட்டல் விடுத்துள்ளார். அதில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணையில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக, ஏர்-இந்தியாவை புறக்கணிப்பதை பயங்கரவாத அச்சுறுத்தலுடன் தொடர்புப் படுத்தி கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா பொய் பிரசாரம் செய்கிறார். எனவே அவரை கைது செய்பவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
- அரியலூர் ஊராட்சி குழு தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
- போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
அரியலூர்,
அரியலூர் அருகே பொய்யாதநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்சந்திரசேகர்.எம்.ஏ. பட்டதாரி, கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை எதிர்த்து அ.தி.மு.க.வில் போட்டியிட்டு, தோல்வியடைந்தார், பின்னர் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாவட்ட ஊராட்சிகுழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது சொந்தஊரான பொய்யாதநல்லூரில் கோவில் பிரச்சனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது.அரியலூர் ரயில்வே ஸ்டேசன் செல்லும் வழியில் சொந்தமான லாட்ஜில் அவர் இருந்துள்ளார். அப்போது 3 பேர் அங்கு வந்துள்ளனர். சந்திரசேகரையும் அவரது டிரைவர்ராக்கியையும் தாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இது சம்பந்தமாக சந்திரசேகர்கொடுத்த புகாரின் பேரில் செல்லக்கண்ணு, விக்கி என்கிற விக்னேஸ்வரன், சக்தி ஆகிய 3 பேர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டு உள்ளது. இதே போல செல்லக்கண்ணு என்பவர்கொடுத்த புகாரின் பேரில் சந்திரசேகர், ராக்கி ஆகிய இருவர்மீதும் வழக்கு பதிவு செய்து அரியலூர் போலீசார்விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதுக்கோட்டை செல்வதற்காக ஆடுதுறையில் இருந்து ரெயிலில் ஏறி தஞ்சாவூரில் இறங்கினார்.
- அப்பாஸை கத்தியை காட்டி மிரட்டி பணம் கொடுக்குமாறு கூறினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்தவர் அ.அப்பாஸ் (வயது 51). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று புதுக்கோட்டை செல்வதற்காக ஆடுதுறையில் இருந்து ரெயிலில் ஏறி தஞ்சாவூரில் இறங்கினார். பின்னர் அங்கிருந்து புதிய பஸ் நிலையம் செல்வதற்காக இரவில் மேரீஸ் கார்னர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார் . இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நான்கு பேர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து இறங்கினர்.
பின்னர் அப்பாஸை கத்தியை காட்டி மிரட்டி பணம் கொடுக்குமாறு கூறினார். அதற்கு அவர் கொடுக்க மறுத்தார். உடனே நான்கு பேரும் சேர்ந்து அப்பாஸின் சட்டைப்பாக்கட்டில் இருந்து ரூ.6500 ரொக்கம் மற்றும் செல்போனை பறித்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து அப்பாஸ் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர் . இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அதே ஊரை சேர்ந்தவர் இளங்கோ (50), ஓரையூர் பஞ்சாயத்து துணைத் தலைவராக உள்ளார்.
- பஞ்சாயத்து துணைத் தலைவர் இளங்கோ, சுரேஷை மிரட்டியதாக கூறப்படுகிறது.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த ஓரையூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவர் மினி பஸ் டிரைவர், அதே ஊரை சேர்ந்தவர் இளங்கோ (50), ஓரையூர் பஞ்சாயத்து துணைத் தலைவராக உள்ளார். இவர்களுக்குள் மினி பஸ் டைமிங் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இவர்களுக்குள் மினி பஸ் டைமிங் குறித்து மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஓரையூர் பஞ்சாயத்து துணைத் தலைவர் இளங்கோ, சுரேஷை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் பஞ்சாயத்து துணை தலைவர் இளங்கோ மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.கே. நகர்,
திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை, மலேசியா, மஸ்கட் ஓமன் துபாய், சிங்கப்பூர், உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளுக்கும் அதே போன்று பெங்களூர் சென்னை புதுடெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நாள்தோறும் 34 விமான சேவைகள் உள்ளதால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளும் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் இன்று அதிகாலை 2.32 மணிக்கு திருச்சி விமான நிலைய முனைய மேலாளர் தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது.
சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சங்கீதா வேலப்பன் என்ற பெண் அந்த மெசேஜை அனுப்பியிருந்தார். அதில் அவர் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் 34 விமானங்களில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் இருப்பதாகவும் உடனடியாக சோதனை மேற்கொள்ளுங்கள் என மிரட்டல் விடுக்கும் வகையில் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் வெடிகுண்டு நிபுணர்களுடன் விமான நிலையம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
ஆயினும் வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. இதை தொடர்ந்து வாட்சப் மெசேஜ் அனுப்பிய சங்கீதா வேலப்பனிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது.
இதையடுத்து அவர் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது. ஏற்கனவே கடந்த சில மாதங்களூக்கு முன்பு இதுபோன்று மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சவுந்தர்யா சென்ைனயில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
- சவுந்தர்யா இன்று பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்
கடலூர்:
பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் சூர்யா (வயது 26 ) சிவில் என்ஜியர் இவரது மனைவி சவுந்தர்யா (24). இவர் சென்ைனயில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்களுக்கு திருமணமாகி ஓர் ஆண்டு ஆகிறது. திருமணமான ஒரு சில நாட்களிலிருந்து கணவர் சூர்யா மற்றும் சூர்யாவின் தந்தை ஏழுமலை தாய் கலைமணி, சகோதரர்கள் லோகேஷ் ,சர்வேஷ் ஆகியோர்கள் வரதட்சணையாக ரூ.10 லட்சம் பணம் கேட்டு சவுந்தர்யாவை ஆபாசமாக திட்டி காரை ஏற்றிக் கொன்று விடுவதாக மிரட்டி வாழவிடாமல் வீட்டை விட்டு துரத்தி விட்டதாக சவுந்தர்யா இன்று பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வள்ளி செய்து சவுந்தர்யாவின் கணவர், மாமனார், மாமியார், கொழுந்தனார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- போட்டோ எடுக்க முயன்றபோது ரவிபிரகாஷ் மீது கல்வீசி தாக்கினர்
- கோவையில் ரகளையில் ஈடுபட்ட 3 திருநங்கைகள் கைது
கோவை,
கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவிபிரகாஷ் (வயது 31). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் ரவிபிரகாஷ் சம்பவத்தன்று இரவு சாய்பாபாகாலனியில் உள்ள ஓட்டலுக்கு உணவு வாங்க சென்றார். அப்போது அவரது செல்போனை யாரோ சிலர் அபேஸ் செய்து விட்டனர்.
எனவே அதிர்ச்சி அடைந்த ரவிபிரகாஷ் உடனடியாக சாய்பாபா காலனி போலீசில் புகார் அளிக்க சென்றார்.
அங்கு போனின் ஐ.எம்.இ.ஐ நம்பர் வேண்டும் என்று போலீசார் கேட்டு உள்ளனர். எனவே ரவிபிரகாஷ் வேறு வழியின்றி வீடு திரும்பினார்.
இந்தநிலையில் அவர் தொலைந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டார். அப்போது மறுமுனையில் பேசியவர், உன் போன் என்னிடம் தான் உள்ளது. ரூ.10 ஆயிரம் உடன் வா என்று நிபந்தனை விதித்து உள்ளார்.
தொடர்ந்து ரவிபிரகாஷ் பூ மார்கெட்டுக்கு சென்றார். அங்கு 3 திருநங்கைகள் இருந்தனர். அவர்கள் ரூ.10 ஆயிரம் கேட்டனர். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என ரவிபிரகாஷ் கூறினார்.
அப்போது ரூ.3000 கொடுத்து விட்டு போனை வாங்கி செல் என்று மிரட்டினார்கள். ரவிபிரகாஷ் ரூ.1500 தருவதாக கூறியும் ஒப்புக்கொள்ளவில்லை.
எனவே அவர் 3 பேரையும் போட்டோ எடுக்க முயன்றார். அப்போது அவர்கள் ரவிபிரகாஷ் செல்போனை ரோட்டில் வீசியெறிந்து கல்வீசி தாக்கி விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடித்து வந்து விசாரித்தனர். இதில் அவர்கள் ரவிபிரகாஷ் செல்போனை திருடி ரூ.10 ஆயிரம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. தொடர்ந்து 3 திருநங்கைளையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.