search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "threatened to kill"

    • பொக்லைன் எந்திரம் பறிமுதல்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி, அம்பலூர், கொடையாட்சி, உதயேந்திரம், சி.வி.பட்டறைபகுதிகளில் தொடர்ந்து மணல் கடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இந்த நிலையில் வாணியம்பாடி அடுத்த தேங்காய்பட்டறை பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி கடத்தப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு புகார் வந்தது.

    அவரது உத்தரவின்பே ரில் வாணியம்பாடி தாசில்தார் மோகன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் அளிக்கப் பட்ட வீட்டுமனை பகுதிக்கு அருகே 10 அடி ஆழம் வரையில் தோண்டப்பட்டு அதிலிருந்து மணல் கடத்தப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து தாசில்தார் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டார்.

    அப்போது டிரைவர் பிரகாசம் மற்றும்துறையேரி பகுதியை சேர்ந்த வி.சி.அன்பரசு, அவரது தம்பி சிவக்குமார் ஆகியோர் பொக்லைன் எந்திரத்தை ஏன் பறிமுதல் செய்கிறாய் என கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் தாசில்தார் வந்த ஜீப்பை தடுத்து நிறுத்தி போக விடாமல் தடுத்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரத்தை வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் ஆகியோருடன் இணைந்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தார்.

    மேலும் அன்பரசு, சிவக்குமார் மற்றும் டிரைவர் பிரகாசம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேவஸ்தா னம் கிராம நிர்வாக அலுவலர் மீரா வாணி யம்பாடி தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் தாதம்பட்டியை சேர்ந்த மொட்டையன் (22), அருள் (26) ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
    • இதுகுறித்து மணிகண்டன் வீராணம் போலீசில் புகார் அளித்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள கோரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவரை சேலம் தாதம்பட்டியை சேர்ந்த மொட்டையன் (22), அருள் (26) ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மணிகண்டன் வீராணம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.சேலம் தாதம்பட்டியை சேர்ந்த மொட்டையன் (22), அருள் (26) ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மணிகண்டன் வீராணம் போலீசில் புகார் அளித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே முடியனுர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 57) விவசாயி, இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் வேலு என்பவருக்கும் வீட்டுமனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில் சம்பவத்தன்று ராமச்சந்திரன் தனது விவசாய நிலத்துக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது மாரியம்மன் கோவில் தெரு அருகே வந்தபோது வேலு, அவரது மனைவி அய்யம்மாள், மகன் விஜி மற்றும் உறவினர் கேசவேலு ஆகியோர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி வளர்மதி (50) ஆகியோரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதில் காயமடைந்த ராமச்சந்திரன் மற்றும் வளர்மதி ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தொடர்ந்து ராமச்சந்திரன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வேலு, அய்யம்மாள், விஜி மற்றும் கேசவேலு ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காவலாளி கைது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நியூ பெத்த லேகம் பகுதியைச் சேர்ந்தவர் ராசித்தா (வயது 28). ஆசனம்பட்டு ரோட்டை சேர்ந்தவர் ராஜாசேகரன் (38). காவலாளி.

    இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராசித்தாவிடம் ரூ. 5 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வாங்கிய கடனை திருப்பி தருமாறு ராஜசேகரிடம், ராசித்தா கேட்டார்.

    அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜசேகரன், ராசித்தாவை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று மாலை ராஜசேகரன் கைது செய்தனர்.

    • ஆயுத பூஜைக்கு அழைக்காததால் ஆத்திரம்
    • ஜெயிலில் அடைத்தனர்

    வேலூர்:

    வேலூர் வள்ளலார் பூங்கா நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 42). ஆட்டோ டிரைவர். இவர் இந்து முன்னணி சார்பில் ஆர்.டி.ஓ. ஆபீஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை பூஜை போடுவதற்காகவும் பெயர் திறக்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்து வந்தார்.

    அப்போது அங்கு வந்த சத்துவாச்சாரி நேரு நகரை சேர்ந்த மதன் அவரது மைத்துனர் ஆதித்யன் ஆகியோர் நானும் ஆட்டோ டிரைவர் தான் என்னை ஏன் ஆயுத பூஜைக்கு கூப்பிடவில்லை என தகராறு செய்து சந்திரசேகரை தாக்கி உள்ளனர்.

    மேலும் ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    அப்போது அங்கிருந்த சக ஆட்டோ டிரைவர்கள் இருவரையும் விலக்கி அனுப்பினர். இது குறித்து சந்திரசேகர் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மதன் மற்றும் அவரது மைத்துனர் ஆதித்யன் ஆகிய இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • முன் விரோதத்தால் விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு ஊமையான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மதிமாறன் மனைவி அம்பிகா (வயது 45). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குமார் (50) என்பவருக்கும் இடையே இடம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் நடந்த 5-ந் தேதி குமார் (50) மற்றும் நந்தகுமார் (24) ஆகியோர் இடம் சம்மந்தமாக அம்பிகாவிடன் தகராறு செய்துள்ளனர்.

    இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு குமார் மற்றும் நந்தகுமார் ஆகிய 2 பேரும் அம்பிகாவை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதில் படுகாயம் அடைந்த அம்பிகாவை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து அம்பிகா ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் போலீசார் குமார் மற்றும் நந்தகுமார் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    • வழக்கிலிருந்து விடுவிக்கும்படி மிரட்டல்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    ஊசூர் அருகே உள்ள பெரியதெள்ளுர் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகேசன் (வயது 32). இவர் அதே பகுதியில் உள்ள பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றி உள்ளார்.

    இது தொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு வேலூர் கோர்ட்டில் நடந்தது.

    இந்நிலையில் வழக்கில் ஆஜர் ஆவதற்காக அழகேசன் நேற்று கோர்ட்டிற்கு வந்தார்.

    அப்போது வழக்கிலிருந்து விடுவிக்கும்படி வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் லதாவிற்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதையடுத்து சத்துவாச்சாரி போலீஸ நிலையத்தில் அழகேசன் மீது லதா புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்த அவரை கைது செய்தனர்.

    • ஆசை வார்த்தை கூறி உல்லாசம்
    • போலீசார் விசாரணை

    போளூர்:

    சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் 33 வயது இளம் பெண். அதே பகுதி சேர்ந்த வாலிபரை கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அந்த வாலிபர் இளம் பெண்ணை ஆசை வார்த்தைகள் கூறி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

    இதனால் அப்பெண் கர்ப்பிணியானர். இதனால் அந்த வாலிபரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். வாலிபர் இதற்கு மறுத்தார்.

    பின்னர் ஏதோ சில மாத்திரைகளை கொடுத்து பெண்ணின் கர்ப்பத்தை கலைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் இளம் பெண் வாலிபரிடம் தன்னை திருமணம் செய்யக்கோரி வலியுறுத்தினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    பின்னர் இது குறித்து போளூர் அனைத்து மகளிர் போலீசில் இளம் பெண் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனுமதி இன்றி லாரியில் மண் கடத்தல்
    • மோட்டார் சைக்கிளை தள்ளி விட்டு சென்றனர்

    செய்யாறு:

    செய்யாறு தாலுகா அனப்பத்தூர் கிராமத்தில் செங்கல் சூளைக்கு அரசு அனுமதி இன்றி மண் எடுத்து செல்வதாக கிராம நிர்வாக அலுவலர் பாரத் (வயது 27) என்பவருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் மோட் டார்சைக்கிளில் விரைந்து சென்று அனுமதி இன்றி மண் அள்ளிச் சென்ற லாரியை மடக்கி பிடித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த லாரியின் உரிமையாளர் ஆனந்தன் மற்றும் சண்முகம், ஹரி ஆகியோர் கிராம நிர்வாக அலுவலர் பாரத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மோட்டார் சைக்கிளை தள்ளி விட் டுவிட்டு லாரியை எடுத்துச் சென்றனர்.

    இதுகுறித்து பாரத்கொடுத்த புகாரின் பேரில் அனக்காவூர் சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் வழக்குப்பதிவு செய்து லாரி உரிமையாளர் ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சேலம் அன்னதானப்பட்டி வேலுநகர் டாஸ்மாக் பாரில் நேற்று மது குடிக்க வந்த சிலர் தகராறில் ஈடுபட்டனர்.
    • தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீஸ் ஏட்டு சக்ரவர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தார்.

    சேலம்:

    சேலம் அன்னதானப்பட்டி வேலுநகர் டாஸ்மாக் பாரில் நேற்று மது குடிக்க வந்த சிலர் தகராறில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீஸ் ஏட்டு சக்ரவர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தார்.

    குடிபோதையில் தகராறு

    அப்போது போதையில் இருந்த 3 பேர் ஏட்டுவிடம் தரக்குறைவாக பேசி தாக்க முயன்று மது பாட்டிலை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இது குறித்து பார் சப்ளையர் ஆறுமுகம் கொடுத்த புகாரின் ேபரில் அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் லைன்மேடு புது தெருவை சேர்ந்த ஷாருக்கான் (24), சீலநாயக்கன்பட்டி சிவசக்தி நகரை சேர்ந்த பைேராஸ்கான் (25) , திருச்சி புது கிளை ரோடு பஷீர் அகமது (42) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கொலை மிரட்டல்

    இதேபோல சத்திரம் டாஸ்மாக் பாரில் பிரச்சினை செய்வதாக செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சிறப்பு எஸ்.ஐ.செல்வராஜ் அங்கு விைரந்து சென்றார். அப்போது போதையில் இருந்த வெங்கட்ராபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (39 )என்பவர் செல்வராஜை கடுமையாக பேசியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தார். இதையடுத்து செவ்வாய்ப்டே்டை போலீசார் மணிகண்டன் என்பவரை கைது செய்தனர். 

    • காளை மாடுகள் சன்டையிட்டதால் வாக்குவாதம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அம்பானி நகரை சேர்ந்தவர் இணையதுல்லா. இவர் காளை மாடு ஒன்னறை வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் இணையதுல்லா தனது காளை மாட்டை ரங்கநாதர் நகரில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று கட்டி வைத்தார்.

    அப்போது இணைய துல்லா காளை மாடும், பக்கத்து நிலத்தில் கட்டி வைத்திருந்த கோபு (வயது 51) என்பவரின் காளை மாடும் ஒன்றுடன் ஒன்று சன்டை யிட்டது.

    இது தொடர்பாக இணையதுல்லா, கோபு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது கோபு, இணையதுல்லாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து இணையதுல்லா பள்ளிகொண்டா போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோபுவை கைது செய்தனர்.

    • தகராறு செய்து , மிரட்டல் விடுத்தவர் கைது
    • விவசாயின் சரக்கு வாகன கண்ணாடி உடைப்பு

    கரூர்,

    குளித்தலை அடுத்த, கள்ளப்பள்ளி, கருப்பத்துார் தெற்கு தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 40). விவசாயி. இவர் பொலிரோ பிக் அப் சரக்கு வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். தன் வீட்டில் இருந்தபோது, அதே ஊரை சேர்ந்த மாணிக்கம் என்பவர் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தையில் பேசி திட்டி, தகராறு செய்து வீட்டில் நிறுத்தி வைத்த பொலிரோ பிக் அப் சரக்கு வாகனத்தின் கண்ணாடியை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்தார்.இது குறித்து பாண்டியன் கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணிக்கத்தை கைது செய்தனர்.

    ×