என் மலர்
நீங்கள் தேடியது "Kayalpattinam"
- வீட்டின் முன் நிறுத்தியிருந்த அந்த மோட்டார் சைக்கிளை மறுநாள் காலையில் பார்க்கும்போது காணவில்லை.
- சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் கே.டி.எம். தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் காஜா முகைதீன். இவரது மகன் சாதிக் (வயது 25).சென்னையில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார்.பக்ரீத் விடுமுறையில் காயல்பட்டினத்திற்கு வந்த இவர் தனது நண்பரான குதுத்தின் என்பவரிடம் அவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வாங்கி பயன்படுத்தி வந்தார்.
சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த அந்த மோட்டார் சைக்கிளை மறுநாள் காலையில் பார்க்கும்போது காணவில்லை. அதனை யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இது பற்றி சாதிக் நேற்று ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் ‘எனது குப்பை எனது பொறுப்பு’ நிகழ்ச்சி நடந்தது.
- மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் 'எனது குப்பை எனது பொறுப்பு' மற்றும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின்படி இந்த நிகழ்ச்சி நடந்தது.
இதற்கு நகராட்சி தலைவர் முத்துமுகமது தலைமை தாங்கினார். ஆணையாளர் சுகந்தி முன்னிலை வகித்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தங்களது வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்கவேண்டும் என்று நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் செய்யது அப்துல் காதர், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் நகராட்சியின் பஸ் நிலைய வளாகத்தில் பெரிய அளவிலான மேல்நிலை குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த குடிநீர் தொட்டி காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது 1955-ம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். 65 ஆண்டுகளை கடந்த நிலையிலும் இந்த குடிநீர் தொட்டி உறுதி குறையாமல் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. இருந்தபோதிலும் தற்போது அது பெரும் ஆபத்தான சூழலில் சிக்கியிருப்பதாக பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
அதாவது மேல்நிலைத் தொட்டியின் பாதுகாப்பிற்கான சுற்றுச்சுவருக்கும் தொட்டியின் தூண்களுக்கும் இடையில் பிரம்மாண்டமான மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. இதனால் மரத்து வேர்களின் வளர்ச்சி காரணமாக குடிநீர் தொட்டியின் தூண்கள் சேதமடையகூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டமும் போக்குவரத்து நெருக்கடியும் நிறைந்த இப்பகுதியில் பெரும் விபத்து ஏதேனும் நடந்து விடாமல் இருக்க உடனடியாக குடிநீர் தொட்டியை ஆக்கிரமித்து நிற்கும் மரங்களை அகற்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலரான முகமது அலி காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
- காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் கொடியேற்று விழா 18 இடங்களில் நடைபெற்றது.
- அனைத்து இடங்களிலும் இனிப்பு வழங்கப்பட்டது.
ஆறுமுகநேரி:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தலைவரான காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் சாஹிப் 127-வது பிறந்தநாளை முன்னிட்டு காயல்பட்டினத்தில் 18 இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது.
முஸ்லிம் லீக் நகர தலைவர் முகமது ஹசன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மஹ்மூத் ஹசன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், நகரச் செயலாளர் அபுசாலிஹ், பொருளாளர் சுலைமான், மாவட்ட துணைச்செய லாளர்பெத்தப்பா சுல்தான், மாவட்ட நிர்வாகிகள் முகமது இஸ்மாயில், காதர் சாகிப் மற்றும் முகைதீன் தம்பி, முகமது அலி, லெப்பையப்பா ரஹமத்துல்லா, காயிதே மில்லத் பேரவை செயலாளர் வாவு சம்சுதீன் ஆகியோர் வெவ்வேறு இடங்களில் கொடி ஏற்றினர்.
அனைத்து இடங்களிலும் இனிப்பு வழங்கப்பட்டது. நகர நிர்வாகிகள் சித்திக், அப்துல் கரீம், கடலூர் ஜாபர், முகமது முகைதீன், அப்துல் ரகுமான், உமர் அப்துல் காதர், சுகைல் இப்ராஹிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.