என் மலர்
உள்ளூர் செய்திகள்

என்.சி.சி. மாணவர்கள் உறுதிமொழி ஏற்றபோது எடுத்த படம்.
காயல்பட்டினத்தில் என்.சி.சி. மாணவர்கள் ஒற்றுமை தின ஓட்டம்
- மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து கடற்கரை பூங்கா வரை ஒற்றுமை ஓட்டம் நடத்தினர்.
- நிகழ்ச்சியில் அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியை ஏற்றனர்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளியின் சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு தின விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட தேசிய மாணவர் படை லெப்ட் இன் கர்னல் சுனில் உத்தம் அறிவுறுத்தலின் பேரில் பள்ளியின் என்.சி.சி. மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து கடற்கரை பூங்கா வரை ஒற்றுமை ஓட்டம் நடத்தினர்.
இதனை பள்ளி தலைமை ஆசிரியர் செயது அகமது தொடங்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் செயது முகைதீன் முன்னிலை வகித்தார். இதில் அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியை ஏற்றனர். ஏற்பாடுகளை பள்ளியின் தேசிய மாணவர் படை அலுவலர் முகமது காமில் செய்திருந்தார்.
Next Story