காயல்பட்டினத்தில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் - வாலிபருக்கு வலைவீச்சு

காயல்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்தவர் கோழி ஹமீது மற்றும் ரியல் எஸ்டேட் அதிபருக்கும் தொழில் ரீதியான பழக்கம் இருந்து வந்துள்ளது.அப்போது தனக்கு ரூ.2 லட்சம் பணத்தை உடனடியாக தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
காயல்பட்டினத்தில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் - வாலிபருக்கு வலைவீச்சு
Published on

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் சிவன் கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சாமு இலியாஸ் (வயது 42). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். காயல்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்தவர் கோழி ஹமீது (35). இவர்கள் இருவருக்கும் இடையில் தொழில் ரீதியான பழக்கம் இருந்து வந்துள்ளது.

இதனிடையே சில நாட்களாக இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கோழி ஹமீது நேற்று மதியம் சாமு இலியாசிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது தனக்கு ரூ.2 லட்சம் பணத்தை உடனடியாக தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சாமு இலியாசியிடம், ஹமீது ஆபாசமாகவும் கொலை மிரட்டல் விடுத்தும் பேசியதாக கூறப்படுகிறது. இது பற்றி சாமு இலியாஸ் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com