search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coolie worker"

    • கருத்து வேறுபாடு காரணமாக கணவன் - மனைவியிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது
    • குழந்தைகளை பார்க்க வேண்டும் என்பதற்காக தனது வீட்டிற்கு சென்றுள்ளார்

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் மங்கள விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 30). கட்டிட தொழிலாளி. இவருக்கு முத்துப்பேச்சி என்ற மனைவியும் 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    தகராறு

    கருத்து வேறுபாடு காரணமாக கணவன் - மனைவியிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து ராஜலிங்கம் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    நேற்று அவர் தனது குழந்தைகளை பார்க்க வேண்டும் என்பதற்காக தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மீண்டும் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் முத்துப்பேச்சி தனது மகள்களை அழைத்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டாராம்.

    மர்ம சாவு

    பின்னர் நேற்று காலையில் முத்துப்பேச்சி வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கும்போது அங்கே ராஜலிங்கம் தரையில் பிணமாக கிடந்துள்ளார்.

    இது பற்றி அவரது மூத்த மகள் கூறுகையில், அப்பா மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டார். நான் உடனே மின்விசிறியில் இருந்து சேலையை அகற்றி அவரை மீட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதனிடையே ராஜலிங்கம் இறந்தது பற்றி அவரது அண்ணன் பழனி முருகன் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ராஜலிங்கம் தற்கொலை தான் செய்தாரா? தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே சரக்கு வேன் மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி பலியானார்.
    • இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கல்லாகுளம் பகுதியை சேர்ந்தவர் குமார் (34). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    இவர் கோபிசெட்டிபாளையம் அடுத்த கெட்டிசெவியூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் நம்பியூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிள் மற்றும் சரக்கு வேன் அருகே இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. இதில் குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    மேலும் சரக்கு வேனில் பாலகுமார் மற்றும் அவரது மனைவி லோகேஸ்வரி ஆகியோர் வந்தனர். இதில் கணவன்-மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை மீட்டு அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×