என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூய்மை பணியாளர் ஒருவர் விருது பெறுவதை படத்தில் காணலாம்.
காயல்பட்டினம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு விருது வழங்கும் விழா
- தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும் விழா நடைபெற்றது.
- சுகாதார பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆறுமுகநேரி:
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், எனது குப்பை எனது பொறுப்பு என்ற குறிக்கோளுடன் காயல்பட்டினம் நகராட்சியில் சிறப்பாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும் விழா நகராட்சி ஆணையாளர் குமார் சிங் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்றது.
நகராட்சி தலைவர் முத்து முகமது தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுல்தான் லெப்பை முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் வரவேற்று பேசினார். விழாவில் சுகாதார பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் ஆகியோருக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
Next Story






