என் மலர்
நீங்கள் தேடியது "Sanitary workers"
- பல மணி நேரம் உணவுக்காக தூய்மைப் பணியாளர்கள் காத்திருக்க வேண்டிய சூழல்.
- திமுக-வை விட வல்லவர்கள் இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகிலே எவரும் இல்லை.
தூய்மை பணியாளர்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் நோக்கில் செயல்படுவதாக திமுக அரசு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் நோக்கில் செயல்படும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
சமீபத்தில், "தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்" என்ற பெயரில் ஒரு போட்டோஷூட் நிகழ்ச்சி நடத்தினார் பொம்மை முதல்வர்.
இந்நிலையில், சென்னையில் 60% பேருக்குக் கூட உணவு விநியோகம் செய்யப்படவில்லை எனவும், பல மணி நேரம் உணவுக்காக தூய்மைப் பணியாளர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
மேலும், தற்போது, கோவையில் செம்மொழிப் பூங்கா ஊழியர்களுக்கு குப்பை வண்டியில் உணவு கொண்டு வரப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
தேர்தலுக்கு முன், தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அதைக் கேட்கும் தூய்மைப் பணியாளர்கள் ஜனநாயக உரிமையையும் பறித்துக்கொண்டு, அராஜகத்தால் அவர்களின் போராட்டங்களை ஒடுக்கி விட்டு, Damage Control ஆக ஒரு திட்டத்தைத் தருகிறேன் என்ற பெயரில் ஒரு போட்டோஷூட் நடத்திவிட்டு, அதையும் கைவிட்டுவிட்டார் இன்றைய பொம்மை முதலமைச்சர்.
ஆனால், குப்பை வண்டியில் சாப்பாடு போட்டு இழிவு படுத்துவது என்பது, இதற்கு இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தவே வேண்டாம் என்றே சுயமரியாதை உள்ள எவருக்கும் தோன்றச் செய்கிறது.
எதிர்க்கட்சியாக இருக்கும் போது எளிய மக்களை ஏமாற்றுவதிலும், ஆட்சிக்கு வந்தபின் அதே மக்களை இழிவுபடுத்துவதிலும் திமுக-வை விட வல்லவர்கள் இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகிலே எவரும் இல்லை!
தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முறையாக, அவர்களுக்கு உரிய மரியாதையுடன் செயல்படுத்திட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து மீண்டு வர தூய்மை பணியாளர்கள் உதவுகின்றனர்.
- தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகள் அனைத்தையும் தி.மு.க அரசு படிப்படியாக செய்யும்.
சென்னை கலைவாணர் அரங்கில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவுத்திட்டம், குடியிருப்பு வீடுகள் மற்றும் புதிய நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தூய்மை பணியாளர்களுக்கு உணவு எடுத்துச் செல்லும் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவை முதலமைச்சர் ருசி பார்த்து நன்றாக இருப்பதாக அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
* ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படையாக இருப்பது தூய்மை.
* சென்னையை தூய்மையாக வைத்திருக்க காரணமானவர்கள் தூய்மை பணியாளர்கள்.
* ஊரெல்லாம் உறங்கிய பின்னர், உறங்காமல் பணி செய்பவர்கள் தூய்மை பணியாளர்கள்.
* தூய்மை பணியாளர்கள் செய்வது வேலை இல்லை சேவை.
* தூய்மை பணியாளர்களின் சுயமரியாதையை காக்கவே உணவு வழங்கும் திட்டம், உதவித்தொகை உள்ளிட்ட திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
* வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து மீண்டு வர தூய்மை பணியாளர்கள் உதவுகின்றனர்.
* தூய்மை பணியாளர்களுக்கு அனைவரும் நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும்.
* தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகள் அனைத்தையும் தி.மு.க அரசு படிப்படியாக செய்யும்.
* சென்னையில் 200 வார்டுகளிலும் ஓய்வறைகள் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தூய்மை பணியாளர்களுக்கு உணவுத் திட்டம்.
- தூய்மை பணியாளர்களுக்கு குடியிருப்பு வீடுகள் மற்றும் புதிய நலத்திட்டங்கள்.
சென்னை கலைவாணர் அரங்கில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவுத் திட்டம், குடியிருப்பு வீடுகள் மற்றும் புதிய நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தூய்மை பணியாளர்களுக்கு உணவு எடுத்துச் செல்லும் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவை முதலமைச்சர் ருசி பார்த்து நன்றாக இருப்பதாக அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
3 வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தூய்மை பணியாளருக்கான வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.
மேலும், பணியின்போது உயிரிழந்த தூய்மை பணியாளரின் குடும்பத்திற்கான நிவாரணத் தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கினார்.
தூய்மை பணியாளர் குழந்தைகளின் உயர்கல்வி உதவித்தொகை, சுயதொழில் மானிய திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கிராமப்புறங்களில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டில் தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியின் 31,373 தூய்மை பணியாளர்களுக்கான இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு ரூ.64,73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாடு அரசு உடனடியாக போராடும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும்.
- கைது செய்யப்பட்டுள்ள தூய்மை பணியாளர்களை விடுதலை செய்ய வேண்டும்.
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், கைது செய்துள்ளவர்களை விடுதலை செய்யவும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் சிபிஐ(எம்) கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பணி நிரந்தரம், தனியார்மய எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிய தூய்மை பணியாளர்கள் மிகக் கடுமையாக தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு வெவ்வேறு மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இரவோடு இரவாக காவல்துறை நடத்திய இந்த 'அப்புறப்படுத்துதல்' முற்றிலும் சட்டத்திற்கும், நியாயத்திற்கும் புறம்பானது மட்டுமல்ல, மனித உரிமை மீறலுமாகும்.
ஒரு ஜனநாயக நாட்டில் தங்களுடைய கோரிக்கைகளுக்காக தொழிலாளர்கள் போராடுகிற போது காவல்துறை, நீதிமன்றம், நிர்வாகம் இவற்றின் அணுகுமுறையும் அரசின் அணுகுமுறையும் எளிய மக்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும்; சட்டத்திற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
ஆனால், இந்த பிரச்சனையில் மேற்கண்ட அனைத்து அரசு அமைப்புகளும் மூர்க்கத்தனமாகவே இதை கையாண்டுள்ளது. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்தவர்களை காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்துவதும், அதைக் கேள்வி கேட்க சென்றால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக சொல்லி நம்பர் பிளேட் இல்லாத காவல் வாகனத்தில் ஏற்றி சுற்றிக்கொண்டே அலைவதும் நாகரீக சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டிய நடவடிக்கைகள்.
தமிழ்நாடு அரசு உடனடியாக போராடும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். போராட்டத்திற்கு ஆதரவாக பேசியவர்களையும், ஆதரவு தெரிவிக்க வந்தவர்களையும் காவல்துறையினர் தாக்கி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. சம்பந்தப்பட்ட காவலர்கள் மீதும், தாக்குவதற்கு உத்தாவிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், உடனடியான மற்றும் நேரடி தலையீட்டின் மூலம் தூய்மை பணியாளர்களின் பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வு காண வேண்டும். அத்துமீறி நடந்து கொண்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாக இன்று மாலை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும் விழா நடைபெற்றது.
- சுகாதார பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆறுமுகநேரி:
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், எனது குப்பை எனது பொறுப்பு என்ற குறிக்கோளுடன் காயல்பட்டினம் நகராட்சியில் சிறப்பாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும் விழா நகராட்சி ஆணையாளர் குமார் சிங் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்றது.
நகராட்சி தலைவர் முத்து முகமது தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுல்தான் லெப்பை முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் வரவேற்று பேசினார். விழாவில் சுகாதார பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் ஆகியோருக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.






