என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தூய்மை பணியாளர்கள் செய்வது வேலை இல்லை சேவை - மு.க.ஸ்டாலின்
- வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து மீண்டு வர தூய்மை பணியாளர்கள் உதவுகின்றனர்.
- தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகள் அனைத்தையும் தி.மு.க அரசு படிப்படியாக செய்யும்.
சென்னை கலைவாணர் அரங்கில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவுத்திட்டம், குடியிருப்பு வீடுகள் மற்றும் புதிய நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தூய்மை பணியாளர்களுக்கு உணவு எடுத்துச் செல்லும் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவை முதலமைச்சர் ருசி பார்த்து நன்றாக இருப்பதாக அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
* ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படையாக இருப்பது தூய்மை.
* சென்னையை தூய்மையாக வைத்திருக்க காரணமானவர்கள் தூய்மை பணியாளர்கள்.
* ஊரெல்லாம் உறங்கிய பின்னர், உறங்காமல் பணி செய்பவர்கள் தூய்மை பணியாளர்கள்.
* தூய்மை பணியாளர்கள் செய்வது வேலை இல்லை சேவை.
* தூய்மை பணியாளர்களின் சுயமரியாதையை காக்கவே உணவு வழங்கும் திட்டம், உதவித்தொகை உள்ளிட்ட திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
* வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து மீண்டு வர தூய்மை பணியாளர்கள் உதவுகின்றனர்.
* தூய்மை பணியாளர்களுக்கு அனைவரும் நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும்.
* தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகள் அனைத்தையும் தி.மு.க அரசு படிப்படியாக செய்யும்.
* சென்னையில் 200 வார்டுகளிலும் ஓய்வறைகள் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.






