என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழாவில் கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் உலமாக்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிய காட்சி.
காயல்பட்டினத்தில் உலமாக்கள் 185 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள்- கனிமொழி எம்.பி, அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினர்
- உலமாக்கள், பணியாளர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா காயல்பட்டினத்தில் நடைபெற்றது.
- கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக் கள், பணியாளர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா காயல் பட்டினத்தில் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்துமுகமது, ஆணையாளர் குமாரசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை துறை நல மாவட்ட அலுவலர் விக்னேஸ்வரன் வரவேற்று பேசினார்.
விழாவில் கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.
இதில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், தி.மு.க மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், பொதுக்குழு உறுப்பினர் முத்து செல்வன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஓடை சுகு, நகர அவைத் தலைவர் முகமது மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






