என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திண்டுக்கல் அருகே வி.எஸ்.கோட்டை வி.ஏ.ஓ.வுக்கு கொலை மிரட்டல் போலீசில் புகார்
  X

  வி.ஏ.ஓ. அலுவலகத்தில் கொலை மிரட்டல் விடுத்த நபர்கள்.

  திண்டுக்கல் அருகே வி.எஸ்.கோட்டை வி.ஏ.ஓ.வுக்கு கொலை மிரட்டல் போலீசில் புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மார்க்கம்பட்டியை சேர்ந்த 3 பேர் ஆக்கிரமிப்பை எதற்கு அகற்றினீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடு பட்டனர்.
  • வி.ஏ.ஓ.வை மிரட்டுவதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  குள்ளனம்பட்டி:

  திண்டுக்கல் அருகே வி.எஸ்.கோட்டை கிராம வி.ஏ.ஓ.வாக இருப்பவர் கோபாலகிருஷ்ணன் (வயது37). இவர் சாணார்பட்டி போலீசில் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

  நான் கடந்த 1½ ஆண்டுகளாக வி.எஸ்.கோட்டை குரூப் கிராமத்தில் வி.ஏ.ஓ. வாக பணிபுரிந்து வருகிறேன். மார்க்கம்பட்டி பகுதியில் பொது ப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள மறுகால் செல்லும் வாய்க்காலில் சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக புகார் வந்தது.

  ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலர், நான் மற்றும் உதவியாளர் சம்பவ இடத்துக்கு சென்று ஜே.சி.பி.வாகனத்தின் உதவி யுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டோம். அன்று மாலை எனது அலுவலகத்திற்கு மார்க்கம்பட்டியை சேர்ந்த செல்வம், திருப்பதி, மூர்த்தி ஆகிய 3 பேரும் வந்து ஆக்கிரமிப்பை எதற்கு அகற்றினீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடு பட்டனர்.

  மேலும் என்னையும் கிராம உதவியாளரையும் அச்சுறுத்தும் விதமாக மிரட்டல் விடுத்தனர். அரசு பணியை செய்ய விடாமல் இடையூறு செய்துள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  இந்த நிலையில் வி.ஏ.ஓ.வை மிரட்டுவதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×