search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "interrogation"

    • குறவைய்யாவை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்தது சம்பந்தமாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், தாடி பத்திரி, சி.பி.ஐ காலனியை சேர்ந்தவர் ராம குறவைய்யா. கடந்த மாதம் 25-ந் தேதி ராம குறவைய்யாவுக்கும் அவரது நண்பருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதில் காயம் அடைந்த நண்பர் இது குறித்து அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அமீத்கான் வழக்கு பதிவு செய்து குறவைய்யாவை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தார்.

    பின்னர் போலீஸ் நிலையத்தில் வைத்து குறவைய்யாவின் மூக்கு மற்றும் காதில் மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்தார். இதில் குறவைய்யாவின் மூக்கு மற்றும் காதில் காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து குறவைய்யாவை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து குறவைய்யா அனந்தபூர் போலீஸ் சூப்பிரண்டு அன்புராஜனிடம் புகார் செய்தார். மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்தது சம்பந்தமாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

    விசாரணையில் இன்ஸ்பெக்டர் அமித்கான் என்பவர் மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்தது தெரிய வந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அன்பு ராஜன் தெரிவித்தார்.

    • பலத்த காயம் அடைந்த சதீஷ்குமாருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • செம்மஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சோழிங்கநல்லூர்:

    செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(25). இவர் வீட்டு வாசலில் இருந்தபோது 5 பேர் கும்மல் திடீரென தகராறில் ஈடுபட்டு கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமாருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அதே பகுதி 4-வது அவன்யூவை சேர்ந்தவர் விஜய். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் பட்டாசு வெடித்தது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இந்த தகராறில் விஜய்க்கு கத்திக்குத்து விழுந்தது. அவர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே மினி லாரியில் ஆற்று மணல் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • மினி லாரியை போலீசார் வழிமறித்து நிறுத்தி சோதனையிட்டனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் போலீசார் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஆனத்தூரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மினி லாரி ஒன்று வேகமாக வந்தது. மினி லாரியை போலீசார் வழிமறித்து நிறுத்தி சோதனையிட்டனர்.

    அப்போது மினி லாரியில் தென்பெண்ணையாற்று மணல் கடத்தப்பட்டதை கண்டனர். இதையடுத்து மினிலாரியை ஓட்டிவந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். இதில் பண்ருட்டி வட்டம் உளுந்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் (வயது 19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

    • மாணவனை அங்கிருந்த கரும்பால் தாங்கி விரட்டிவிட்டு, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
    • டிரைவர் மற்றும் மாணவி ஆகியோரிடம் பஞ்சாயத்து பேசி முடித்ததாக கூறப்படுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகே பரசுரெட்டிப்பா ளையத்தை சேர்ந்த 13 வயது மாணவி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் கேரளாவில் தங்கி வேலை செய்து வருகின்றனர். அதே ஊரில் உள்ள பாட்டியின் பராமறிப்பில் இம்மாணவி உள்ளார். இதே ஊரைச் சேர்ந்த மாணவன், மாணவி படிக்கும் அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். இவ்விருவரும் கடந்த 11-ந் தேதி மாலை அதே ஊரில் உள்ள கரும்பு தோட்டம் அருகே பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த தனியார் பள்ளி டிரைவர் மணிகண்டன் (வயது 38) இருவரையும் கண்டித்துள்ளார். மேலும், அந்த மாணவனை அங்கிருந்த கரும்பால் தாங்கி விரட்டிவிட்டு, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இரவு 7 மணியளவில் வீட்டிற்கு வந்த மாணவி, நடந்த விஷயத்தை பாட்டியிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக ஊராட்சி தலைவரை முன்னிலையில் மாணவன், தனியார் பள்ளி டிரைவர் மற்றும் மாணவி ஆகியோரிடம் பஞ்சாயத்து பேசி முடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வளவனூர் மருத்துவமனைக்கு பிளஸ்-2 மாணவன் சிகிச்சைக்காக வந்துள்ளார். அங்கு தன்னை ஒருவர் கரும்பால் அடித்து விட்டதாக கூறியுள்ளார். இத்தகவல் அறிந்த வளவனூர் போலீசார் விரைந்து சென்று மாணவனிடம் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின் படி தனியார் பள்ளி டிரைவர் மணிகண்டனிடம் வளவனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிறுவந்தாடு பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    • அ.தி.மு.க. நிர்வாகி-டிரைவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
    • வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் தர்மலிங்கம் (வயது52). இவரது மனைவி முத்து லட்சுமி. யூனியன் துணைத்தலைவராக உள்ளார்.

    அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நாளை விருதுநகரில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தர்மலிங்கம் செய்து வந்தார். அதன்படி நேற்று இரவு நோட்டீஸ் வழங்குவதற்காக சென்னல்குடி, கோட்டூர் பகுதிகளுக்கு சென்றார்.

    கோட்டூரில் உள்ள அதிமுக மாணவரணி நிர்வாகி அலுவலகத்தில் தர்மலிங்கம் இருந்த போது யூனியன் கவுன்சிலர் சென்னல்குடி மாரியப்ப னின் மகன் செந்தூர்பாண்டி அங்கு வந்தார். நிர்வாகி களை நியமனம் செய்வது தொடர்பாக தர்ம லிங்கத்துக்கும், செந்தூர் பாண்டிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதில் தர்மலிங்கத்திற்கு கத்திக்குத்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவரை காரை ஓட்ட முயன்ற கார் டிரைவர் கடம்பன் குளத்தை சேர்ந்த மகேஷ்கண்ணன் என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்ததாக கூறப்படுகிறது. 2 பேரும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வச்சக்கா ரப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கத்தியை காட்டி மிரட்டி ஓட்டல் அதிபர்- வாலிபரிடம் பணம் பறிக்கப்பட்டது.
    • ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    மதுரை செல்லூர் மீனாம் பாள்புரம் பாரதிதாசன் ரோட்டை சேர்ந்தவர் மகுதுரபீக்ஒலி(வயது43). இவர் பி.பி.குளம் முல்லை நகரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு வந்த 6 பேர் அவரை கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.5ஆயிரத்தை பறித்துச் சென்று விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து ஓட்டல் உரிமையாளர் மகுதுரபீக்ஒலி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பி.பி.குளம் யோகராஜ் (31), கார்த்திகேயன் என்ற வெள்ளையன் கார்த்திக் (31), கோகுல் விஜய் (29), அனிபாண்டி ராஜா (46), கிருஷ்ணன் என்ற ஜப்பான் ராஜா (31), சுரேஷ் (31) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் உசிலம் பட்டியை சேர்ந்தவர் ஒச்சு காளை (30). இவர் ஜெய் ஹிந்துபுரம் 2-வது மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அவரை 3 வாலிபர்கள் வழிமறித்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஒச்சுக்காளையிடம் இருந்து பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து ஒச்சுக்காளை ஜெய்ஹிந்து புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த சஞ்சய் (23), ஜாகிர் உசேன் (22), சூர்யா என்ற ஆட்டோ பாஸ்கர் (21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • சங்கராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை விசாரணையின்றி தூக்கிலிட வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரத்தில் ஒன்றிய, நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு ஒன்றிய செயலாளர் தலிச்சந்திரன் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் சிந்தனைவளவன், ஒன்றிய பொருளாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி பொறுப்பாளர் சிலம்பன், வணிகரணி மாநில செயலாளர் திராவிட சந்திரன் ஆகியோர் பேசினர். மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் பழங்குடியின பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை விசார ணையின்றி தூக்கிலிட கோரியும் இந்த ஆர்ப்பாட் டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • வாலிபர்களிடம் செல்போன், பணம் வழிப்பறி செய்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்த முகம்மது மகன் நூர் (18). இவர் சம்பவத்தன்று நள்ளிரவு, மதுரை பைபாஸ் ரோட்டில் நடந்து சென்றார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.

    இந்த தொடர்பாக கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம், ராமசுப்ரமணியபுரத்தை சேர்ந்தவர் ராமராஜ் ( 26). இவர் நேற்று நள்ளிரவு மதுரை டோக் நகர் பகுதியில் நடந்து சென்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நர்சரி பள்ளிக்கூடம் அருகே வழிமறித்து, கத்தி முனையில் செல்போன் மற்றும் மணிபர்சை பறித்து சென்றனர்.

    இது தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று பகல் 2 மணிக்கு ஏரிக்கரைக்கு சென்று வருவதாக சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
    • இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியும் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அரசன். இவரது மகள் அனிதா (22). இவர் கடலூர் கே.என்.சி. கல்லூரியில் பி.ஏ. வரலாறு முடித்து விட்டு புதுச்சேரி லூகாஸ் டி.வி.எஸ். கம்பெனியில் வேலை செய்தார். கம்பெனி விடுமுறை என்பதால் நேற்று வீட்டில் இருந்தார். நேற்று பகல் 2 மணிக்கு ஏரிக்கரைக்கு சென்று வருவதாக சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

    அவரை பற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் குடுமையான்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஞானவேல் என்பவரது மகன் தினேஷ் (24)என்பவர் 4 பேருடன் வந்து தனது மகளை கடத்தி சென்று விட்டதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியும் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட இளம் பெண்ணை தனி படை அமைத்து வலைவீசி தேடி வருகிறார்.

    • கணவரை கத்தியால் குத்திய பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    • காயமடைந்த சுதர்சன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை இந்திரா நகரை சேர்ந்தவர் சுதர்சன் (34). இவர் மணிமேகலை என்ற பிரியா(29) என்பவரை திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார். சுதர்சனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதன் காரணமாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நேற்று மாலை சுதர்சன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதை மணிமேகலை தட்டி கேட்டார். இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த மணிமேகலை காய்கறி வெட்டும் கத்தியால் கணவரை குத்தினார். காயமடைந்த சுதர்சன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • முருகனை தகாதவார்த்தையால் திட்டி கொலை மிரட்டல்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகராஜை கைது செய்தனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே உள்ள திம்மகுடி அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் முருகன் (வயது 45).

    இவர் கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் நகரப் பேருந்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று கும்பகோணத்திலிருந்து திருப்புறம்பியம் வரை செல்லும் நகரப் பேருந்தை திருப்புறம்பயம் கடைத்தெருவில் நிறுத்தி இருந்த போது திருப்புறம்பயம் வெள்ளாளத் தெரு பரணத்தான் என்கி்ற முருகராஜ் (36) என்பவர் பஸ்சின் கண்ணாடியை அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் முருகன் இதுபற்றி கேட்டதற்கு முருகராஜ், முருகனை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் , தலைமை காவலர் சங்கர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து முருகராஜை கைது செய்தனர்.

    • தனது மோட்டார் சைக்கிளில் செஞ்சிக்கு வந்து கொண்டு இருந்தார்.
    • ஒரு லட்சத்து 28 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

    விழுப்புரம்: 

    செஞ்சி கிருஷ்ணாபுரம் வ.உ. சி. தெருவை சேர்ந்த வர் சையத் ஜின்னா. அவரது மகன் சையத் இத்ரிஸ் (வயது 35). இவர் மேல்மலையனூ ரில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் செஞ்சிக்கு வந்து கொண்டு இருந்தார். அவர் செஞ்சி மேய்கலவாய்_ சந்தை தோப்பு சாலையில் வந்து கொண்டிருந்தபோது ஒரு தனியார் பள்ளியின் அருகே அடையாளம் தெரியாத 3 பேர் வழிமடக்கி மிரட்டல் விடுத்து அவர் வைத்தி ருந்த ரூபாய் ஒரு லட்சத்து 28 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து சையத் இத்ரிஸ் செஞ்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். எப்போதும் போக்குவரத்து இருக்கும் பகுதியில் வாலி பரை வழிமடக்கி பணம் பறித்த சம்பவம் இப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×