செம்மஞ்சேரியில் 2 பேருக்கு கத்திக்குத்து

பலத்த காயம் அடைந்த சதீஷ்குமாருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.செம்மஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செம்மஞ்சேரியில் 2 பேருக்கு கத்திக்குத்து
Published on

சோழிங்கநல்லூர்:

செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(25). இவர் வீட்டு வாசலில் இருந்தபோது 5 பேர் கும்மல் திடீரென தகராறில் ஈடுபட்டு கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமாருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதே பகுதி 4-வது அவன்யூவை சேர்ந்தவர் விஜய். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் பட்டாசு வெடித்தது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இந்த தகராறில் விஜய்க்கு கத்திக்குத்து விழுந்தது. அவர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com