கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி

கத்தியை காட்டி மிரட்டி ஓட்டல் அதிபர்- வாலிபரிடம் பணம் பறிக்கப்பட்டது. ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி
Published on

மதுரை

மதுரை செல்லூர் மீனாம் பாள்புரம் பாரதிதாசன் ரோட்டை சேர்ந்தவர் மகுதுரபீக்ஒலி(வயது43). இவர் பி.பி.குளம் முல்லை நகரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு வந்த 6 பேர் அவரை கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.5ஆயிரத்தை பறித்துச் சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ஓட்டல் உரிமையாளர் மகுதுரபீக்ஒலி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பி.பி.குளம் யோகராஜ் (31), கார்த்திகேயன் என்ற வெள்ளையன் கார்த்திக் (31), கோகுல் விஜய் (29), அனிபாண்டி ராஜா (46), கிருஷ்ணன் என்ற ஜப்பான் ராஜா (31), சுரேஷ் (31) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் உசிலம் பட்டியை சேர்ந்தவர் ஒச்சு காளை (30). இவர் ஜெய் ஹிந்துபுரம் 2-வது மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அவரை 3 வாலிபர்கள் வழிமறித்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஒச்சுக்காளையிடம் இருந்து பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து ஒச்சுக்காளை ஜெய்ஹிந்து புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த சஞ்சய் (23), ஜாகிர் உசேன் (22), சூர்யா என்ற ஆட்டோ பாஸ்கர் (21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com