மாணவியுடன் தனியாக பேசிக் கொண்டிருந்த பிளஸ்-2 மாணவனை கரும்பால் தாக்கிய டிரைவர்: வளவனூர் போலீசார் விசாரணை

மாணவனை அங்கிருந்த கரும்பால் தாங்கி விரட்டிவிட்டு, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.டிரைவர் மற்றும் மாணவி ஆகியோரிடம் பஞ்சாயத்து பேசி முடித்ததாக கூறப்படுகிறது.
மாணவியுடன் தனியாக பேசிக் கொண்டிருந்த பிளஸ்-2 மாணவனை கரும்பால் தாக்கிய டிரைவர்: வளவனூர் போலீசார் விசாரணை
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகே பரசுரெட்டிப்பா ளையத்தை சேர்ந்த 13 வயது மாணவி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் கேரளாவில் தங்கி வேலை செய்து வருகின்றனர். அதே ஊரில் உள்ள பாட்டியின் பராமறிப்பில் இம்மாணவி உள்ளார். இதே ஊரைச் சேர்ந்த மாணவன், மாணவி படிக்கும் அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். இவ்விருவரும் கடந்த 11-ந் தேதி மாலை அதே ஊரில் உள்ள கரும்பு தோட்டம் அருகே பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த தனியார் பள்ளி டிரைவர் மணிகண்டன் (வயது 38) இருவரையும் கண்டித்துள்ளார். மேலும், அந்த மாணவனை அங்கிருந்த கரும்பால் தாங்கி விரட்டிவிட்டு, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இரவு 7 மணியளவில் வீட்டிற்கு வந்த மாணவி, நடந்த விஷயத்தை பாட்டியிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக ஊராட்சி தலைவரை முன்னிலையில் மாணவன், தனியார் பள்ளி டிரைவர் மற்றும் மாணவி ஆகியோரிடம் பஞ்சாயத்து பேசி முடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வளவனூர் மருத்துவமனைக்கு பிளஸ்-2 மாணவன் சிகிச்சைக்காக வந்துள்ளார். அங்கு தன்னை ஒருவர் கரும்பால் அடித்து விட்டதாக கூறியுள்ளார். இத்தகவல் அறிந்த வளவனூர் போலீசார் விரைந்து சென்று மாணவனிடம் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின் படி தனியார் பள்ளி டிரைவர் மணிகண்டனிடம் வளவனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிறுவந்தாடு பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com