search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mysterious gang"

    • சமுதாய கூடத்தில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 8 மின் விசிறி களை திருடிச் சென்றனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சிக்குட்பட்ட ராமகாரன் தெருவில் சமுதாய கூடம் உள்ளது. இங்கு புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 8 மின் விசிறி களை திருடிச் சென்றனர்.

    இது குறித்து பேரூராட்சி செயல்அலுவலர் சிவக்கு மார் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்ற னர்.

    தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் காமு (வயது 50). இவர் தேங்காய் வெட்டும் தொழிலாளி. ஒரு ஆடு மற்றும் 2 குட்டிகளை வளர்த்து வருகிறார்.

    அவரது தோட்டத்தில் மேய்ச்சலு க்காக விட்டு வந்த போது ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • போலீசார் விசாரணை
    • வாகனம் பறிமுதல்

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த நீலகண்டராயன் பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சகுந்தலா (வயது 50), அருண்குமார் (26). இருவரும் கூலித் தொழிலாளர்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சகுந்தலா வீட்டில் ஒரு பவுன் நகை, வெள்ளி கொலுசு, சாவி கொத்து, ரூ.6 ஆயிரம் ஆகியவற்றையும், அருண்குமார் வீட்டில் 2 பவுன் நகை, 2 ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றையும் மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.

    இது குறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி அருகே சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்ததில் அவர்கள் வாலாஜா அடுத்த செங்காடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (45), காட்பாடி அடுத்த கீழ்மோட்டூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (47) என்பதும் சகுந்தலா, அருண்குமார் வீட்டில் திருடியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 3 பவுன் நகை, 4 ஜோடி வெள்ளி கொலுசு, சாவி கொத்து, ரூ.2,500 மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • தூத்துக்குடி கும்பலுக்கு வலைவீச்சு
    • ராணுவவீரர் வீட்டில் திருடியவர் கைது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த காளபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 58). ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.

    இவர் கவுதமபுரம் கிராமத்தில் நடந்த உறவினருடைய துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்தோடு வீட்டை பூட்டிக்கொண்டு சென்றார்.

    இந்த நிலையில் பகல் 12 மணியளவில் அவருடைய இரும்பு கதவை மர்ம நபர் ஒருவர் உடைத்து வீட்டின் உள்ளே சென்றார்.

    இதனை பக்கத்து வீட்டில் வசிப்பவர் கண்டு கூச்சலிட்டார். இதை அறிந்த மர்ம நபர் வீட்டின் சுவர் மீது ஏறி தப்பி ஓடி அருகில் இருந்த காட்டுப் பகுதியில் தலைமறைவாகினார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பின்னர் அவரை போலீசார், காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று இன்ஸ்பெக்டர் கருணாகரன் விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த முத்துராஜா (வயது 33) என்பது தெரிய வந்தது.

    மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 5-க்கும் மேற்பட்ட கும்பல் குழுவாக வந்துள்ளது. குடியாத்தம் பகுதியில் தங்கும் விடுதியில் தங்கி சுற்றுப்புற பகுதிகளில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.

    தொடர்ந்து பள்ளிகொண்டா போலீசார் அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வீடுகளில் தீவிர சோதனை செய்தனர். போலீசார் வருவதை அறிந்த மர்மகும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் மாவட்ட முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் வீட்டில் திருடி பிடிபட்ட முத்து ராஜாவை போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.

    • நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • பொதுமக்கள் வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற சார்பில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் முள்வேலி அமைத்து முருங்கை நர்சரி கார்டன் அமைக்க சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டிருந்தது.

    நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பல் சின்டெக்ஸ் தொட்டியை உடைத்து குடிநீர் பைப்பையும் சேதப்படுத்தி உள்ளனர்.

    இதனையடுத்து அப்பகுதி பொது மக்கள் உடனடியாக சின்டெக்ஸ் டேங்க் மற்றும் குடிநீர் இணைப்பு பைப் லைன் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.
    • வீட்டிற்கு வந்த வசந்தி, கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு, வாழவந்தி, சேட்டுக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் ஆரோக்கியசாமி. இவரது மனைவி வசந்தி அதே பகுதியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று வழக்கம்போல் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.

    இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கிருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து, அதில் இருந்த 8 பவுன் நகைகள், 5 ஆயிரம் ரொக்கத்தையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

    வேலை முடிந்து வீட்டிற்கு வந்த வசந்தி, கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து ஏற்காடு போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் செந்தில் ராஜ்மோகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்களை கொண்டு கொள்ளையர்கள் விட்டு சென்ற தடயங்கள், கைரேகைகளை சேகரித்தனர்.

    வசந்தி தனது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போனதால் மிகவும் வேதனைக்கு ஆளானார். பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வைகை ஆற்றுப்படுகையில் இரவு பகலாக சமூகவிரோதிகள் மணல் அள்ளி வருகின்றனர்.
    • சாலையை உடைத்து மணல் திருடிச்சென்ற மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வித்துள்ளனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.இதன் அருகே வைகையாற்று படுமை உள்ளது. இந்த கோவிலுக்கு விஷேச நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். மேலும் முக்கிய நாட்களில் தங்கள் முன்னோர்களுக்கு வைகையாற்றில் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவிலின் மேற்கு பகுதியில் சித்தர்கள்நத்தம், மல்லியம்பட்டி கிராம பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை வழியாக விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கொண்டு சென்றனர். பொதுமக்களுக்கும் உதவியாக இருந்தது.

    இந்த நிலையில் ஆற்றுப்படுகையில் இரவு பகலாக சமூகவிரோதிகள் மணல் அள்ளி வருகின்றனர். இதனால் சாலையையும் துண்டித்துச்சென்றனர். இதைபார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மயானத்திற்கு செல்லும் சாலையை உடைத்து திருடிச்சென்ற மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வித்துள்ளனர்.

    • நேற்று இரவு வழக்கம் போல் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
    • கருவறை முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் கருவம்பாளையம் நடத்தலாங்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வ கணபதி கோவில் உள்ளது.இந்த கோவிலில் கோபிநாத் என்பவர் பூசாரியாக உள்ளார்.நேற்று இரவு வழக்கம் போல் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.இன்று காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தார்.

    அப்போது கருவறை முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து கோவில் அறங்காவலர் குழுவை சேர்ந்த பழனிச்சாமிக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கோவிலின் சுவர் ஏறி குதித்து உள்ளே வந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்த உண்டியலை தூக்கிச் சென்றிருப்பது தெரியவந்தது. கோவில் உண்டியலில் 10 ஆயிரம் ரூபாய் காணிக்கை பணம் இருந்திருக்கலாம் என தெரிகிறது.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து உண்டியலை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    • பள்ளியில் உணவு இடைவெளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் சாப்பாடு கொண்டு செல்லும் போது 9-ம் வகுப்பு மாணவன் மீது எதிர்பாராமல் பட்டுவிட்டது.
    • மறுநாள் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் 11 ஆம் வகுப்பு மாணவனை தாக்கியதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அருகே ஆடுர்குப்பம் சேர்ந்தவர் 15 வயது மாணவன். இவர் கடலூர் அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளியில் உணவு இடைவெளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் சாப்பாடு கொண்டு செல்லும் போது 9-ம் வகுப்பு மாணவன் மீது எதிர்பாராமல் பட்டுவிட்டது. இதனால் இரு மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவனை அடித்ததாக கூறப்படுகிறது.

    அதனை தொடர்ந்து மறுநாள் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் 11 ஆம் வகுப்பு மாணவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த முன் விரோத காரணமாக கடலூரில் இருந்து குறிஞ்சிப்பாடிக்கு அரசு பஸ்சில் 9-ம் வகுப்பு மாணவன் செல்லும்போது அடையாளம் தெரியாத 8 நபர்கள் அரசு பஸ்ருசில் இருந்து இறக்கி சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த 9-ம் வகுப்பு மாணவன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து 8 நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • சமையலறையில் மர்ம கும்பல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து குடும்பத்துடன் எரித்து கொலை செய்ய முயற்சி செய்தனர்.
    • 3 தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மத்திய சிறைச்சாலையில் உதவி ஜெயிலராக மணிகண்டன் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில தினங்களாக மத்திய சிறைச்சாலை தீவிர சோதனையில் செல்போன், சார்ஜர் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகளிடமிருந்து பறிமுதல் செய்தார். மேலும் கைதிகளை கடும் எச்சரிக்கை செய்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தஞ்சாவூருக்கு சென்றிருந்தார். நேற்று அதிகாலை மணிகண்டன் வீட்டில் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சமையலறையில் மர்ம கும்பல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து குடும்பத்துடன் எரித்து கொலை செய்ய முயற்சி செய்தனர். அப்போது அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர்.

    இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறைத்துறை சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் உதயகுமார், டெல்டா பிரிவு உள்ளிட்ட 3 தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் உதவி ஜெயிலர் மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினரை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் யாரேனும் கூலிப்படை ஏவி இந்த சம்பவத்தில் ஈடுபட வைத்தார்களா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் பகுதியில் கூலிப்படையினர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து விசாரணை செய்ய விரைந்துள்ளனர்.

    • விழுப்புரத்தில் பரபரப்பு நகை வியாபாரி காருக்கு மர்ம கும்பல் தீ வைத்தனர்.
    • வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மர்மமான முறையில் எரிவதை கண்டு குமாரசாமி அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் தீயை போராடி அணைத்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் திருவாமாத்தூர் சானந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 38). இவர் விழுப்புரத்தில் தங்க நகை செய்து விற்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் தனது காரில் வெளியூருக்கு சென்று விட்டு இரவு வீட்டின் முன்பு காரை நிறுத்திவிட்டு வீட்டினுள் தூங்கச் சென்றார். நள்ளிரவில் மர்ம நபர்கள் அங்கு வந்து காருக்கு தீ வைத்து விட்டு சென்றனர். தீ லேசாக எரிய தொடங்கி மளமளவென பயங்கரமாக எரிந்தது. 

    அப்போது திடீரென்று வீட்டின் வெளியே தீப்பற்றி எரிவதை அறிந்த குமாரசாமி திடுக்கிட்டு எழுந்து வீட்டின் வெளியே வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மர்மமான முறையில் எரிவதை கண்டு குமாரசாமி அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் தீயை போராடி அணைத்தார். இந்த விபத்தில் காரின் முன் பக்கம் முழுவதும் தீக்கிரையானது. மேலும் இது குறித்து குமாரசாமி விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து காருக்கு தீ வைத்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். 

    • இருசக்கர வாகனத்தை 3 பேர் கொண்ட மர்மகும்பல் அதிகாலை வாகனத்தின் ‘சைடு லாக்கை’ உடைத்து திருடிச்செல்ல முயன்றுள்ளனர்.
    • உடைக்கும் போது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து துரத்திய போது 3 பேரும் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூரை சேர்ந்தவர் சத்தியசீலன். ஆட்டோ டிரைவர். இவர் தனது இருசக்கர வாகனத்தை வேளாங்கண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே நிறுத்திவிட்டு வெளியூர் சென்றுள்ளார்.

    இந்நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அதிகாலை வாகனத்தின் 'சைடு லாக்கை'உடைத்து திருடிச்செல்ல முயன்று ள்ளனர்.

    மற்றொருவர் அருகில் கிடந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் 'சைடு லாக்கை' உடைக்கும் போது சப்தம் கேட்டு அக்கம்ப க்கத்தினர் ஓடிவந்து துரத்திய போது 3 பேரும் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பி சென்று ள்ளனர்

    இந்த சம்பவம் அங்கு இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியு ள்ள தை கொண்டு வேளாங்க ண்ணிபோலீ சில் சத்திய சீலன் புகார் அளி த்தார். அதன் பேரில் போலீசா ர்விசாரணை நடத்தி அதிரா ம்பட்டி னத்தை சேர்ந்த ஹரிஹரன், பட்டுக்கோ ட்டையை சேர்ந்த முகமது ரபிக், முத்துப்பேட்டையை சேர்ந்த பர்வீஸ் அகமது ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    • பண்ருட்டி அருகே வாடகை சைக்கிள் நிறுத்தத்தில் புகுந்து 3 பேரை மர்ம கும்பல் தாக்கினர்.
    • தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கண்டரகோட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (வயது 55). இவர் அதே பகுதியில் வாடகை சைக்கிள் ஸ்டாண்ட் நடத்தி வருகிறார்.  நேற்று இரவு இந்த சைக்கிள் ஸ்டாண்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்த கிருஷ்ணராஜ் அவரது மனைவி காந்திமதி, அவரது மகன் ஹரிகரன் ஆகியோரை பயங்கரமாக தாக்கி அங்கிருந்த மோட்டார் பைக் திருடி சென்றனர். இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பி ரண்டு சபியுல்லா, பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நந்தகுமார், சப்-இன்ஸ் பெக்டர் ரங்கநாதன்மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்வி ரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்குமா? என்பது குறித்து விசாரித்தனர். கணவன், மனைவி, மகனை தாக்கி மோட்டார் பைக் திருடி சென்ற மர்ம கும்பலை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் இந்த பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×