நிலக்கோட்டை அருகே சாலையை துண்டித்த மர்ம கும்பல்

வைகை ஆற்றுப்படுகையில் இரவு பகலாக சமூகவிரோதிகள் மணல் அள்ளி வருகின்றனர்.சாலையை உடைத்து மணல் திருடிச்சென்ற மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வித்துள்ளனர்.
வைகையாற்று படுகையில் துண்டிக்கப்பட்ட சாலை.
வைகையாற்று படுகையில் துண்டிக்கப்பட்ட சாலை.
Published on

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.இதன் அருகே வைகையாற்று படுமை உள்ளது. இந்த கோவிலுக்கு விஷேச நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். மேலும் முக்கிய நாட்களில் தங்கள் முன்னோர்களுக்கு வைகையாற்றில் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவிலின் மேற்கு பகுதியில் சித்தர்கள்நத்தம், மல்லியம்பட்டி கிராம பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை வழியாக விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கொண்டு சென்றனர். பொதுமக்களுக்கும் உதவியாக இருந்தது.

இந்த நிலையில் ஆற்றுப்படுகையில் இரவு பகலாக சமூகவிரோதிகள் மணல் அள்ளி வருகின்றனர். இதனால் சாலையையும் துண்டித்துச்சென்றனர். இதைபார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மயானத்திற்கு செல்லும் சாலையை உடைத்து திருடிச்சென்ற மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com