சின்டெக்ஸ் தொட்டியை உடைத்த மர்ம கும்பல்

நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்
சின்டெக்ஸ் தொட்டியை உடைத்த மர்ம கும்பல்
Published on

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற சார்பில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் முள்வேலி அமைத்து முருங்கை நர்சரி கார்டன் அமைக்க சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பல் சின்டெக்ஸ் தொட்டியை உடைத்து குடிநீர் பைப்பையும் சேதப்படுத்தி உள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதி பொது மக்கள் உடனடியாக சின்டெக்ஸ் டேங்க் மற்றும் குடிநீர் இணைப்பு பைப் லைன் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com