துப்புரவு தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.வீட்டிற்கு வந்த வசந்தி, கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
துப்புரவு தொழிலாளி வீட்டின் பூட்டை  உடைத்து நகை, பணம் கொள்ளை
Published on

ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காடு, வாழவந்தி, சேட்டுக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் ஆரோக்கியசாமி. இவரது மனைவி வசந்தி அதே பகுதியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று வழக்கம்போல் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கிருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து, அதில் இருந்த 8 பவுன் நகைகள், 5 ஆயிரம் ரொக்கத்தையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த வசந்தி, கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து ஏற்காடு போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் செந்தில் ராஜ்மோகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்களை கொண்டு கொள்ளையர்கள் விட்டு சென்ற தடயங்கள், கைரேகைகளை சேகரித்தனர்.

வசந்தி தனது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போனதால் மிகவும் வேதனைக்கு ஆளானார். பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com