தேனி அருகே சமுதாய கூடத்தில் மின் விசிறிகளை திருடிய மர்ம கும்பல்

சமுதாய கூடத்தில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 8 மின் விசிறி களை திருடிச் சென்றனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சிக்குட்பட்ட ராமகாரன் தெருவில் சமுதாய கூடம் உள்ளது. இங்கு புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 8 மின் விசிறி களை திருடிச் சென்றனர்.

இது குறித்து பேரூராட்சி செயல்அலுவலர் சிவக்கு மார் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்ற னர்.

தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் காமு (வயது 50). இவர் தேங்காய் வெட்டும் தொழிலாளி. ஒரு ஆடு மற்றும் 2 குட்டிகளை வளர்த்து வருகிறார்.

அவரது தோட்டத்தில் மேய்ச்சலு க்காக விட்டு வந்த போது ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com