search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palay"

    • சரிவர வேலைக்கு வராததால் சமீபத்தில் அவரை வேலையை விட்டு நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
    • சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    நெல்லை:

    பாளையை அடுத்த சிவந்திபட்டி அருகே உள்ள முத்தூர் நடுத்தெருவை சேர்ந்தவர் அழகப்பன் (வயது 23). இவர் அங்குள்ள தானியக் கிடங்கில் வேலை பார்த்து வந்தார்.

    அவர் சரிவர வேலைக்கு வராததால் சமீபத்தில் அவரை வேலையை விட்டு நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அழகப்பன் யாரிடமும் பேசாமல் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். கடந்த 7-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    இது தொடர்பாக சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உலக மிதிவண்டி நாளை முன்னிட்டு 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
    • மிதிவண்டி உடல் நலத்திற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் மிதிவண்டி பயன்தரும் முறை குறித்து விளக்கி கூறினர்.

    நெல்லை:

    பாளை புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் உலக மிதிவண்டி நாளை முன்னிட்டு 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

    பள்ளி முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன் தலைமை தாங்கினார். மிதிவண்டி கழகத்தின் தலைவர் டாக்டர் அருள்விஜயகுமார், மிதிவண்டி கழகத்தின் தலைமை அதிகாரி ஹரிபிரதான், ரெனியல் மற்றும் சுல்தான் ஹமீது சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    அவர்கள் பேசும் போது, உலக மிதிவண்டி தினம் கொண்டாடப்படுவதற்கு காரணமாக விளங்கும் மிதிவண்டியின் அசல் தன்மை, பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மை குறித்தும், மிதிவண்டியின் முக்கியத்துவம் பயிற்சி செய்யும் முறை குறித்தும் உரையாற்றினர். மேலும் மிதிவண்டி உடல் நலத்திற்கும், சுற்றுசுழல் பாதுகாப்பிற்கும் மிதிவண்டி பயன்தரும் முறை குறித்து கூறினர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் புஷ்பலதா பூரணன் செய்திருந்தார். இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    ×