என் மலர்
நீங்கள் தேடியது "Excitement"
- காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
- கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளிலும் நோயாளிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது. குறிப்பாக கடலூர் அரசு தலைமை மருத்துவமனை யில் மட்டும் கடந்த ஒரு வார மாக தினசரி 500-க்கும் மேற்பட்டோர் சளி, காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதில் சிறுவர்களே அதிகள வில் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொண்ட தில், 83 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டி ருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதற்கிடையே சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 600-க்கும் மேற்பட்டோர் இன்று கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதனால் பதிவு சீட்டு வாங்கும் இடத்தில் நோயா ளிகள் கூட்டம் அலை மோதியது. இவர்களில் பெரும்பாலானோர் காய்ச்ச லால் பாதிக்கப்பட்ட தங்க ளது குழந்தைகளுடன் வந்தி ருந்தனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் காத்தி ருந்து சிகிச்சை பெற்று சென்றனர்.
இதில் 3 நாட்களுக்கு மேல் தொடர் காய்ச்சலால் அவதிப்பட்ட 70-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் காய்ச்சல் பரிசோ தனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவு நாளை (செவ்வாய்க்கிழமை) தெரி விக்கப்பட உள்ளது. கடலூர் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி 36 ேபர்கள் டெங்கு காய்ச்ச லால் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்க தாகும்.
- மோட்டார் சைக்கிள் லாரியில் சிக்கி 1 கி.மீ. தூரம் இழுத்து சென்றதால் பரபரப்பு
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கொஞ்ச மங்கலம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவர் ஒழுந்தியாம்பட்டு பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சேகரின் மகன் சுதாகர் (வயது 26) விவசாயி. நேற்று இரவு சுதாகர் கிளியனூர் பகுதியை சேர்ந்த தனது நண்பர் அசோக் (27) என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் ஒழுந்தியாம்பட்டில் வேலை பார்க்கும் தனது தந்தை சேகரை பார்க்க சென்றனர். பின்னர் ஒழுந்தியாம்பட்டு அருகே சாலை ஒரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு 2 பேரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது புதுவையில் இருந்து திண்டிவனம் நோக்கி லாரி ஒன்று வந்தது.
இதனையடுத்து லாரி ஒழுந்தியாம்பட்டு பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த சுதாகர், இவரது நண்பர் அசோக் மீது வேகமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்தது. இந்த விபத்தில் லாரி மோதி 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சாலையில் சிதறி விழுந்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலே சுதாகர் துடிதுடித்து இறந்தார். அசோக் பலத்த படுகாயம் அடைந்தார். இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திவிட்டு லாரி டிரைவர் தொடர்ந்து அங்கு இருந்து லாரியை ஓட்டி சென்றார். அப்போது சுதாகர், அசோக் வந்த மோட்டார் சைக்கிள் லாரியில் சிக்கி கொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றது. இதில் மோட்டார் சைக்கிள் சாலையில் வேகமாக உறசி பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த பயங்கர சத்தத்தை கேட்டு பதறினர். பின்னர் அவர்கள் சாலையில் தறிகெட்டு வந்த லாரியை மடக்கி டிரைவரை பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து கிளியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிவ ண்ணன் தலைமையி லான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விப த்தில் உயிரிழந்த சுதாகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடை ந்த அசோகை மீட்டு சிகிச்சை க்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இந்த விகத்தை நடத்திய தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியை சேர்ந்த முத்துபாண்டி (40) லாரி டிரைவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் நின்று பேசிக்கொண்டி ருந்தபோது லாரி மோதி விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அந்தியூர் பகுதியில் முகமூடி அணிந்து மர்ம நபர்கள் குழந்தைகளை கடத்த வந்ததாக பரபரப்பு ஏற்பட்டது
- எனவே போலீசார் அந்தியூர் பகுதியில் இரவு ரோந்து பணியினை தீவிரப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அந்தியூர்;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சாந்திய பாளை யம் பகுதியில் ஏராளமான பொது மக்கள் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியில் ஒரு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் நேற்று இரவு குழந்தைகள் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ஒரு காரில் மர்ம நபர்கள் சிலர் முகமூடி அணிந்து கொண்டு வந்தனர். அந்த மர்ம நபர்கள் குழந்தையை கடத்த வந்ததாக கூறப்படுகிறது.
அவர்கள் பொதுமக்களை கண்டதும் அங்கு இருந்து காரில் தப்பி சென்றாக மக்கள் கூறினர். இது குறித்த தகவல் அந்தப் பகுதி பொதுமக்கள் சமூக வளை தலங்களில் பதிவிட்டனர். இந்த தகவல் வேகமாக பரவியது. இத னால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இது குறித்து போலீசா ருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. இதனை அடுத்து அந்தப் பகுதிக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல், கமலக்கண்ணன் மற்றும் போலீசார் சென்று விசா ரணை நடத்தினர்.
மேலும் காரில் வந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசார ணை நடத்தி வரு கிறார்கள். இதனால் அந்த பகுதி பொது மக்கள் ஒரு வித அச்சத்தோடு இருந்து வரு கிறார்கள். எனவே போலீசார் அந்தியூர் பகுதியில் இரவு ரோந்து பணியினை தீவிரப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- அலுவலகத்தில் நேற்று சார் பதிவாளர் கணேசன் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
- போலீசார் வேறு வழியின்றி அவர்களை விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
உடுமலை:
உடுமலை கச்சேரி வீதியில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. அலுவலகத்தில் நேற்று சார் பதிவாளர் கணேசன் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.அப்போது அங்கு வருகை தந்த உடுமலை தாலுகா சாலையூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வி மற்றும் அவரது கணவர் ஆறுச்சாமி ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பத்திரப்பதிவு சம்பந்தமாக சார்பதிவாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அலுவலகப்பணிக்கு இடையூறு செய்ததுடன் கூச்சல் போட்டு ரகளை செய்தனர்.அதைத் தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகத்தின் மூலம் உடுமலை போலீஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் பேரில் அங்கு வருகை தந்த போலீசார் அந்த தம்பதியிடம் சமாதானம் பேசினார்கள். அதற்கு அவர்கள் உடன்பட மறுத்து தொடர்ந்து சார் பதிவாளர் மீது குற்றச்சாட்டு வைத்து ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் வேறு வழியின்றி அவர்களை விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இது குறித்து சார்பதிவாளர் கணேசன் போலீசில் புகார் ஒன்றையும் அளித்தார்.அதன் பேரில் மனுஏற்பு ரசீது பதிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த தம்பதிக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
அலுவலகத்தில் நேற்று சார் பதிவாளர் கணேசன் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.இந்த சம்பவத்தால் பத்திர பதிவு பாதிக்கப்பட்டதுடன் கச்சேரி வீதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.
- மண் எண்ணையை உடலில் சரசரவென ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
- மேகராஜிடம் இருந்து கேனை பறித்து அவரது உடலில் தண்ணீர் ஊற்றினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அப்போது திருவிடைமருதூர் அருகே உள்ள விஸ்வநாதபுரம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த தொழிலாளி மேகராஜ் (வயது 32) என்பவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். திடீரென அவர் அலுவலகம் முன்பு மறைத்து வைத்திருந்த கேனை வெளியே எடுத்து மண் எண்ணெயை உடலில் சரசரவென ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதிர்ச்சி அடைந்த போலீசார் ஓடி வந்து மேகராஜிடம் இருந்து கேனை பறித்து அவரது உடலில் தண்ணீர் ஊற்றினர்.
எற்காக தற்கொலைக்கு முயன்றீர்கள் என மேகராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதற்கு மேகராஜ் கூறும்போது :-
எனக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. எனக்கும் என் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் அவர் கோபித்துக் கொண்டு குழந்தையுடன் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். திரும்ப சமதானபடுத்தி அழைப்பதற்காக வீட்டுக்கு சென்றேன். ஆனால் அவர்கள் குடும்பத்தினர் என்னை அவமானப்படுத்தி துரத்தி அனுப்பி விட்டனர். இது குறித்து நான் நாச்சியார் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றேன். ஆனால் அங்கு பணிபுரியும் சில போலீசார், பொய் வழக்கு போட்டு விடுவோம் என கூறி என்னை மிரட்டினர். ஏற்கனவே என் மனைவி, குழந்தை என்னை விட்டு பிரிந்து சென்று விட்டனர். அந்த மன வேதனையில் இருக்கும் நான் போலீசார் தற்போது மிரட்டுவதால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இதனால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றேன் என்றார்.
இதனை தொடர்ந்து மேகராஜிடம் மேலும் விசாரணை நடத்துவதற்காக அவரை அங்கிருந்து போலீசார் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ய போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
- சோதனையில் ஏட்டு கோடீஸ்வரன் மது அருந்தி இருப்பது தெரியவந்தது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் இரவு ஒரு பயணி நின்றார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட வெளிப்பாளையம் போலீஸ் ஸ்டேசன் ஏட்டு கோடீஸ்வரன்(33) அந்த பயணியிடம் ஏன் இங்கு நிற்கிறாய் என கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஏட்டு கோடீஸ்வரன் அந்த பயணியை லத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.இதில் காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அந்த பயணியை லத்தியால் தாக்கி யது சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் பயணியை தாக்கியது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங்கிற்கு தகவல் தெரிந்தது. உடனே இரவு ரோந்து பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜிடம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ய எஸ்பி உத்தரவிட்டார். இதன்பே ரில் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் போலீஸ் காரர் பயணியை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து ஏட்டு கோடீஸ்வரனை சோதனை செய்ய நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் குழுவினர் சோதனை செய்ததில் ஏட்டு கோடீஸ்வரன் மது அருந்தி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இரவு ரோந்து பணியில் மது அருந்தி ஒழூங்கீனமாக நடந்து கொண்டதற்காக ஏட்டு கோடீஸ்வரனை சஸ்பெ ண்ட் செய்து எஸ்பி ஹர்ஷ்சிங் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
- சுய உதவி குழுவில் கடன் வாங்கி அதனை வீட்டில் வைத்துள்ளார்.
- இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவாரூர்:
திருவாரூர் மணிகண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயமோகன். இவரது மனைவி சூர்யா (வயது 28).
இருவரும் விவசாய தொழிலாளிகள்.
சூர்யா மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி அதனை வீட்டில் வைத்துள்ளார். இந்த பணத்தை மனைவி சூர்யாவுக்கு தெரியாமல் கணவர் ஜெயமோகன் எடுத்துச் சென்று செலவு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக் கடன் தொகையினை கணவர் செலவு செய்து விட்டதால் எப்படி திரும்ப செலுத்துவது என்ற கவலையில் இருந்த சூர்யா கடந்த சிலதினங்களுக்கு முன்பு வீட்டில் யாருக்கும் தெரியாமல் மண்ணெண்ணெய் உடலில் ஊற்றிக் கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார்.
தீயின் வெப்பத்தால் வலி தாங்க முடியாமல் சூர்யா அலறிக் கொண்டே கீழே விழுந்தார்.
இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சூர்யா சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது தொடர்பாக திருவாரூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகளிர் சுய உதவிக் குழு கடன் பணத்தை கணவர் செலவு செய்து விட்டதால் எப்படி திரும்ப செலுத்துவது என்ற விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கடந்த 3 நாட்களுக்கு முன்பு வைத்தனர்
- போலீஸ் பாதுகாப்புடன் நடவடிக்கை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூரில் உள்ள புறம்போக்கு இடத்தில் காட்டுக்காநல்லூர் கிராமத்தில் ஆதி திராவிடர் நலத்துறை மூலம் நில எடுப்பு செய்யப்பட்டிருந்தது.
இங்கு அருந்ததியர் இன மக்களுக்கு வீட்டுமனைகள் வழங்கப்பட்டு அவர்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.
இங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு அதிகாலை விநாயகர் சிலையை அனுமதியின்றி வைத்திருந்தனர்.
இதனை அவர்களே அகற்றும்படி தெரிவித்தும் மேற்படி இடத்தில் பிள்ளையார் சிலையை அகற்றவில்லை.
இதனையடுத்து ஆரணி தாசில்தார் மஞ்சுளா தலைமையில் அளவீடு செய்யப்பட்டதில் அந்த இடம் தெரு என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து வருவாய்த்துறையினர் கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் ஊராட்சி நிர்வா கத்தினருடன் இணைந்து விநாயகர் சிலையை அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- தி.மு.க.கல்வெட்டில் பா.ஜ.க.வினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு
- நகராட்சி தலைவருக்கு தகவல் கொடுத்தனர்
கரூர்,
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சிக்குட்பட்ட ஹைஸ்கூல்மேடு பகுதியில் புகழூர் நகர திமுக சார்பில் திமுக கொடிகம்பம் மற்றும் உயரமான கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.அந்த கல்வெட்டில் கரூரில் நடைபெறும் கரூர் மாற்றுத்திற்கான மாநாடு மற்றும் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்வதற்கான விளம்பர வால்போஸ்டரை பாஜகவினர் ஒட்டி இருந்தனர்.இதுகுறித்து புகழூர் நகராட்சித் தலைவரும், நகரக் கழக செயலாளருமான சேகர் என்கிற குணசேகரனுக்கு அப்பகுதியை சேர்ந்த திமுகவினர் தகவல் தெரிவித்தனர். உடனே ஏராளமான திமுகவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்குள்ள திமுக கல்வெட்டில் பாஜகவினர் விளம்பர வால்போஸ்டர் ஒட்டி இருப்பது தெரிய வந்தது.இது குறித்து உடனடியாக மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் நவாஸ்கான் மற்றும் திமுகவைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் மூலம் உடனடியாக வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் மூலமாக கல்வெட்டில் வால் போஸ்டர்களை ஒட்டிய சம்மந்தப்பட்டவர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்து அவர்கள் ஒட்டிய போஸ்டர்களை அவர்கள் மூலம் சுத்தம் செய்ய வைத்தனர். இதனால் அப்பகுதில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- விவசாயி ரேஷன் கடை விற்பனையாளரை உள்ளே வைத்து கடையை இழுத்து பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது
- விவசாயியான நடேசன் (வயது 45) என்பவர் எனது குடும்ப அட்டைக்கு அரிசி கொடுங்கள் என கேட்டுள்ளார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள மலையாளபட்டி கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையில் சுமார் 900-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அந்த கடையின் விற்பனையாளர் ராஜா கடையை திறந்து வைத்து மண்எண்ணெய் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது பூமிதானம் கிராமத்தை சேர்ந்த விவசாயியான நடேசன் (வயது 45) என்பவர் அங்கு வந்து எனது குடும்ப அட்டைக்கு அரிசி கொடுங்கள் என கேட்டுள்ளார். அப்போது விற்பனையாளர் ராஜா இந்த மாதம் வந்த அரிசி முழுமையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. உங்களுடன் சேர்த்து 8 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி குறைவாக வந்துள்ளது. இதனை அடுத்த மாதம் முன்னுரிமை அடிப்படையில் முதலில் உங்களுக்கு வழங்குகிறோம். அப்போது வந்து வாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.
இதை ஏற்க மறுத்து ஆத்திரம் அடைந்த நடேசன் இப்போதே எனக்கு அரிசி வழங்க வேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் யாருக்கும் எந்த பொருளும் வழங்கக்கூடாது எனக்கூறி விற்பனையாளரான ராஜாவை உள்ளே வைத்து ரேஷன் கடையின் கதவை இழுத்துப் பூட்டி உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அலுவலர் பழனியப்பன், கிராம நிர்வாக அலுவலர் ரங்கராஜ் மற்றும் அரும்பாவூர் போலீசார் கடையை பூட்டிய நடேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அரிசி வந்தவுடன் உங்களுக்கு முதலில் வழங்கப்படும் என உறுதி அளித்தார்கள். இதனைத் தொடர்ந்து போராட்டத்தை நடேசன் கைவிட்டார். அதன் பின்னர் ரேஷன் கடையை திறந்து பொதுமக்களுக்கு மண்எண்ணெய் வழங்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.