search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு  தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
    X

    தீ குளிக்க முயன்ற தி.மு.க. பிரமுகரை படத்தில் காணலாம்.

    கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

    • கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
    • அதே பகுதி சேர்ந்த வாலிபர் ஒருவர் சிலையை அகற்றி விடுவதாக கூறி, இது சம்பந்தமாக கேட்டபோது சிவகுருவை தாக்கியதாக கூறினார்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் வாலிபர் ஒருவர் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தார்.பின்னர் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கிருந்த போலீசார் அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், மேல்பட்டாம்பாக்கம் சேர்ந்தவர் சிவகுரு (வயது 33) இவர் தி.மு.க. பிரமுகர். அதே பகுதியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை சொந்த செலவில் செய்து வைத்துள்ளார். ஆனால் அதே பகுதி சேர்ந்த வாலிபர் ஒருவர் சிலையை அகற்றி விடுவதாக கூறி, இது சம்பந்தமாக கேட்டபோது சிவகுருவை தாக்கியதாக கூறினார். ஆகையால் அந்த நபரை கைது செய்ய கோரி பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததாக என தெரிவித்தார். அப்போது போலீசார் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிடம் புகார் அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடும் எச்சரிக்கை செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×