search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bankruptcy"

    • இரவு வழிபாடு முடிந்த பின்னர் கோவிலை பூட்டி விட்டு சென்றனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் அருகே திட்டச்சேரி கிராமத்தில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் கோவில் உள்ளது. இக்கோவிலில் இரவு வழிபாடு முடிந்த பின்னர் கோவிலை பூட்டி விட்டு சென்றனர்.

    மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த உண்டியலை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் பந்தநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்தை வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கோவிலின் பின்புறம் உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை பார்த்தனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி செல்வம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    இதேபோல், பந்தநல்லூர் அருகே நெய்குன்னம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் உண்டியலை நள்ளிரவு மர்மநபர்கள் திருட முயன்றுள்ளனர். இதனை அறிந்த பொதுமக்கள் சிலர் கோவிலின் அருகில் சென்றதால் மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. தொடர் சம்பவங்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • கோவில் பின்புறம் வைத்து உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
    • சி.சி.டி.வி. கேமரவை மேலே திருப்பி விட்டு விட்டு ஹார்டு டிஸ்கை மட்டும் திருடி சென்றுள்ளனர்

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பஸ் நிலையத்தில் இருந்து நயினார் பாளையம் செல்லும் சாலையில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு இரவு சென்ற மர்ம நபர்கள் உண்டியலை தூக்கிச் சென்று கோவில் பின்புறம் வைத்து உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். கோவில் கருவறை பக்கத்தில் உள்ள சி.சி.டி.வி. ஹார்ட் டிஸ்கையும் திருடி சென்றுள்ளனர். இது குறித்து கோவில் நிர்வாகம் சின்னசேலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக், தனிபிரிவு போலீஸ்காரர் கணேசன் ஆகியோர் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கோவில் உண்டியல் பணம் எண்ணும் பணியானது 3 நாட்களுக்கு முன்பு தான் நடைபெற்றதால் பெரிய அளவில் பணம் திருட்டு போகாமல் தப்பியது என்றும், அதனால் உண்டியலில் 300 ரூபாய் மட்டுமே இருந்ததாகவும் சி.சி.டி.வி. கேமரவை மேலே திருப்பி விட்டு விட்டு ஹார்டு டிஸ்கை மட்டும் திருடி சென்றுள்ளனர் என்றும் கோவில் உள்ளே இருந்த சாமி நகைகள், வெண்கல சிலைகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது ஆனால் திருடர்கள் குறி வைத்து ஹார்ட் டிஸ்கை மட்டும் திருடிச் சென்றுள்ளனர் எனமுதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • மர்ம நபர் ஒருவர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றார்.
    • ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிப்பு.

    கும்பகோணம்:

    கும்பகோணம் குமரன் தெரு பகுதியில் ஆதி சாந்தகுண மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ந்தேதி இரவு மர்ம நபர் ஒருவர் கோவிலின் உள்ளே நுழைந்து கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றார்.

    இந்த காட்சி கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கோவிலின் உள்ளே நுழைந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற நபர் கும்பகோணம் செட்டி மண்டபம் அன்னை அஞ்சுகம் நகர் பகுதியைச்சேர்ந்த

    மணி என்பது தெரியவந்தது. இதையடுத்து மணியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.1-ல் நீதிபதி பாரதிதாசன் முன்பு நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், குற்றம் நிரூபிக்கப்பட்ட மணிக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

    சென்னையிலிருந்து பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு சென்ற 4 பேர் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

    கடலூர்:

    கடலூர் அருகே ரெட்டிச்சாவடி பெரிய காட்டுப்பாளையம் சாலை ஓரத்தில் திருக்காடீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது‌. இன்று அதிகாலை கோவிலில் இருந்து சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.அப்போது பெரியக்காட்டுபாளையம் பகுதியில் திடீரென்று மின்சார தடை ஏற்பட்டு இருந்ததால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியில் வந்தனர். அப்போது கோவிலில் இருந்து தொடர்ந்து சத்தம் கேட்டு வந்ததால், சந்தேகம் வந்த பொதுமக்கள் கோவிலுக்கு சென்று பார்த்தனர்.

    அப்போது கோவிலில் இருந்த உண்டியலின் பூட்டை 4 பேர் கொண்ட கும்பல் உடைத்துக் கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் 4 பேரை பிடிக்க முயன்றனர். ஆனால் 4 நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை விரட்டி சென்று பிடித்தனர்.இதனை தொடர்ந்து ரெட்டிச் சாவடி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 4 பேரை பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சென்னை கோட்டூர்புரம் சேர்ந்தவர்கள் கரண் (வயது 18), செல்வம் (வயது 24), சூரிய பிரகாஷ் (வயது 18) மற்றும் 17 வயது சிறுவன் என தெரிய வந்தது. மேலும் இவர்கள் சென்னையிலிருந்து பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு சென்றதாகவும், அப்போது பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

    இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • கடலூரில் விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து திருட முயன்ற கொள்ளையர்கள் அலாரம் ஒலித்ததால் தப்பி ஓடினர்.
    • கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை யர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திரவுபதி அம்மன் சன்னதியும் அமையபெற்று உள்ளது.இன்று அதிகாலை விநாயகர் கோவிலில் இருந்து திடீரென்று அதிக ஒலியுடன் அலாரம் அடித்தது. இதனை கேட்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வெளியில் வந்து பார்த்தபோது விநாயகர் கோவிலில் உள்ள திரவுபதி அம்மன் சன்னதி முன்பு இருந்த இரும்பு கேட் திறந்து இருந்தது.

    இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது இரும்பு கேட்டில் இருந்த பூட்டு உடைந்து கிடந்தது.கோவில் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியலில் இருந்த பூட்டு உடைந்து சிதறி கிடந்தன. அப்போது திடீரென்று அலாரம் அடித்த காரணத்தினால் கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் தப்பி ஓடி உள்ளனர்.

    இதனை தொடர்ந்து கோவில் வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் யார்? என சி.சி.டி.வி காமிரா மூலம் போலீசார் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை யர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூரில் மையப் பகுதியாக உள்ள மஞ்சக் குப்பம் விநாயகர் கோவிலில் அதிகாலையில் பூட்டை உடைத்து உண்டியலில் மர்ம நபர்கள் திருட முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது‌. மேலும் எந்நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    ×