search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "repair"

    • பாலம் 1961-ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை யினரால் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
    • பாலத்தின் 2 பக்கமும் தடுப்பு சுவர்கள் பெயர்ந்து விழுந்து விட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இதில் நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்க தலைவர் முகம்மது அயூப் தலைமையில் நிர்வாகிகள் மைதீன், சித்திக், சம்சுதீன், செய்யது முகம்மது சேட் ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தரைப்பாலம்

    நெல்லை மாநகராட்சி மேலப்பாளையத்தில் இருந்து டவுனுக்கு செல்லும் சாலையில் நத்தம் தாமிரபரணி தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் 1961-ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை யினரால் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் இந்த பாலம் சில ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

    கோரிக்கை

    இந்த பாலத்தில் ஏராளமான பள்ளங்கள் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். பாலத்தின் 2 பக்கமும் தடுப்பு சுவர்கள் பெயர்ந்து விழுந்து விட்டது. இதனால் இரவு நேரங்களிலோ, வாகனங்கள் தடுமாறி விபத்து ஏற்பட்டாலோ ஆற்றுக்குள் விழுந்து விடும் அபாயம் உள்ளது.

    எனவே உடனடியாக இந்த பாலத்தின் தரைப்பகுதியை சீரமைத்து பாலத்தின் இருபுறமும் முழுமையாக தடுப்புச்சுவர் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதிய பாலம் அமைத்திட திட்டமிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    • சாமி புறப்பாடு செய்து சோமவார மடத்தில் இருந்து அன்னதானம் செய்வது வழக்கம்.
    • கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டிடம் கட்ட அனுமதி.

    வேதாரண்யம்:

    வேதாரண்யேஸ்வர சுவாமிக்கு தெற்கு வீதியில் சோமவார மடம் இருந்து வருகிறது.

    இந்த மடத்தில் ஆண்டுக்கு ஒரு முறை திருப்பூண்டி சைவ செட்டியார்கள் 4வது சோமவாரத்தில் உபயங்கள் செய்து, சாமி புறப்பாடு செய்து அந்த சோமவார மடத்தில் இருந்து அன்னதானம் செய்வது வழக்கம்.

    இந்த இடத்திற்கு திருப்பூண்டி சைவ செட்டியார்கள் சார்பில் கோவிலுக்கு முறையாக குத்தகை செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த கட்டிடத்தில் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து குடியிருந்து வருகிறார்தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்ததால் அந்த கட்டிடத்தை இடித்து புதிதாக கட்டிடம் கட்ட திருப்பூண்டி சைவ செட்டியார்கள் அறநிலையத்துறை ஆணையருக்கு அனுமதி கோரினர்.

    இந்த கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத்துறையினர் அந்த கட்டித்தை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர் இந்த நிலையில் தற்சமயம் அந்த கட்டிடத்தில் ஆக்கிரமிப்பு செய்து வரும் தனி நபருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டு, அதன் நகல் கதவில் ஒட்டப்பட்டது.

    அந்த ஆக்கிரமிப்புதாரர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து குடியிருந்து வந்தார்.

    இந்நிலையில் அறநிலையத்துறை சார்பில் அந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக கட்டிடம் கட்ட திருப்பூண்டி சைவ செட்டியார்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

    இதன்படி நேற்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவுபடி நாகை அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, வேதாரண்யம் கோவில் நிர்வாக அதிகாரி கவியரசு மற்றும் வருவாய்துறையினர், கோவில் பணியாளா்கள் ஜே.சி.பிஇயந்திரம் மூலம் கட்டிடத்தை வேதாரண்யம்காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகவேல் ஆய்வாளர்கள்குணசேகரன் கன்னிகா, பசுபதி, மற்றும் போலிசார், பாதுகாப்புடன் பழுதடைந்த ஓட்டுவீட்டைஇடித்து அகற்றினர்

    பின்பு திருக்கோயில் வசம் இடம் எடுக்கப்பட்டது. அக்கிரமிப்பில் இருந்து மீட்க பட்டசொத்தின் மதிப்பு சுமார்ரூ. 1 கோடி என கூறப்படுகிறது.

    • பள்ளி கட்டிடம் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டவில்லை.
    • கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்–குட்பட்ட கீழத்தென்பாதி 17-வதுவார்டில் வார்டு குழு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. நகர மன்ற கவுன்சிலர் ரம்யாதனராஜ் தலைமை வைத்தார்.

    துணைத்தலைவர் சுப்பராயன், வருவாய் ஆய்வாளர் சார்லஸ், கணக்கர் ராஜகணேஷ் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் ஆணையர் வாசுதேவன் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து பின்பு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    கூட்டத்தில் பொதுமக்கள் கீழத்தென்பாதி நகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளி கட்டிடம் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்தும் புதிய கட்டிடம் கட்டவில்லை. இதனால் மாணவ- மாணவிகள் சமுதாயக் கூடத்தில் கல்வி கற்கும் நிலை இருந்து வருகிறது.

    மாணவ- மாணவிகளின் நலன் கருதி புதிய பள்ளி கட்டிடம் கட்ட வேண்டும். 17 வது வார்டில் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். குடிசை பகுதி நிறைந்த இப்பகுதியில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கூட்டத்தில் வார்டு குழு உறுப்பினர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகரப் பகுதியில் சேதமடைந்து காணப்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.
    • மழை பெய்தாலே அங்குள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகரப் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் நெல்லை, தச்சநல்லூர் பகுதிகளில் பெரும்பான்மையான பணிகள் முடிவடைந்த நிலையில் மாநகரப் பகுதியில் சேதமடைந்து காணப்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக டவுன் ஆர்ச் முதல் மவுண்ட் ரோடு வழியாக காட்சி மண்டபம் வரையிலும் மிகவும் மோசமாக இருந்த சாலைகள் தற்போது சீரமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் காட்சி மண்டபத்தில் தொடங்கி பேட்டை குளத்தாங்கரை பள்ளிவாசல் வரையிலும் உள்ள சாலை மேடு, பள்ளங்களாக காட்சியளிப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அந்த சாலை எப்போது சீரமைக்கப்படும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    நடந்து செல்வதற்கு கூட முடியாத அளவுக்கு இந்த சாலை இருப்பதாகவும், சிறிய அளவு மழை பெய்தாலே அங்குள்ள பெரிய அளவு பள்ளங்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை இருப்பதாகவும் அவர்கள் புகார் கூறுகின்றனர்.

    எனவே இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை சீரமைக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்க தலைவர் முகமது அய்யூப் நெல்லை மற்றும் பேட்டை நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    • செங்கோட்டை கூட்டுறவு பால்பண்ணை அருகே திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு வருகிறது.
    • அந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை கூட்டுறவு பால்பண்ணை அருகே திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு வருகிறது.

    அதனை நகராட்சி ஊழியர்கள் சீரமைக்கும் போது தோண்டப்படும் பள்ளங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

    மேலும் அந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.

    இச்சாலை வழியாக நாள்தோறும் ஆயிரகணக்கான வாகனங்கள் சென்றுவரும் நிலையில் தற்போதும் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் சென்று வருகிறது.

    எனவே உயர் அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நாசரேத் மெயின் ரோட்டில் உள்ள இடத்தில் கூடுகிறது.
    • சந்தைக்கு வருகிற சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வசதியாக நின்று வாங்கி செல்ல முடியவில்லை.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நாசரேத் மெயின் ரோட்டில் உள்ள இடத்தில் கூடுகிறது.

    கடந்த பல வருட காலமாக இந்த சந்தையில் பழமையான கட்டிடத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தில் வைத்து தான் வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.

    சந்தைக்கு வருகிற சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வசதியாக நின்று வாங்கி செல்ல முடியவில்லை. மேலும் பழமையான கட்டிடத்தில் கழிப்பிடம் ஒன்று புழக்கத்தில் இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் மிகவும் சங்கடப்படுகின்றனர்.

    எனவே பொதுமக்கள் வியாபாரிகள் நலம் கருதி நவீன கழிப்பிட வசதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் மழைக்காலங்களில் வாரச்சந்தையில் ரோடுகளில் மணலில் தண்ணீர் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.

    இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக வாரச் சந்தையை பழுதுபார்த்து சீரமைக்காவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என பாரதிய ஜனதா கட்சியினர் அறிவித்துள்ளனர். எனவே பேரூராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக வரும் மழை காலத்திற்கு முன்பாக வாரச் சந்தையில் பழைய கட்டிடங்களை அப்புறப்படுத்தி புதிய பொழிவுடன் கட்டிடங்கள் கட்டி சந்தை முழுவதும் சிமெண்ட் சாலைகள் அமைத்து வியாபாரிகள் வியாபாரம் செய்யவும், பொதுமக்கள் கஷ்டமின்றி பொருட்கள் வாங்கி செல்லவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாரச் சந்தை வியாபாரிகளும், சுற்றுப்புற கிராம மக்களும் பேரூராட்சி நிர்வாகத்தினருக்கும் மற்றும் அனைத்து கட்சிகளுக்கும் கோரிக்கை மனுக்கள் கொடுத்துள்ளனர்.

    • பழனி ரோடு ஒருவழிப்பாதையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்து வருகிறது.

    உடுமலை :

    உடுமலை பேருந்து நிலையம் அருகே பழனி சாலையையும் பைபாஸ் ரோட்டில் இணைக்கும் வகையில் இணைப்பு சாலை உள்ளது. பழனி ரோடு ஒருவழிப்பாதையாக பயன்படுத்தப்பட்டு வருவதால் இந்த இணைப்பு சாலையை இப்பகுதியில் வரும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன. அதோடு பேருந்து நிலையத்திலிருந்து அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு செல்லும் முக்கிய சாலையாகவும் இந்த இணைப்பு சாலை உள்ளது .

    இந்நிலையில் இந்த இணைப்பு சாலை முழுவதும் தார் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது .மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்து வருகிறது. இதனால் இப்பகுதியில் வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். பழுதடைந்துள்ள சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • பாழடைந்த நிலையில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறினார்.
    • கோவில்பத்து, கிடாரங்கொண்டான் ஊராட்சிகளில் நடைபெறும் திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியம், மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் கலெக்டர் லலிதா சத்துணவு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    நூலகம் மற்றும் பஞ்சாயத்து கணக்குகள் 100 நாள் திட்டத்தில் வேலை நடைபெறும் கணக்கு பதிவுகளை ஆய்வு செய்தார்.

    பின்னர் பாழடைந்த நிலையில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறினர்.

    பின்னர் மரக்கன்றுகளை நட்டார்,தலையுடையார் கோவில்பத்து, கிடாரங்கொண்டான் ஊராட்சிகளில் நடைபெறும் திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர். குறைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தார்.

    அப்போது செம்பனார்கோவில் ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன் ஊராட்சி மன்ற தலைவர் தேவிசுரேஷ், துணைத்தலைவர் ராஜகோபால், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் நாகேந்திரன், உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

    • ரெயில்வே சாலை மிகவும் பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக சேதம் அடைந்திருந்தது.
    • 300 மீட்டர் நீளத்தில், 8 மீட்டர் அகலம் கொண்ட புதிய ஈரடுக்கு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

    பாபநாசம்:

    பாபநாசம் ரயில் நிலையத்தில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பாபநாசம் ரயில்வே சாலை மிகவும் பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக சேதம் அடைந்திருந்தது.

    இந்த சாலையினை புதுப்பிக்க வலியுறுத்தி பாபநாசம் ரயில் பயணிகள் சங்கம், தஞ்சை மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் பாபநாசம் வர்த்தக சங்கம் ஆகியோர் தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்தித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் பாபநாசம் ரயில்வே சாலைக்கு ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 300 மீட்டர் நீளத்தில், 8 மீட்டர் அகலம் கொண்ட ஈரடுக்கு புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

    இப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்த ரயில்வே கோட்ட பொது மேலாளருக்கு திருச்சி தென்னக ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் சரவணன், நெல்லை மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க செயலாளர் கிரி பாபநாசம் வர்த்தக சங்கத் தலைவர் குமார், தென்னக ரயில்வே கோட்ட முதல் நிலை ஒப்பந்தக்காரர் சுரேஷ் ரெட்டி ஆகியோர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    • கீழத்தெருவில் பல ஆண்டு காலமாக சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
    • பொதுமக்கள் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்திடம் சாலை அமைத்து தர கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியம் மணலி ஊராட்சி, எம்.கே நகர் கீழத்தெருவில் பல ஆண்டு காலமாக சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வந்தனர்.

    வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் சூழலில் பொதுமக்கள் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்திடம் சாலை அமைத்து தர கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஊராட்சி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பொதுமக்கள் பழுதடைந்த சாலையில் நாற்று நடும் நூதன போராட்டத்தை நடத்தினர்.

    • மாலை மலர் செய்தி எதிரொலியால் தாழ்வாக சென்ற மின்கம்பி சீரமைக்கப்பட்டது.
    • இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட நேசனேரி கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்திற்கு 5 முறை பஸ்கள் வந்து செல்கின்றன.

    இந்த பஸ்களில் திருமங்கலம் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் சென்று படித்து வந்தனர். கிராம மக்கள், கல்லூரி மாணவர்கள் இந்த அரசு பஸ்களை நம்பி இருந்தனர். இந்த நிலையில் நேசனேரி- செங்கப்படை ரோட்டில் அமைந்துள்ள மின் கம்பிகள் உயரம் குறைந்து தாழ்வா னதாலும், மழைக்கு சாலைகள் குண்டு குழியுமாக இருந்ததாலும் நேசனேரி கிராமத்திற்குள் வராமல் அரசு பஸ்கள் கடந்த 3 தினங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதுகுறித்த செய்தி மாலை மலரில் வெளியானது.

    மின்வாரிய அதிகாரிகள் தாழ்வாக இருந்த மின்கம்பங்களை சரி செய்தனர். மேலும் குண்டும் குழியுமான சாலையில் மண் பரப்பப்பட்டு சீராக அமைக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து அரசு பஸ் நேசனேரி கிராமத்திற்கு வந்து சென்றது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • முனிசிபல் பேட்டை சமுதாய கூடம் பழுதடைந்து பயன்பாடின்றி உள்ளதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டப்படும்.
    • அங்கன்வாடி மையம் கட்டுவதற்குமான இடத்தை ஷா நவாஸ் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம்நகராட்சி முனிசிபல் பேட்டை சமுதாயக் கூடம் பழுதடைந்து பயன்பாடின்றி உள்ளது. அதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கும், அப்பகுதியில், எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மையம் கட்டுவதற்குமான இடத்தை பார்வையிட்டு ஷா நவாஸ் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார். மேலும், டாடா நகர் மற்றும் சேவாபாரதி பகுதியில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விரை வில் அப்பகுதிகளில் புதிய கட்டடப் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

    ×