search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீரமைத்தல்"

    • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் பயணிகளை இறக்கிவிட்டு செல்வது வழக்கம்.
    • உணவு பொருட்கள் மற்றும் தேநீர், குடிநீர் போன்ற எந்த வசதிகளும் இல்லாததால் பயணிகள் அவதி அடைந்தனர்.

    கடலூர்:

    திருச்செந்தூரிலிருந்து கடலூர் வழியாக செந்தூர் எக்ஸ்பிரஸ் தினந்தோறும் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னைக்கு சென்று வருகின்றது. காலை 6.20 மணி அளவில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் பயணிகளை இறக்கிவிட்டு செல்வது வழக்கம். இதேபோல் மயிலாடு துறையில் இருந்து கடலூர் வழியாக விழுப்புரத்திற்கு தினந்தோறும் காலையில் பயணிகள் ெரயில் சென்று வருகின்றது.  இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் செந்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ெரயில் சிதம்பரம் வழியாக கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் ெரயில் நிலையத்தில் காலை 6.45 மணியளவில் திடீரென்று 2 ெரயில்களும் நிறுத்தப்பட்டன. காலை நேரம் என்பதால் பயணிகள் தேநீர் மற்றும் காலை உணவு உண்பதற்காக புதுச்சத்திரம் ெரயில் நிலையத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு உணவு பொருட்கள் மற்றும் தேநீர், குடிநீர் போன்ற எந்த வசதிகளும் இல்லாததால் பயணிகள் அவதி அடைந்தனர்.

    காலை 7.45 மணி அளவில் செந்தூர் எக்ஸ்பிரஸ் அங்கிருந்து புறப்பட்டது. அப்போது ெரயிலில் குழந்தைகள் வைத்திருந்த பயணிகள், வயதானவர்கள் பெருமூச்சு விட்டபடி மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர். ஆனால், இந்த மகிழ்ச்சி சிறிது நேரத்தில் தவிடு பொடியானது.  கடலூர் அடுத்த ஆலப்பாக்கம் ெரயில் நிலையத்தில் மீண்டும் செந்தூர் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் மீண்டும் அதிர்ச்சி அடைந்தனர். ெரயிலில் வந்த பயணிகள் எதற்காக சிக்னல் கிடைக்கவில்லை? ஏதேனும் பெரிய அளவிலான பிரச்சனையா? என்பதை ெரயில் நிலையத்தில் இறங்கி விசாரித்துக் கொண்டிருந்தனர். மேலும், பயணிகள் அனைவரும் ெரயில் நிலையத்தில் உணவு இல்லாமல் மிகுந்த வேதனையுடன் அலைந்து கொண்டிருந்தனர். சீரமைக்கும் பணி இந்த நிலையில் கடலூர் ஆலப்பாக்கம் ெரயில்வே தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நேற்று இரவு 10 மணிக்கு ெரயில்வே துறை ஊழியர்க ளால் தொடங்கப்பட்டது. இந்த பணி இன்று காலை வரை நடைபெற்றதால் செந்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள்ெரயில் சுமார் 1 1/2 மணி நேரமாக புதுச்சத்திரம் மற்றும் ஆலப்பாக்கம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆலப்பாக்கத்தில் இருந்து காலை 8.10 மணி அளவில் கடலூர் நோக்கி செந்தூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்திற்கு காலை 8. 25 மணிக்கு வந்தடைந்தது. சுமார் 2 மணி நேரம் காலதாமதமாக வந்தது குறிப்பிடத்தக்க தாகும்.

    • இந்த கோவில் சின்ன ஸ்ரீரங்கம், சின்ன திருவரங்கம் என்று அழைக்கப்படுகிறது.
    • மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட கோவில் போதிய பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, சாலியமங்களம் அருகே திருபுவனம் என்ற கிராமத்தில் ஸ்ரீரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. பக்தர்களால் இந்த கோவில் சின்ன ஸ்ரீரங்கம், சின்ன திருவரங்கம் என்று அழைக்கப்படுகிறது.

    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ்வூர் புத்தூர் நாச்சியார் விண்ணகரம், திருபுவனவீரபுரம், விக்கிரம சோழ விண்ணகரம் என்றெல்லாம் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்திருக்கி றது.

    இந்த கோவில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. கடந்த 2013-ம்ஆண்டு அரசின் ஒப்புதலோடு இந்த கோவிலில் திருப்பணி தொடங்கப்பட்டன.

    ஆனால் அந்த பணிகள் முடியவில்லை. தற்போது இந்த கோவில் சிதிலமடைந்து போதிய பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது.

    இதனால் பழைமை மாறாமல் இந்த கோவிலை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஊர் மக்களால் அதற்காக திட்ட மிடப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு அடித்தளம் போட்ட நிலையிலேயே உள்ளன.

    கோவில் திருப்பணி முடிய அரசு தேவையான நிதிஉதவிகளை வழங்கினால் மட்டுமே நிறைவு பெறும். எனவே பழையை மாறாமல் புதுப்பிக்க அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேத்தியாத்தோப்பு அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் சாலை சீர் செய்யப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் கூளாப் பாடி ஊராட்சி தென்பாதி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பள்ளிக்கூட சாலை குண்டும் குழியுமாக, மழைக்காலங்களில் சேரும் சகயுதிகமாக உள்ளது. இந்த வழியாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இந்த சாலை கடந்த 2009 ஆண்டுகளில் போடப்பட்டது. இது குறித்து கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் சாலை சீர் செய்யப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். இது குறித்து கிராம மக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்த மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், வர்த்தக பிரமுகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

    பேரூராட்சி செயல் அலுவலர் வி.சிவலிங்கம் முன்னிலை வகித்தார். பேரூராட்சி துணைத் தலைவர் கமலா சேகர் வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோ.சி. இளங்கோவன், ஆர். வி. குமார், ரா. சரவணன், பரமேஸ்வரி, முத்துபீவி, மீனாட்சி, செல்வராணி, எஸ்.மாலதி, ம. க. பாலதண்டாயுதம், கண்ணன், கே.சாந்தி, எஸ்.சுகந்தி , எஸ்.சமீம்நிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கடந்த 75ம் ஆண்டு சுதந்திர தின மெகா பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்த மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், வர்த்தக பிரமுகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது.

    பேரூராட்சி பொது நிதியில் ரூ.35 லட்சம் மதிப்பில் பத்தாவது வார்டில் சிறு பாலம் கட்டுவது, 12 வது வார்டில் மழை நீர் வடிகால் கட்டமைப்பு பணிகள் சீரமைப்பது, 13 வது வார்டில் மண் சாலைகளை தார் சாலைகளாக போடுவது என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • பாழடைந்த நிலையில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறினார்.
    • கோவில்பத்து, கிடாரங்கொண்டான் ஊராட்சிகளில் நடைபெறும் திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியம், மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் கலெக்டர் லலிதா சத்துணவு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    நூலகம் மற்றும் பஞ்சாயத்து கணக்குகள் 100 நாள் திட்டத்தில் வேலை நடைபெறும் கணக்கு பதிவுகளை ஆய்வு செய்தார்.

    பின்னர் பாழடைந்த நிலையில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறினர்.

    பின்னர் மரக்கன்றுகளை நட்டார்,தலையுடையார் கோவில்பத்து, கிடாரங்கொண்டான் ஊராட்சிகளில் நடைபெறும் திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர். குறைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தார்.

    அப்போது செம்பனார்கோவில் ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன் ஊராட்சி மன்ற தலைவர் தேவிசுரேஷ், துணைத்தலைவர் ராஜகோபால், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் நாகேந்திரன், உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

    ×