என் மலர்
நீங்கள் தேடியது "distress"
- அந்த வழியாக வந்த இளைஞர்கள் புதுப்பேட்டை போலீசில் குழந்தையை ஒப்படைத்தனர்.
- சிறிது நேரத்தில் குழந்தையின் பெற்றோர் யார் என போலீசார் கண்டுபிடித்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சியில் நேற்று பிற்பகல் சாலையோரம் 2 வயது குழந்தை எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு திரிந்தது. அந்த வழியாக வந்த இளைஞர்கள் புதுப்பேட்டை போலீசில் குழந்தையை ஒப்படைத்தனர். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் துரிதமாக செயல்பட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்.
சிறிது நேரத்தில் குழந்தையின் பெற்றோர் யார் என போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து குழந்தையை ஒப்படைத்தனர். குழந்தை காணாமல் போனது எப்படி? குழந்தையை யாராவது கடத்தி வந்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் பயன்படுத்தி வரும் பாதையில் 15 அடி ஆழமான வாய்க்கால் உள்ளது
- ஆபத்தான பள்ளத்தில் இறங்கி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வரும் கிறிஸ்தவ மதத்தவ ர்களுக்கான சடலத்தை புதைக்கும் சுடுகாடு கே.கே. நகர் மேற்கு பகுதியில் உள்ளது. இந்த சுடுகாட்டுக்கு செல்ல கடந்த 50 ஆண்டுகளு க்கும் மேலாக இவர்கள் பயன்படுத்தி வரும் பாதையில் 15 அடி ஆழமான வாய்க்கால் உள்ளது ஒவ்வொரு முறையும் சடலத்தை சுமந்து செல்லும் பொழுது 15 அடி வாய்க்காலில் தண்ணீரில் மிதந்து சென்று எடுத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
சுடுகாட்டிற்கு செல்வதற்கு பாலம் கட்டித் தர கடந்த 50 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் மாவ ட்ட நிர்வாகம் இது வரை பாலம் கட்டித் தரவில்லை எனவும் இதனால் ஒவ்வொரு முறையும் உடலை 15 அடி ஆழமான ஆபத்தான பள்ளத்தில் இறங்கி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். தற்ேபாது அப்பகுதியில் இறந்த கூலித் தொழிலாளி மரியதாஸ் உடலை 15 அடி ஆழமான வாய்க்கால் பள்ளத்தில் இறங்கி எடுத்துச் சென்ற காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை அடுத்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் பாலம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் பயணிகளை இறக்கிவிட்டு செல்வது வழக்கம்.
- உணவு பொருட்கள் மற்றும் தேநீர், குடிநீர் போன்ற எந்த வசதிகளும் இல்லாததால் பயணிகள் அவதி அடைந்தனர்.
கடலூர்:
திருச்செந்தூரிலிருந்து கடலூர் வழியாக செந்தூர் எக்ஸ்பிரஸ் தினந்தோறும் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னைக்கு சென்று வருகின்றது. காலை 6.20 மணி அளவில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் பயணிகளை இறக்கிவிட்டு செல்வது வழக்கம். இதேபோல் மயிலாடு துறையில் இருந்து கடலூர் வழியாக விழுப்புரத்திற்கு தினந்தோறும் காலையில் பயணிகள் ெரயில் சென்று வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் செந்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ெரயில் சிதம்பரம் வழியாக கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் ெரயில் நிலையத்தில் காலை 6.45 மணியளவில் திடீரென்று 2 ெரயில்களும் நிறுத்தப்பட்டன. காலை நேரம் என்பதால் பயணிகள் தேநீர் மற்றும் காலை உணவு உண்பதற்காக புதுச்சத்திரம் ெரயில் நிலையத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு உணவு பொருட்கள் மற்றும் தேநீர், குடிநீர் போன்ற எந்த வசதிகளும் இல்லாததால் பயணிகள் அவதி அடைந்தனர்.
காலை 7.45 மணி அளவில் செந்தூர் எக்ஸ்பிரஸ் அங்கிருந்து புறப்பட்டது. அப்போது ெரயிலில் குழந்தைகள் வைத்திருந்த பயணிகள், வயதானவர்கள் பெருமூச்சு விட்டபடி மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர். ஆனால், இந்த மகிழ்ச்சி சிறிது நேரத்தில் தவிடு பொடியானது. கடலூர் அடுத்த ஆலப்பாக்கம் ெரயில் நிலையத்தில் மீண்டும் செந்தூர் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் மீண்டும் அதிர்ச்சி அடைந்தனர். ெரயிலில் வந்த பயணிகள் எதற்காக சிக்னல் கிடைக்கவில்லை? ஏதேனும் பெரிய அளவிலான பிரச்சனையா? என்பதை ெரயில் நிலையத்தில் இறங்கி விசாரித்துக் கொண்டிருந்தனர். மேலும், பயணிகள் அனைவரும் ெரயில் நிலையத்தில் உணவு இல்லாமல் மிகுந்த வேதனையுடன் அலைந்து கொண்டிருந்தனர். சீரமைக்கும் பணி இந்த நிலையில் கடலூர் ஆலப்பாக்கம் ெரயில்வே தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நேற்று இரவு 10 மணிக்கு ெரயில்வே துறை ஊழியர்க ளால் தொடங்கப்பட்டது. இந்த பணி இன்று காலை வரை நடைபெற்றதால் செந்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள்ெரயில் சுமார் 1 1/2 மணி நேரமாக புதுச்சத்திரம் மற்றும் ஆலப்பாக்கம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆலப்பாக்கத்தில் இருந்து காலை 8.10 மணி அளவில் கடலூர் நோக்கி செந்தூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்திற்கு காலை 8. 25 மணிக்கு வந்தடைந்தது. சுமார் 2 மணி நேரம் காலதாமதமாக வந்தது குறிப்பிடத்தக்க தாகும்.