என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தண்டவாளம் சீரமைக்கும் பணி: செந்தூர் எக்ஸ்பிரஸ் ெரயில் 2 மணி நேரம் காலதாமதம்: குடிநீர், உணவு கிடைக்காமல் பயணிகள் தவிப்பு
  X

  கடலூரை அடுத்த புதுச்சத்திரம் ரெயில் நிலையத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காட்சி.

  தண்டவாளம் சீரமைக்கும் பணி: செந்தூர் எக்ஸ்பிரஸ் ெரயில் 2 மணி நேரம் காலதாமதம்: குடிநீர், உணவு கிடைக்காமல் பயணிகள் தவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் பயணிகளை இறக்கிவிட்டு செல்வது வழக்கம்.
  • உணவு பொருட்கள் மற்றும் தேநீர், குடிநீர் போன்ற எந்த வசதிகளும் இல்லாததால் பயணிகள் அவதி அடைந்தனர்.

  கடலூர்:

  திருச்செந்தூரிலிருந்து கடலூர் வழியாக செந்தூர் எக்ஸ்பிரஸ் தினந்தோறும் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னைக்கு சென்று வருகின்றது. காலை 6.20 மணி அளவில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் பயணிகளை இறக்கிவிட்டு செல்வது வழக்கம். இதேபோல் மயிலாடு துறையில் இருந்து கடலூர் வழியாக விழுப்புரத்திற்கு தினந்தோறும் காலையில் பயணிகள் ெரயில் சென்று வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் செந்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ெரயில் சிதம்பரம் வழியாக கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் ெரயில் நிலையத்தில் காலை 6.45 மணியளவில் திடீரென்று 2 ெரயில்களும் நிறுத்தப்பட்டன. காலை நேரம் என்பதால் பயணிகள் தேநீர் மற்றும் காலை உணவு உண்பதற்காக புதுச்சத்திரம் ெரயில் நிலையத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு உணவு பொருட்கள் மற்றும் தேநீர், குடிநீர் போன்ற எந்த வசதிகளும் இல்லாததால் பயணிகள் அவதி அடைந்தனர்.

  காலை 7.45 மணி அளவில் செந்தூர் எக்ஸ்பிரஸ் அங்கிருந்து புறப்பட்டது. அப்போது ெரயிலில் குழந்தைகள் வைத்திருந்த பயணிகள், வயதானவர்கள் பெருமூச்சு விட்டபடி மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர். ஆனால், இந்த மகிழ்ச்சி சிறிது நேரத்தில் தவிடு பொடியானது. கடலூர் அடுத்த ஆலப்பாக்கம் ெரயில் நிலையத்தில் மீண்டும் செந்தூர் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் மீண்டும் அதிர்ச்சி அடைந்தனர். ெரயிலில் வந்த பயணிகள் எதற்காக சிக்னல் கிடைக்கவில்லை? ஏதேனும் பெரிய அளவிலான பிரச்சனையா? என்பதை ெரயில் நிலையத்தில் இறங்கி விசாரித்துக் கொண்டிருந்தனர். மேலும், பயணிகள் அனைவரும் ெரயில் நிலையத்தில் உணவு இல்லாமல் மிகுந்த வேதனையுடன் அலைந்து கொண்டிருந்தனர். சீரமைக்கும் பணி இந்த நிலையில் கடலூர் ஆலப்பாக்கம் ெரயில்வே தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நேற்று இரவு 10 மணிக்கு ெரயில்வே துறை ஊழியர்க ளால் தொடங்கப்பட்டது. இந்த பணி இன்று காலை வரை நடைபெற்றதால் செந்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள்ெரயில் சுமார் 1 1/2 மணி நேரமாக புதுச்சத்திரம் மற்றும் ஆலப்பாக்கம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆலப்பாக்கத்தில் இருந்து காலை 8.10 மணி அளவில் கடலூர் நோக்கி செந்தூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்திற்கு காலை 8. 25 மணிக்கு வந்தடைந்தது. சுமார் 2 மணி நேரம் காலதாமதமாக வந்தது குறிப்பிடத்தக்க தாகும்.

  Next Story
  ×