search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீரமைக்க"

    • ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ஹரிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • மஞ்சாலுமூடு கைதகம் தெற்றிவிளை பகுதியில் மழை காரணமாக சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

    அருமனை:

    மஞ்சாலுமூடு கைதகம் தெற்றிவிளை பகுதியில் மழை காரணமாக சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க கோரி பா.ஜ.க. சார்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. மேல்புறம் வடக்கு ஒன்றிய தலைவர் சதீஷ் சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுடர் சிங், பொதுச் செயலாளர் சுரேஷ், மாவட்டச் செயலாளர் நந்தினி, ஒன்றிய பொதுச் செயலாளர் வின்சென்ட், மற்றும் ஆனந்த், முழுக்கோடு கட்சித் தலைவர் அனில் குமார் மஞ்சாலுமூடு தலைவர் வினு, அருமனை கவுன்சிலர் விஜயகுமார், ராமச்சந்திரன் மற்றும் சுஜி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ஹரிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் கோரிக்கை
    • மழை காலங்களில் குண்டு குழிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

    கருங்கல்:

    கருங்கல் பேரூ ராட்சிக்குட்பட்டது தெரு வுக்கடை. இங்குள்ள பொட்டக்குழி சாலையில் தெருவுக்கடையில் இருந்து சாலை மிகவும் மோசமாக உள்ளது. சி.எஸ்.ஐ. சர்ச் வரை சாலை குண்டும் குழிகளும் நிறைந்து உள்ளது. இதனால் அந்த வழியே செல்பவர்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுமட்டுமல்லாது மழை காலங்களில் குண்டு குழிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் பொது மக்கள் நடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். பல வருடங்களாகவே இச் சாலையில் மக்கள் நடக்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள்.

    இதனை சீரமைக்க வலி யுறுத்தி பேரூராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் எந்த நட வடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆகவே போர்க்கால அடிப்படையில் நட வடிக்கை எடுத்து இந்த சாலையை சீர்செய்திட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பழனி ரோடு ஒருவழிப்பாதையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்து வருகிறது.

    உடுமலை :

    உடுமலை பேருந்து நிலையம் அருகே பழனி சாலையையும் பைபாஸ் ரோட்டில் இணைக்கும் வகையில் இணைப்பு சாலை உள்ளது. பழனி ரோடு ஒருவழிப்பாதையாக பயன்படுத்தப்பட்டு வருவதால் இந்த இணைப்பு சாலையை இப்பகுதியில் வரும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன. அதோடு பேருந்து நிலையத்திலிருந்து அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு செல்லும் முக்கிய சாலையாகவும் இந்த இணைப்பு சாலை உள்ளது .

    இந்நிலையில் இந்த இணைப்பு சாலை முழுவதும் தார் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது .மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்து வருகிறது. இதனால் இப்பகுதியில் வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். பழுதடைந்துள்ள சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • கணவாய் புதூர் ஊராட்சி வீராச்சியூர், வேப்பம்பாடி ஆகிய மலை கிராமங்களில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • ஆக்கிரமிப்பு செய்த தார்சாலை மற்றும் மன்சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் தீவட்டிப்பட்டி காவல்நிலத்தை முற்றுகையிட்டனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கணவாய் புதூர் ஊராட்சி வீராச்சியூர், வேப்பம்பாடி ஆகிய மலை கிராமங்களில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சாலை வீராச்சியூர் பகுதி மக்கள் பொம்மிடி செல்ல ஏதுவாக இருந்தது .

    இந்த தார் சாலை குறிப்பிட்ட தூரம் வரை வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.இதற்கு இணையாக மண் சாலை செல்கிறது.

    இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி ப்பட்டி மோளையானூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சுந்தர மூர்த்தி மற்றும் சிலர் வீராச்சியூர் பகுதியில் கோல்டன் வேலி எஸ்டேட் என்பவரிடமிருந்து சுமார் 70 ஏக்கர் நிலத்தை வாங்கியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலத்தை ஒட்டி வனத்துறை மற்றும் வருவாய் துறைக்கு சொந்த மான சுமார் 15 ஏக்கர் நிலம் உள்ளது. 70 ஏக்கர் நிலத்தை வாங்கியவர்கள் இந்த 15 ஏக்கர் அரசு நிலத்தையும் அனுபவித்து அருகில் உள்ள தார் சாலை மற்றும் மன்சாலை அனைத்தையும் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

    இதையடுத்து ஆக்கிரமிப்பு செய்த தார்சாலை மற்றும் மன்சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் தீவட்டிப்பட்டி காவல்நிலத்தை முற்றுகையிட்டனர்.

    இது சம்பந்தமாக காடையாம்பட்டி வட்டாட்சியர் அருள் பிரகாஷ் கூறுகையில், ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • பள்ளி கட்டிடங்களில் விரிசல் காணப்படுகிறது. பள்ளி கட்டிடங்களின் மேற்கூரை பழுதடைந்து உள்ளதால் தார்ப்பாய் விரித்து பாடம் படிக்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
    • கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழவந்தி புளியங்கடை பகுதி பள்ளியை பார்வையிட்டார். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஊர் மக்களிடம் உறுதியளித்துள்ளார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 9 பஞ்சா–யத்துக்கள், 70 கிராமங்கள் உள்ளன. மலைவாழ் மக்களின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய காப்பி தோட்டத்தில் கூலி வேலை செய்பவர்களே அதிகம். மலைவாழ் மக்கள் பெரும்பாலானோர் அவர்களது குழந்தைகளின் கல்விக்கு அரசு பள்ளி–களையே நம்பி உள்ளனர்.

    இதனால் பெரும்பாலான கூலி தொழிலாளர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளுக்கே அனுப்பி வைக்கின்றனர். ஆனால் மலை கிராமங்களில் உள்ள சில பள்ளி கட்டிடங்களின் தரம் கேள்விக்குறியாக உள்ளது.

    குறிப்பாக, வாழவந்தி புளியங்கடை பகுதியில் உள்ள பள்ளியின் நிலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. இங்குள்ள பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இங்குள்ள பள்ளிக்கட்டிடங்களில் மழைக்காலங்களில் மழை நீர் உள்ளே புகும் அவலம் உள்ளது.

    பள்ளி கட்டிடங்களில் விரிசல் காணப்படுகிறது. பள்ளி கட்டிடங்களின் மேற்கூரை பழுதடைந்து உள்ளதால் தார்ப்பாய் விரித்து பாடம் படிக்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இடிந்து விழும் தருவாயில் இருக்கும் பள்ளியை சீரமைக்க கோரி பலமுறை அதிகாரியிடம் வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.

    இதே நிலைமை நீடித்தால் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று பெற்றோர்கள் ஆதங்கத்து–டன் தெரிவித்தனர். மேலும் பள்ளியின் மேல் கூரையில் தார்பாய் கட்டும் பணியை பள்ளி ஆசிரியரே சரி செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

    இனிவரும் காலம் மழைக்காலம் என்பதால் போர்கால அடிப்படையில் பள்ளியை சீர்படுத்தி கொடுக்க வேண்டும் என்று மாலை மலரில் செய்தி வெளியிடப்பட்டது.

    இதன் எதிரொலியாக இன்று ஏற்காட்டில் பள்ளி விழாவில் கலந்துகொள்ள வந்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழவந்தி புளியங்கடை பகுதி பள்ளியை பார்வையிட்டார்.

    ஏற்காடு புளியங்கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பழுதடைந்துள்ளதாக செய்தி வந்தது. உடனே பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். பள்ளியை பார்வையிட்டு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஊர் மக்களிடம் உறுதியளித்துள்ளேன் .

    ஏற்காடு தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ. சித்ராவை தொடர்புகொண்டு பள்ளி சீரமைப்பு பற்றி விவாதித்து, மாவட்ட கலெக்டரிடமும் 'புதிய கட்டிடம் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கையை உடனே செய்யுமாறும், துறை ரீதியான உதவிகளை செய்வதற்கு காத்திருப்பதாகவும்' உறுதியளித்தேன்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் ஆரோக்கியமான விமர்ச–னங்களுக்கும், நியாயமான கோரிக்கைகளுக்கும் எப்போதும் முன்னுரிமை கொடுப்போம். அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல.பெருமையின் அடையாளம் என்பதை நிரூபிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    சேலம் மாநகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய பனமரத்துப்பட்டி ஏரிைய சீரமைகும் பணி தொடங்கப்பட்டது.

    சேலம்:

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1911-ம் ஆண்டு ரூ.9.68 லட்சம் மதிப்பில் பனமரத்துப்பட்டி ஏரி உருவாக்கப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் சேலம் மாநகர மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக தீர்த்து வைத்த பெருமை இந்த ஏரிக்கு உண்டு. 1924-ம் ஆண்டு சேலம் மாநகருக்கென மேட்டூர் தனிக்குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது.

    அதேநேரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் தலமாக இருந்த பனமரத்துப்பட்டி ஏரியில் சினிமா படப்பிடிப்புகள் தொடர்ந்து நடந்தது. எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., ெஜயசங்கர், விஜயகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த பல திரைப்படங்கள் இங்கே படமானது குறிப்பிடத்தக்கது.

    இப்படி சிறப்பு வாய்ந்த பனமரத்துப்பட்டி ஏரி 2137.92 ஏக்கர் பரப்பளவும், 168 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டது. இந்த ஏரி தற்போது வரை சேலம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் ஏரிக்கு நீர்வரத்து இன்றி கருவேல மரங்கள் மற்றும் இதர வகை மரங்கள் அதிகளவில் காணப்படுகிறது. தமிழக அரசு, இந்த ஏரியை பராமரிக்காததால் கருவேல மரங்கள் பெரிய அளவில் வளர்ந்துள்ளன.

    இதனிடையே பனம–ரத்துப்பட்டி ஏரியின் நீரை, சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு குடிநீராக வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என சட்டசபையில் நடந்த மானிய கோரிக்கையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு அறிவித்தார். இதையடுத்து அவர் பனமரத்துப்பட்டி ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தற்போது ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் மழைக்காலங்களில் ஜருகுமலை, போதமலை, வரட்டாறு, கூட்டாறு ஆகிய பகுதிகளில் இருந்து ஏரிக்கு வரும் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து ஏரியில் 800 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் கருவேல மரங்களை அகற்றும் வகையில் டெண்டர் விடப்பட்டுள்ளது.

    இதனை ரூ.1.84 கோடிக்கு கருவேல மரங்களை வெட்டி எடுத்துக் கொள்ள சேலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. இதற்கான ஒப்புதல் உள்ளிட்ட பணிகள் முடிவ–டைந்ததும், விரைவில் பனமரத்துப்பட்டி ஏரியில் உள்ள கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×