search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளியை"

    • மாணவர்களுடன் பெற்றோர்கள் திரண்டு பள்ளிக்கு வந்தனர்.
    • இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    ஈரோடு:

    ஈரோடு செல்லபாஷா வீதியில் அரசு நிதி உதவி பெறும் ஒரு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5 -ம் வகுப்பு வரை மாணவ- மாணவிகள் படித்து வருகின்ற னர்.

    கடந்த ஆண்டு ஆங்கில வழிக்கல்வியில் 630 மாணவ-மாணவிகளும், தமிழ் வழி கல்வியில் 130 மாணவ-மாணவிகளும் படித்தனர். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆங்கில வழி மாணவர்கள் சேர்க்கையும், தமிழ் வழி மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து நேற்று பள்ளி திறக்கப்பட்டன. அப்போது மாணவ, மாணவி களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

    இதில் ஆங்கில வழி கல்வியில் படிக்கும் சில மாணவர்களுக்கு தமிழ் வழி கல்வி புத்தகங்களும், தமிழ் வழி கல்வி படிக்கும் மாணவர்கள் சிலருக்கு ஆங்கில வழி கல்வி புத்தகமும் வழங்கப்பட்டதாக கூறப்படு கிறது.

    இதனையடுத்து இன்று காலை மாணவர்களுடன் பெற்றோர்கள் திரண்டு பள்ளிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தலைமை ஆசிரியரிடம் சென்று நடந்த விவரம் குறித்து கேட்டனர். அப்போது அரசு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சார்பில் ஒரு உத்தரவு பிறக்க பிறப்பிக்க ப்பட்டுள்ளது.

    அதில் ஆங்கில வழி கல்வி, தமிழ் வழி கல்வி இரண்டும் சமமாக கற்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் ஆங்கில வழி கல்வியில் சேர்ந்த சில மாணவர்களில் ஒரு சிலரை தமிழ் வழி கல்வியிலும், அதேப்போல் தமிழ் வழி கல்வியில் சேர்ந்த சில மாணவர்களை ஆங்கில வழி கல்வியிலும் சேர்த்ததாக தலைமையாசிரியர் விளக்கம் அளித்தார்.

    ஆனால் இதை ஏற்க மறுத்த பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் திரண்டு உள்ளனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இங்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • பள்ளி கட்டிடங்களில் விரிசல் காணப்படுகிறது. பள்ளி கட்டிடங்களின் மேற்கூரை பழுதடைந்து உள்ளதால் தார்ப்பாய் விரித்து பாடம் படிக்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
    • கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழவந்தி புளியங்கடை பகுதி பள்ளியை பார்வையிட்டார். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஊர் மக்களிடம் உறுதியளித்துள்ளார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 9 பஞ்சா–யத்துக்கள், 70 கிராமங்கள் உள்ளன. மலைவாழ் மக்களின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய காப்பி தோட்டத்தில் கூலி வேலை செய்பவர்களே அதிகம். மலைவாழ் மக்கள் பெரும்பாலானோர் அவர்களது குழந்தைகளின் கல்விக்கு அரசு பள்ளி–களையே நம்பி உள்ளனர்.

    இதனால் பெரும்பாலான கூலி தொழிலாளர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளுக்கே அனுப்பி வைக்கின்றனர். ஆனால் மலை கிராமங்களில் உள்ள சில பள்ளி கட்டிடங்களின் தரம் கேள்விக்குறியாக உள்ளது.

    குறிப்பாக, வாழவந்தி புளியங்கடை பகுதியில் உள்ள பள்ளியின் நிலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. இங்குள்ள பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இங்குள்ள பள்ளிக்கட்டிடங்களில் மழைக்காலங்களில் மழை நீர் உள்ளே புகும் அவலம் உள்ளது.

    பள்ளி கட்டிடங்களில் விரிசல் காணப்படுகிறது. பள்ளி கட்டிடங்களின் மேற்கூரை பழுதடைந்து உள்ளதால் தார்ப்பாய் விரித்து பாடம் படிக்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இடிந்து விழும் தருவாயில் இருக்கும் பள்ளியை சீரமைக்க கோரி பலமுறை அதிகாரியிடம் வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.

    இதே நிலைமை நீடித்தால் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று பெற்றோர்கள் ஆதங்கத்து–டன் தெரிவித்தனர். மேலும் பள்ளியின் மேல் கூரையில் தார்பாய் கட்டும் பணியை பள்ளி ஆசிரியரே சரி செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

    இனிவரும் காலம் மழைக்காலம் என்பதால் போர்கால அடிப்படையில் பள்ளியை சீர்படுத்தி கொடுக்க வேண்டும் என்று மாலை மலரில் செய்தி வெளியிடப்பட்டது.

    இதன் எதிரொலியாக இன்று ஏற்காட்டில் பள்ளி விழாவில் கலந்துகொள்ள வந்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழவந்தி புளியங்கடை பகுதி பள்ளியை பார்வையிட்டார்.

    ஏற்காடு புளியங்கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பழுதடைந்துள்ளதாக செய்தி வந்தது. உடனே பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். பள்ளியை பார்வையிட்டு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஊர் மக்களிடம் உறுதியளித்துள்ளேன் .

    ஏற்காடு தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ. சித்ராவை தொடர்புகொண்டு பள்ளி சீரமைப்பு பற்றி விவாதித்து, மாவட்ட கலெக்டரிடமும் 'புதிய கட்டிடம் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கையை உடனே செய்யுமாறும், துறை ரீதியான உதவிகளை செய்வதற்கு காத்திருப்பதாகவும்' உறுதியளித்தேன்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் ஆரோக்கியமான விமர்ச–னங்களுக்கும், நியாயமான கோரிக்கைகளுக்கும் எப்போதும் முன்னுரிமை கொடுப்போம். அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல.பெருமையின் அடையாளம் என்பதை நிரூபிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    ×