search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓமலூர் அருகே சாலையை சீரமைக்க கோரி  போலீஸ் நிலையம் முற்றுகை பொதுமக்கள் போராட்டம்
    X

    ஆக்கிரமிப்பு செய்த சாலையை சீரமைக்க கோரி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட காட்சி.

    ஓமலூர் அருகே சாலையை சீரமைக்க கோரி போலீஸ் நிலையம் முற்றுகை பொதுமக்கள் போராட்டம்

    • கணவாய் புதூர் ஊராட்சி வீராச்சியூர், வேப்பம்பாடி ஆகிய மலை கிராமங்களில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • ஆக்கிரமிப்பு செய்த தார்சாலை மற்றும் மன்சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் தீவட்டிப்பட்டி காவல்நிலத்தை முற்றுகையிட்டனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கணவாய் புதூர் ஊராட்சி வீராச்சியூர், வேப்பம்பாடி ஆகிய மலை கிராமங்களில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சாலை வீராச்சியூர் பகுதி மக்கள் பொம்மிடி செல்ல ஏதுவாக இருந்தது .

    இந்த தார் சாலை குறிப்பிட்ட தூரம் வரை வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.இதற்கு இணையாக மண் சாலை செல்கிறது.

    இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி ப்பட்டி மோளையானூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சுந்தர மூர்த்தி மற்றும் சிலர் வீராச்சியூர் பகுதியில் கோல்டன் வேலி எஸ்டேட் என்பவரிடமிருந்து சுமார் 70 ஏக்கர் நிலத்தை வாங்கியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலத்தை ஒட்டி வனத்துறை மற்றும் வருவாய் துறைக்கு சொந்த மான சுமார் 15 ஏக்கர் நிலம் உள்ளது. 70 ஏக்கர் நிலத்தை வாங்கியவர்கள் இந்த 15 ஏக்கர் அரசு நிலத்தையும் அனுபவித்து அருகில் உள்ள தார் சாலை மற்றும் மன்சாலை அனைத்தையும் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

    இதையடுத்து ஆக்கிரமிப்பு செய்த தார்சாலை மற்றும் மன்சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் தீவட்டிப்பட்டி காவல்நிலத்தை முற்றுகையிட்டனர்.

    இது சம்பந்தமாக காடையாம்பட்டி வட்டாட்சியர் அருள் பிரகாஷ் கூறுகையில், ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×