search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "repair"

    • தாண்டவன்காடு செல்லும் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மின் கம்பம் திடீரென வீசிய சூறாவளி காற்றினால் சரிந்தது.
    • மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சாய்ந்து நின்ற மின் கம்பத்தை தூக்கி நிறுத்தி சரி செய்தனர்.

    உடன்குடி:

    உடன்குடியில் இருந்து தாண்டவன்காடு செல்லும் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மின் கம்பம் திடீரென வீசிய சூறாவளி காற்றினால் சரிந்தது. இது பற்றி பக்கத்தில் உள்ளவர்கள் உடனடி யாக மின்சார வாரி யத்திற்கு தகவல் கொடுத்த னர். மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சாய்ந்து நின்ற மின் கம்பத்தை தூக்கி நிறுத்தி சரி செய்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் மின்வாரிய ஊழியருக்கு நன்றி கூறினர்.

    • பல ஆண்டுகளாக சத்துணவு கூடம் பழுதடைந்து காணப்பட்டது.
    • ரூ.15 ஆயிரம் மதிப்பீட்டில் சத்துணவு கூடம் பழுது நீக்கம் செய்து சீரமைக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே நாச்சிகுளம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பல ஆண்டுகளாக சத்துணவு கூடம் பழுதடைந்து காணப்பட்டது.

    இதையடுத்து பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தாஹிர் வேண்டுகோளை ஏற்று, நாச்சிகுளம் ஜமாத் குவைத் பேரவை சார்பில் ரூ.15,000 மதிப்பீட்டில் சத்துணவு கூடம் பழுது நீக்கம் செய்து சீரமைக்கப்பட்டது. இந்த பணிகளை பெற்றோர் ஆசிரியர் தலைவர் மற்றும் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் இணைந்து செய்து முடித்தனர்.

    • கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் கம்மியம்பேட்டை பகுதியில் ெரயில்வே கேட் உள்ளது.
    • திடீரென்று ெரயில்வே கேட்டில் பழுது ஏற்பட்டதால் சரியான முறையில் ெரயில்வே கேட் மூடவில்லை.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் கம்மியம்பேட்டை பகுதியில் ெரயில்வே கேட் உள்ளது. இதன் அருகில் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையம் உள்ளன. ெரயில்கள் வந்து செல்லும் நேரத்தில் கம்பியம் பேட்டை ெரயில்வே கேட் மூடப்படும். ெரயில்வே கேட் மூடும் சமயத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பது வழக்கம். மேலும் கம்மியம்பேட்டை ெரயில்வே கேட் அடிக்கடி பழுது ஏற்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை மன்னார்குடி - திருப்பதி எக்ஸ்பிரஸ் கடலூர் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது கடலூர் கம்மியம் பேட்டையில் ெரயில்வே கேட்டை மூடும் பணியில் ஊழியர் ஈடுபட்டு வந்தார். திடீரென்று ெரயில்வே கேட்டில் பழுது ஏற்பட்டதால் சரியான முறையில் ெரயில்வே கேட் மூடவில்லை. இதன் காரணமாக தண்ட வாளத்தில் சிக்னல் கிடைக்க வில்லை. சிக்னல் கிடைக்காத தால்ரெயில் டிரைவர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் ெரயிலை நிறுத்தினார். இதனை தொடர்ந்து ெரயில்வே கேட் கீப்பர் ெரயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில் ஊழி யர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ெரயில்வே கேட்டில் ஏற்பட்ட பழுதை நீண்ட போராட்டத்திற்கு பிறகு சரி செய்தனர். அதன் பின்னர் மன்னார்குடி- திருப்பதி எக்ஸ்பிரஸ் ெரயில் சுமார் அரை மண நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது  ரெயில்வே கேட் பழுதானதால் கடலூர் கம்மியம்பேட்டை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும் சென்னை மற்றும் சிதம்பரத்தி லிருந்து வரக்கூடிய அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் வெளியூருக்கு செல்லக்கூடிய வாகனங்கள் ஜவான் பவன் சாலை, கம்மியம்பேட்டை பாலம், செம்மண்டலம் வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • மாயூரநாதர் கீழவீதி பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைத்து கொடுக்க வேண்டும்.
    • பாதாள சாக்கடை கழிவுநீர் வழிந்து மழைநீர் வடிகாலில் தேங்கி நிற்கிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நகர்மன்ற கூட்டம் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

    பொறியாளர் சனல்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:

    ஜெயலட்சுமி:

    அறுபத்தி மூவர் பேட்டை பகுதியில் பாதாளசாக்கடை மேனுவல் திரம்பியதால் வீடுகளில் கழிவுநீர் எதிர்க்கிறது.

    பாதாளசாக்கடை குழாய்களில் உள்ள அடைப்புகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

    விஜய்:

    மினிபவர் டேங்க் பழுதுநீக்க கூறினால் ஒப்பந்தகாரரர் ஏற்கனவே செய்ததற்கு பணம் வரவில்லை என்கிறார். பழுதடைந்ததை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சதீஷ்:

    மாயூரநாதர் கீழவீதி பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைத்துகொடுக்க வேண்டும்.

    ரமேஷ்:

    வடக்குராமலி ங்கத்தெரு சாலை மிகவும் மோசமாக உள்ளதை சீரமைக்க வேண்டும்.

    காவிரி நடைபாலத்தில் கைப்பிடி சுவர் சேதமடைந்துள்ளதை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

    கணேசன்:

    திருவிழந்துார் பெருமாள் கோயிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்கின்றனர்.

    அதன்அருகே உள்ள மினி பவர்டேங்க் மோட்டார் பழுதடைந்து தண்ணீர் வசதி இன்றி உள்ளது அதனை சீரமைக்க வேண்டும்.

    சர்வோதயன்:

    ஸ்டேட்பாங்க் ரோடு, டவுன்க்ஸ்டன்ஷன், பஜனமடைத்தெரு பகுதியில் பாதாளசாக்கடை கழிவுநீர் வழிந்து மழைநீர் வடிகாலில் தேங்கி நிற்கிறது.

    இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

    ரத்தின வேல்:

    சனிக்கிழமை நகராட்சி 36 வார்டுகளிலும் மாஸ்கிளீனிங் என்று துாய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.

    இந்த பணியில் பள்ளி மாணவர்களை பயன்படுத்தக்கூடாது.

    சம்பத்:

    ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளில் 11 மினிபவர் டேங்குகள் உள்ளது.

    அனைத்தும் பழு தாகி உள்ளதால் அவற்றை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

    ஜெயந்தி:

    பழுதடைந்ததாக கூறி 2 மினிபவர்டேங்க் மோட்டார்கள் கழற்றி சென்று ஒரு வருடத்திற்குமேலாகியும் அதனை சீர்செய்து பயன்பாட்டிற்கு விடவில்லை.

    கல்யாணி:

    ஆனந்ததாண்டவபுரம் சாலையில் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள வாய்க்காலில் கழிவுநீர் குளம்போன்று தேங்கிநின்று அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

    அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.

    கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கபட்டது.

    முடிவில் துணைத் தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.

    • முள்ளிக்கொரை பகுதியில் உள்ள கழிப்பிடத்திற்கு கீழ் உள்ள இடத்தில் மழை நீர் கால்வாய் தூர்வாரப்படாமல் இருந்து வந்தது
    • பணியினை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

    ஊட்டி,

    ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 27-வது வார்டு முள்ளிக்கொரை பகுதியில் உள்ள கழிப்பிடத்திற்கு கீழ் உள்ள இடத்தில் மழை நீர் கால்வாய் தூர்வாரப்படாமல் இருந்து வந்தது.

    இதனை அறிந்த அப்பகுதி மக்கள் வார்டு கவுன்சிலர் ஜெயலட்சுமி சுதாகரிடம் தெரிவித்தனர். பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    நகராட்சி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் கவுன்சிலர் ஜெயலட்சுமி சுதாகர் முன்னிலையில் வைரம், கோவிந்தராஜ், கிருஷ்ணன் மற்றும் மூர்த்தி ஆகியோரின் உதவியுடன் மழைநீர் கால்வாய் சுத்தம் செய்யப்பட்டது. இவர்களது பணியினை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • மயான கொட்டகையின் ஆறு தூண்களும் பழுதடைந்த நிலையில் உள்ளது.
    • மயானத்துக்கு செல்லும் சாலையை சீரமைத்து தர வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் இறந்தால் அருகில் உள்ள மயானத்துக்கு கொண்டு இறுதி சடங்கு செய்வது வழக்கம்.

    இந்நிலையில், அங்குள்ள மயான கொட்டகையின் ஆறு தூண்களும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

    இதனால் மழைகாலங்களில் பிணத்தை எரியூட்டும்போது கொட்டகை இடிந்து விழுந்துவிடுமோ என அச்சத்துடன் செயல்பட வேண்டிய நிலை உள்ளது.

    மேலும், அப்பகுதி மக்களுக்கு வேற மயானம் கிடையாது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயான கொட்டகையை சீரமைத்து தர வேண்டும் எனவும், மயானத்துக்கு செல்லும் சாலையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பழுதடைந்த பள்ளி கட்டிடம் மற்றும் சாலைகளை சீரமைக்க வேண்டும்.
    • சம்பந்தப்பட்ட வார்டு ஒன்றிய கவுன்சிலர்களின் ஆலோசனை பெறாமல் தன்னிச்சையாக ஒப்புதல் வழங்கல்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் காயத்ரிஅசோக்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூங்குழலி, சூர்யநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நாகக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் பழுதடைந்துள்ளதால் இடித்து அப்புறப்ப டுத்தப்பட்டுள்ளது.

    அந்த பள்ளியில் படிக்கும் 95 மாணவ- மாணவிகளின் நலனுக்காக 2 வகுப்பறைகளுடன் கூடிய புதிய பள்ளி கட்டிடம் ஒன்றிய பொதுநிதி மற்றும் கல்வி நிதியில் இருந்து மேற்கொள்வது, சுந்தரபெருமாள்கோவில், சேஷம்பாடி, சோழபுரம் பேரூராட்சி, திருவலஞ்சுழி, கடிச்சம்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள பழுதடைந்த பள்ளிகட்டிடம் மற்றும் சாலைகளை சீரமைத்தல் என்பது உள்ளிட்ட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டம் நடந்து கொண்டிருந்த போது 504-வது மன்ற பொருளில், 2022-23-ம் ஆண்டுக்கான 15-வது நிதிக்குழு பணிகள் ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட வார்டு ஒன்றிய கவுன்சிலர்களின் ஆலோசனை பெறாமல், தன்னிச்சையாக ஒப்புதல் வழங்கியதை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    இதைப்போல தி.மு.க.வை சேர்ந்த ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் கணேசன், கும்பகோணம் ஒன்றியத்தில் ஒன்றியக்குழுத் தலைவியின் கணவரின் தலையீடு அதிகமாக உள்ளது. என கூறி தனது ஆதரவு உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • சாலைகளின் நடுவிலும், ஓரங்களிலும் ஆங்காங்கே சாலை பெயர்ந்து பள்ளங்கள் உருவாகி உள்ளன.
    • விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    திருவையாறு:

    திருவையாறு நகரத்தில் நான்கு திசைகளிலும் செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் நடுவிலும் ஓரங்களிலும் ஆங்காங்கே சாலை பெயர்ந்து பள்ளங்கள் உருவாகி உள்ளன.

    இதனால் இருசக்கர வாகனங்கள், கார்கள் முதலிய இலகு ரக வாகனங்கள், பஸ், லாரி முதலிய கனரக வாகனங்கள் ஆகியவற்றின் டயர்கள் அந்தப் பள்ளங்களில் இறங்கி மேலே ஏறும் போது வாகன அச்சு சாலையில் மோதி பழுதாகவும், விபத்துகள் நேரவும் வாய்ப்புள்ளது.

    மேலும், சைக்கிள் முதலிய இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் அப்பள்ளங்களில் வாகனத்தை இறக்கி ஏற்றும் போது பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். இதனால் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்படுகிறது,

    எனவே, திருவையாறு நகரப் போக்குவரத்து சாலைகளில் உள்ள கிடுகிடு பள்ளங்களை தரமான தார் மற்றும் ஜல்லிக் கலவையினால் நிரப்பி சமன்படுத்தி உதவுமாறு வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 10 ஆண்டுகளுக்கு முன் பழுது நீக்கம் செய்யப்பட்டது.
    • கட்டிடத்திற்குள் மழைநீர் ஒழுகுவதால் ஆவணங்கள் நனைந்து சேதமாகி வருகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழப்ப்பூதனூர் ஊராட்சி மேலப்பூதனூரில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு கீழப்பூதனூர், மேலப்பூதனூர், பெருநாட்டாந்தோப்பு பகுதிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்காக நாள்தோறும் வந்து செல்கின்றனர்.இந்த கட்டிடம் 640 குடும்ப அட்டைதாரர்களுக்கும், 2000 வாக்காளர்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது.

    இந்த கட்டிடம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.பின்னர் 10 ஆண்டுகளுக்கு முன் பழுது நீக்கம் செய்யப்பட்டது.இந்த நிலையில் தற்போது இந்த அலுவலகம்எந்தவித பராமரிப்பும்இன்றி பழுதடைந்து காணப்ப டுகிறது.

    இதனால் கட்டிடத்தின் மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கீழே விழுகிறது. மேலும் கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.மழைக்காலத்தில் கட்டிடத்திற்குள் மழைநீர் ஒழுகுவதால் ஆவணங்கள் நனைந்து சேதமாகி வருகிறது.இதில் பணிபுரியும் அலுவலர்கள் கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

    இந்த அலுவலகத்திற்கு பல்வேறு தேவைகளுக்கு வரும் பொதுமக்கள் கட்டிடம் இடிந்து விழுமோ என அஞ்சுகின்றனர்.இந்த பழுதான ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், மனுக்கள் கொடுத்தும் எந்தவித பயனும் இல்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    • அருப்புக்கோட்டையில் சாலையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை 12-வது வார்டில் மகாலிங்கம் மூப்பனார் தெரு, பெருமாள் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்களை கொட்டி பல நாட்கள் ஆகிவிட்டது. இதனால் இந்த பகுதி மக்கள் கற்களில் நடப்பதற்கு சிரமமாக இருப்பதாக தெரிவித்தனர்.

    பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் நடப்பதற்கும், சைக்கிளில் சென்று வருவதற்கும் சிரமமாக இருக்கிறது என்றும் கூறினர். இந்தப் பகுதியில் குடிநீர் வந்து பல நாட்கள் ஆகிவிட்டது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    விரைவில் எங்கள் பகுதியில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து அந்த வார்டு கவுன்சிலர் அல்லிராணியிடம் கேட்டபோது, விரைவில் சாலை சீரமைக்கப்படும். குடிநீர் விநியோகமும் சரிசெய்யப்படும் என்றார்.

    • வளைய தரச் சுற்று மற்றும் பிரிவுபடுத்துதல் செயல்பாடுகள் பற்றிய ஆய்வு கூட்டம் நெல்லை மின் பகிர்மான வட்ட தலைமை அலுவலகமான தியாகராஜநகரில் உள்ள மேற்பார்வை கட்டுப்பாடு மற்றும் தரவு கையகப்படுத்துதல் அலுவலகத்தில் நடந்தது.
    • பழுதானவற்றை சரி செய்து மீண்டும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகளை ஒருங்கிணைந்து செயல்பட்டு மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்களையும் எடுப்பதற்கு உத்தரவிட்டார்கள்.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம் நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ள வளைய தரச் சுற்று மற்றும் பிரிவுபடுத்துதல் செயல்பாடுகள் பற்றிய ஆய்வு கூட்டம் நெல்லை மின் பகிர்மான வட்ட தலைமை அலுவலகமான தியாகராஜநகரில் உள்ள மேற்பார்வை கட்டுப்பாடு மற்றும் தரவு கையகப்படுத்துதல் அலுவலகத்தில் நடந்தது.

    மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி தலைமை தாங்கினார். ஆய்வு கூட்டத்தில் நகர்ப்புறக் கோட்டத்தில் மின் பகிர்ந்தளித்ததில் முக்கிய பங்கு வகிக்கும் பயன்பாட்டில் உள்ள 102 வளைய தர சுற்றுகள்,104 பிரிவுபடுத்தல் செயல்பாடுகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதில் பழுதானவற்றை சரி செய்து மீண்டும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகளை ஒருங்கிணைந்து செயல்பட்டு மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்களையும் எடுப்பதற்கு உத்தரவிட்டார்கள். அதன் அடிப்படையில் நேற்று டவுன் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட 3 வளையதர சுற்றுகளின் பழுதான கேபிள்களை சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள்.

    இதன் மூலம் டவுன் பிரிவில் பொது மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டால் உடனடியாக மாற்று வழியில் மின்சாரம் வழங்க ஏதுவாக அமையும். மின் பகிர்ந்தளிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் வளையத்தரசுற்றை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக கொண்டு வந்த, உதவி செயற்பொறியாளர் ராஜகோபால் மற்றும் பணியாளர்களை, மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி, நகர்புறக்கோட்ட செயற் பொறியாளர் முத்துக்குட்டி ஆகியோர் பாராட்டினர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் மையம் அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
    தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ‘வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் அமைக்கப்படுகிறது. மானியத்தில் அமைக்கும் இந்த புதிய திட்டத்தை கடந்த 2021-22ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகின்ற னர். 

    விவசாயிகள் தங்கள் வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டு களை தங்கள் விளை நிலங்களிலேயே பழுது நீக்கி பராமரிக்கவும், விவசாயிகள் வேளாண் பணிகளை எவ்வித இடர்பாடு களுமின்றி குறித்த நேரத்தில் செய்திடவும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி, நிலையான வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்ப டுத்தும் நோக்கத்துடனும் இம்மையங்கள் அமைக்கப்ப டுகின்றன. 

    தொழில் முனைவோர், விவசாயகுழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இம்மையங்கள் மானியத்தில் அமைத்துத் தரப்படும். 

    2022-23-ம் ஆண்டு வேளாண் கூட்டத் தொடர் அறிவிப்பின்படி, தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 25 மையங்கள் அமைக்கப்ட உள்ளன. இம்மையங்கள் ரூ.8 லட்சம் செலவில் அமைக்கப்படுகின்றன. இதில் 50 சதவீத மானிய அடிப்படையில் அதிக பட்சமாக ரூ.4 லட்சம் மானியம் வழங்கப்படும். 

    மையங்கள் அமைக்க போதிய இடவசதியும், மும்முனை மின்சார இணைப்பும் கொண்ட கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் அருகாமையிலுள்ள வேளாண்மை பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் வேளாண்மை (பொறுப்பு) அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தினை அளிக்கலாம். 

    மாவட்ட கலெக்டர் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளிகளுக்கு இம்மையம் மானியத்தில் அமைத்துத் தரப்படும். மையங்கள் அமைக்கத் தேவையான எந்திரங்கள் ஒப்பந்தப்பு ள்ளி அடிப்படையில் கண்காணிப்புப் பொறியா ளரால் முடிவு செய்யப்பட்டு, பயனாளிகள் மொத்த தொகையை செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
     
    ×