search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேதம்"

    • பராமரிப்பு இல்லாததால் கடைகளின் மேற்கூரை சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தது.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமாக பஸ் ஸ்டாண்ட், கோவை சாலை, பவானிசாகர் சாலை உள்ளி ட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    இவற்றில் கோவை சாலையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. பராமரிப்பு இல்லாததால் கடைகளின் மேற்கூரை சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தது.

    நகராட்சிக்கு சொந்தமான ஒரு கடையில் திருநெல்வேலியைச் சேர்ந்த வல்லரசு என்பவர் செல்போன் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை செய்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வல்லரசுவின் செல்போன் கடையின் மேற்கூரை திடீரென இடி ந்து விழுந்தது. உடனே வல்லரசு மற்றும் வியாபாரம் செய்து கொண்டிருந்த பொதுமக்கள் கடையை விட்டு வெளியேறினர்.

    பின்னர் கடையின் மேற்கூரை கான்கிரீட் முற்றிலுமாக சரிந்து விழுந்தது. இதில் விற்பனைக்காக வைத்திருந்த புதிய செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் முழுமையாக சேதம் அடைந்தது. இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கடையின் உரிமையாளர் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அதிகளவில் வாழை, தென்னை, கம்பு, சோளம் மற்றும் காய்கறிகள் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
    • சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இறப்பின் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    அன்னூர் அருகே குப்பனூர் ஊராட்சிக்குட்பட்ட ஆத்திக்குட்டை, வாக்கானாகொம்பு, புலியூர், ஒட்டகமண்டலம், ஆலாங்கொட்டை, அழகியபாளையம், சொலவம்பாளையம், அக்கறைசெங்கப்பள்ளி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

    இப்பகுதிகளில் அதிகளவில் வாழை, தென்னை, கம்பு, சோளம் மற்றும் காய்கறிகள் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த பகுதியில் காட்டுப்பன்றிகளின் தொல்லை அதிகளவு உள்ளது. காட்டு பன்றிகள் அவ்வப்போது விவசாய நிலங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில், வாக்கனாங்கொம்பு கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து என்பவர் தனது தோட்டத்தில் வாழைகளை பயிரிட்டிருந்தார்.

    நேற்று இரவு இந்த தோட்டத்திற்குள் காட்டு பன்றிகள் கூட்டமாக நுழைந்தன. பின்னர் அவை, அங்கிருந்த வாழைகளை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியது.

    இதேபோல், அங்குள்ள துளசிராஜ் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்து, அங்கு பயிரிடப்பட்டிருந்த 200 வாழைகள் என மொத்தமாக 1000த்திற்கும் மேற்பட்ட வாழைகளை காட்டு பன்றிகள் சேதப்படுத்திவிட்டு சென்றன.

    இதையடுத்து சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இறப்பின் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • வீடுகளை இழந்த பொது மக்கள் அந்தந்த ஊர்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • வீடுகள் இடிந்து விழுந்ததால் பொது மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    களக்காடு:

    களக்காட்டில் 2 நாட்களாக கொட்டி தீர்த்த வரலாறு காணாத மழையினால் ஆறு கால்வாய்களில் ஏற்பட்ட வெள்ளம் ஊருக்குள் புகுந்து வீடுகளை சூழ்ந்தது.

    தொடர்மழை மற்றும் வெள்ளத்தால் களக்காடு ஆற்றாங்கரை தெரு, மூங்கிலடி, கீழப்பத்தை, மேலப்பத்தை, கலுங்கடி, பத்மநேரி, புலியூர்கு றிச்சி, மாவடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 25-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

    முன் எச்சரிக்கையாக பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதால் பெரும் விபத்துகள் தவிர்க்கப்பட்டது. இதில் வீட்டில் இருந்த பொருட்களும் நாசமானது.

    வீடுகளை இழந்த பொது மக்கள் அந்தந்த ஊர்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகள் இடிந்து விழுந்ததால் பொது மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வீடு களை இழந்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 4 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது.
    • 16 வீடுகள் பகுதி அளவில் இடிந்து சேதம் அடைந்துள்ள.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது.

    நேற்று தஞ்சை, குருங்குளம், திருவையாறு, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது.

    இருப்பினும் இன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பகல் நேரத்தில் மழை இல்லை.

    இருந்தாலும் இரவில் மீண்டும் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் 11 கூரை வீடுகள், 5 ஓட்டு வீடுகள் என மொத்தம் 16 வீடுகள் பகுதி அளவில் இடிந்து சேதம் அடைந்துள்ள.

    மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு வருமாறு:-

    தஞ்சாவூர்-9.50, அதிராம்பட்டினம் -9.20, ஒரத்தநாடு -9, திருவையாறு-7.

    • கனமழையால் சிவகிரி தாலுகா பகுதியில் 6 வீடுகள் இடிந்து விழுந்தது.
    • இடிந்து விழுந்த வீடுகளில் உரிமையாளர்களுக்கு தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணன் காசோலைகளை வழங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி தாலுகா பகுதிகளிலும், சிவகிரிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியிலும் கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் சிவகிரி தாலுகா பகுதியில் 6 வீடுகள் இடிந்து விழுந்தது.

    சிவகிரி அண்ணா தெற்கு தெருவை சேர்ந்த சேர்வாரன் மகன் மாரியப்பன், சிவகிரி அருகே தாருகாபுரம் மடத்து தெருவை சேர்ந்த கோபி மகன் குருசாமி, தேசியம்பட்டி என்ற நாரணாபுரம் கலைஞர் புது காலனி தெருவை சேர்ந்த பிள்ளையார் மகன் கருப்பசாமி, தென்மலை பஞ்சாயத்து ஏ.சுப்பிரமணியாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த செல்லையா மகன் சாலமன், ராமநாதபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அம்மையப்பன் மனைவி ராமலட்சுமி, சிவகிரி பாலகணேசன் தெருவை சேர்ந்த இசக்கி ராஜ் மனைவி ஆறுமுகத்தாள் ஆகிய 6 வீடுகள் கனமழையால் இடிந்து விழுந்து சேதமாயின.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சிவகிரி தாசில்தார் ஆனந்த், மண்டல துணைத் தாசில்தார் வெங்கடசேகர், தலை மையிடத்து துணை தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர்கள் சிவகிரி சுந்தரி, வாசுதேவநல்லூர் ராசாத்தி, கூடலூர் கோபால கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன் மற்றும் உதவியாளர் அழகராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கனமழையால் இடிந்து விழுந்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

    மழையால் இடிந்து விழுந்து சேதம் ஏற்பட்ட வீடுகளுக்கு முழு நிவாரண உதவி தொகையாக ரூ.5 ஆயிரம், பகுதி நிவாரணத் தொகையாக ரூ.4ஆயிரம், இதற்கான தொகைக்கு காசோலையாக சம்பந்தப்பட்டவர்களிடம் தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணன் காசோலைகளை வழங்கினார். அப்போது சிவகிரி வருவாய் ஆய்வாளர் சுந்தரி கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன் ஆகியோர் உடன இருந்தனர்.

    • வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.
    • தீவிபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மெலட்டூர்:

    பாபநாசம் தாலுக்கா, சாலியமங்களம் மேலத்தெருவை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 65) இவருக்கு திருமணமாகி சித்ரா என்ற மனைவியும், கார்த்திகேயன் என்ற மகனும் உள்ளனர்.

    ஏகாம்பரம் சுமை தூக்கும் தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவரது கூரை வீட்டில் திடீரென தீ பிடித்தது எரிய தொடங்கியது. பின்னர் வீட்டில் இருந்த 2 கியாஸ் சிலிண்டர்களும் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    இதனால் வீடு முழுவதும் தீ பரவி கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.

    இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முடியவில்லை.

    அதற்குள் வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.

    தீவிபத்து குறித்து தகவல் அறிந்த பாபநாசம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த தளவாட சாமான்கள், மின் சாதனங்கள், கட்டில் பீரோ, புடவை என ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

    தீவிபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • .நள்ளிரவு நேரத்தில் திடீரென சரசு வீட்டில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது.
    • மரக்காணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரசு (45)நேற்று இரவு இவரது வீட்டில் வழக்கம்போல் சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர் .நள்ளிரவு நேரத்தில் திடீரென சரசு வீட்டில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதன் காரணமாக அவரது கூரை வீடும் தீ பற்றி எரிந்தது. சிலிண்டர் வெடிக்கும் போது இரவு நேரம் என்பதால் பக்கத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களும் பயங்கர சத்தத்தை கேட்டு என்ன நடக்கிறது என தெரியாமல் அவரவர் வீட்டை விட்டு வெளியில் வெகு தூரம் ஓடி உள்ளனர். அப்போதுதான் சரசு வீட்டில் சிலிண்டர் வெடித்தது தெரியவந்துள்ளது .

    உடனே அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்து உள்ளனர். ஆனால் தீ வீடு முழுவதும் பரவி விட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் மரக்காணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவத்திற்கு இடத்திற்கு வந்து தண்ணீர் பீய்ச்சி அணைத்தனர். இந்த தீ விபத்தில் சரசு வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதமாகி விட்டது . இந்த தீ விபத்து குறித்து மரக்காணம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாம்பழத்துறையாறு. சோழன் திட்டை அணைகள் முழு கொள்ளளவை எட்டி விட்டன
    • அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப் பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    சிற்றாறு-1, சிற்றாறு-2 மற்றும் மாம்பழத்துறையாறு. சோழன் திட்டை அணைகள் முழு கொள்ளளவை எட்டி விட்டன. இதனால் அந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப் பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை, பெரு ஞ்சாணி அணைகளு க்கும் தண்ணீர் வரத்து அதிக மாகவே உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் தற்போது 41.91 அடியாக உள்ளது. 77 அடி கொள்ள ளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 71.70 அடி நீர்மட்டம் உள்ளது.

    பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 354 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 172 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 372 கன அடி தண்ணீர் வரும் நிலையில் 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    வழக்கமாக அணையின் முழு கொள்ளளவில் 6 அடி குறைவாக தண்ணீர் இருக்கும் போது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். தற்போது பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் அந்த குறிப்பிட்ட அளவை நெருங்கி வருவதால், பொதுப்பணித்துறையினர் அணைகளுக்கு வரும் நீர்வரத்ைத 24 மணி நேரமும் கண்காணித்து வரு கின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வரும் நிலையில் பொய்கை அணை மட்டும் நீர் வரத்து இல்லாமல் உள்ளது.42.65 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 8.60 அடியே நீர்மட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்றும் மாவட்டத்தில் சாரல் மழை பெய்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.கொட்டாரத்தில் அதிகபட்சமாக 16 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.

    இதற்கிடையில் கல்குளம் தாலுகாவில் நேற்று ஒரே நாளில் மழைக்கு 14 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. ஏற்கனவே 125-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • குடிசை வீடு நேற்று அதிகாலை 2 மணியளவில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
    • இது சம்பந்தமாக ஜெயராஜ் முத்தாண்டிகுப்பம் போலீசில் புகார் கொடுத்து உள்ளார்

    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள மணலூர் காலனியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 48). இவருடைய குடிசை வீடு நேற்று அதிகாலை 2 மணியளவில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாததால் வேறு யாருக்கும் எந்த சேதமும் இல்லை வீட்டில் இருந்த துணிகள் மட்டும் எரிந்துள்ளது. இது சம்பந்தமாக ஜெயராஜ் முத்தாண்டி குப்பம் போலீசில் புகார் கொடுத்து உள்ளார். முத்தாண்டி குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவிலில் இருந்த சிலைகள் உடைக்கப்பட்டு, மரங்கள் அனைத்தும் வெட்டியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
    • சிலைகளை சேதப்படுத்தி, மரங்களை வெட்டிய மர்மநபரை தேடி வந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பூசப்பாடி கிராம எல்லையில் உள்ள பஞ்சமி நிலத்தில் கன்னிமார் கோவில் உள்ளது. கடந்த 14-ந்தேதி ஊனத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிட கிராம மக்கள் இக்கோவிலில் கிடா வெட்டி வழிபாடு செய்ய 100-க்கும் மேற்பட்டோர் வந்தனர். கோவிலில் இருந்த சிலைகள் உடைக்கப்பட்டு, மரங்கள் அனைத்தும் வெட்டியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது சம்பந்தமாக போலீசாருக்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

    மேலும், கோவில் சிலையை உடைத்து சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று 100-க்கும் மேற்பட்டோர் கோவிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் பாரத் சின்னசேலம் போலீசாரிடம் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், சாமி சிலைகளை சேதப்படுத்தி, மரங்களை வெட்டிய மர்மநபரை தேடி வந்தனர். இ்ந்நிலையில் சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், ஊனத்தூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 44) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அங்குள்ள மரங்களை வெட்டியதை அவர் ஒப்புக்கொண்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • விவசாயிகள் குறுவை சாகுபடியை ஆர்வத்துடன் தொடங்கினார்.
    • மேட்டூர் அணையில் நீர்மட்டம்குறைந்து போனதாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    திருவாரூர்:

    காவிரி டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.

    அதன்படி இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    பின்னர் அந்த காவிரிநீர் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்தடைந்து, அங்கிருந்து நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது.

    இதனால் விவசாயிகள் குறுவை சாகுபடியை ஆர்வத்துடன் தொடங்கினார்.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் உள்ள தோலி, உதயமார்த்தாண்டபுரம், வடசங்கந்தி, இடையூறு, குன்னலூர், பாண்டி போன்ற பகுதிக பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

    தற்போது பயிர்கள் நன்கு வளர்ந்து வந்த நிலையில் பருவமழை பொய்த்து போனதாலும், மேட்டூர் அணையில் நீர்மட்டம்குறைந்து போனதாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    இதனால் விவசாயிகள் மோட்டார் வைத்து தண்ணீர் இறைத்து பயிர்களை காப்பாற்றி வந்தனர்.

    இந்த நிலையில் முத்துப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் குறுவை நெல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. இந்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியது.

    இதனால் பயிர்கள் வயல்களில் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் வயல்களில் எந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணி தடைபட்டு உள்ளது பல போராட்டங்களுக்கு பிறகு அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களில், பருவம் தவறி பெய்த மழையால் அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில், வயல்களில் தண்ணீர் தேங்கி கிடப்பதாலும், பயிர்கள் சாய்ந்ததாலும் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியது.
    • வீட்டில் இருந்த பொருட்கள், முக்கிய ஆவணங்கள் என அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலானது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லை சிவன்தெற்கு வீதியை சேர்ந்தவர் அருள்வாசகம். இவர் குத்தாலம் பேரூராட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் அருள் வாசகம் பணிக்கு சென்ற நிலையில், மனைவி மங்கையர்கரசியும் வீட்டை பூட்டிவிட்டு ரேஷன் கடைக்கு சென்று விட்டார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அருள் வாசகம் வீட்டில் தீப்பிடித்தது. தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாக தீ மளமள வென பரவியது.

    இது குறித்து தகவல் அறிந்த நாகை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    இருந்தும் வீட்டிலிருந்த பீரோ, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் நில பத்திரம், ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் என ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது.

    மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டி ருக்கலாம் என்று கூறப்படு கிறது. இது குறித்து நாகை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×