search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் கம்மியம்பேட்டையில்  ெரயில்வே   கேட் பழுதானதால் ½ மணி      நேரம் நின்ற எக்ஸ்பிரஸ் ெரயில்:   பொதுமக்கள் அவதி
    X

    கடலூர் கம்மியம் பேட்டை ெரயில்வே கேட் பழுதால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்த காட்சி.

    கடலூர் கம்மியம்பேட்டையில் ெரயில்வே கேட் பழுதானதால் ½ மணி நேரம் நின்ற எக்ஸ்பிரஸ் ெரயில்: பொதுமக்கள் அவதி

    • கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் கம்மியம்பேட்டை பகுதியில் ெரயில்வே கேட் உள்ளது.
    • திடீரென்று ெரயில்வே கேட்டில் பழுது ஏற்பட்டதால் சரியான முறையில் ெரயில்வே கேட் மூடவில்லை.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் கம்மியம்பேட்டை பகுதியில் ெரயில்வே கேட் உள்ளது. இதன் அருகில் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையம் உள்ளன. ெரயில்கள் வந்து செல்லும் நேரத்தில் கம்பியம் பேட்டை ெரயில்வே கேட் மூடப்படும். ெரயில்வே கேட் மூடும் சமயத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பது வழக்கம். மேலும் கம்மியம்பேட்டை ெரயில்வே கேட் அடிக்கடி பழுது ஏற்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை மன்னார்குடி - திருப்பதி எக்ஸ்பிரஸ் கடலூர் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது கடலூர் கம்மியம் பேட்டையில் ெரயில்வே கேட்டை மூடும் பணியில் ஊழியர் ஈடுபட்டு வந்தார். திடீரென்று ெரயில்வே கேட்டில் பழுது ஏற்பட்டதால் சரியான முறையில் ெரயில்வே கேட் மூடவில்லை. இதன் காரணமாக தண்ட வாளத்தில் சிக்னல் கிடைக்க வில்லை. சிக்னல் கிடைக்காத தால்ரெயில் டிரைவர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் ெரயிலை நிறுத்தினார். இதனை தொடர்ந்து ெரயில்வே கேட் கீப்பர் ெரயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில் ஊழி யர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ெரயில்வே கேட்டில் ஏற்பட்ட பழுதை நீண்ட போராட்டத்திற்கு பிறகு சரி செய்தனர். அதன் பின்னர் மன்னார்குடி- திருப்பதி எக்ஸ்பிரஸ் ெரயில் சுமார் அரை மண நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது ரெயில்வே கேட் பழுதானதால் கடலூர் கம்மியம்பேட்டை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும் சென்னை மற்றும் சிதம்பரத்தி லிருந்து வரக்கூடிய அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் வெளியூருக்கு செல்லக்கூடிய வாகனங்கள் ஜவான் பவன் சாலை, கம்மியம்பேட்டை பாலம், செம்மண்டலம் வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×