search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழுது"

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் மையம் அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
    தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ‘வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் அமைக்கப்படுகிறது. மானியத்தில் அமைக்கும் இந்த புதிய திட்டத்தை கடந்த 2021-22ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகின்ற னர். 

    விவசாயிகள் தங்கள் வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டு களை தங்கள் விளை நிலங்களிலேயே பழுது நீக்கி பராமரிக்கவும், விவசாயிகள் வேளாண் பணிகளை எவ்வித இடர்பாடு களுமின்றி குறித்த நேரத்தில் செய்திடவும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி, நிலையான வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்ப டுத்தும் நோக்கத்துடனும் இம்மையங்கள் அமைக்கப்ப டுகின்றன. 

    தொழில் முனைவோர், விவசாயகுழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இம்மையங்கள் மானியத்தில் அமைத்துத் தரப்படும். 

    2022-23-ம் ஆண்டு வேளாண் கூட்டத் தொடர் அறிவிப்பின்படி, தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 25 மையங்கள் அமைக்கப்ட உள்ளன. இம்மையங்கள் ரூ.8 லட்சம் செலவில் அமைக்கப்படுகின்றன. இதில் 50 சதவீத மானிய அடிப்படையில் அதிக பட்சமாக ரூ.4 லட்சம் மானியம் வழங்கப்படும். 

    மையங்கள் அமைக்க போதிய இடவசதியும், மும்முனை மின்சார இணைப்பும் கொண்ட கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் அருகாமையிலுள்ள வேளாண்மை பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் வேளாண்மை (பொறுப்பு) அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தினை அளிக்கலாம். 

    மாவட்ட கலெக்டர் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளிகளுக்கு இம்மையம் மானியத்தில் அமைத்துத் தரப்படும். மையங்கள் அமைக்கத் தேவையான எந்திரங்கள் ஒப்பந்தப்பு ள்ளி அடிப்படையில் கண்காணிப்புப் பொறியா ளரால் முடிவு செய்யப்பட்டு, பயனாளிகள் மொத்த தொகையை செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
     
    ×