search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vysarpadi railway bridge"

    வியாசர்பாடி ரெயில்வே பாலத்தில் பழுதாகி நின்ற குடிநீர் லாரியால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பழுதான லாரி அப்புறப்படுத்தப்பட்ட பிறகு போக்குவரத்து சீரானது. #WaterTruck
    பெரம்பூர்:

    சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் லாரி ஒன்று, இன்று காலை வியாசர்பாடியில் இருந்து புளியந்தோப்புக்கு சென்று கொண்டிருந்தது.

    காலை 10 மணியளவில் அம்பேத்கர் கல்லூரி சாலையில் உள்ள கணேசபுரம் ரெயில்வே பாலத்தில் குடிநீர் லாரி சென்றபோது பழுதாகி நின்றது. உடனே பழுதை சரிசெய்ய முடியவில்லை.

    12 ஆயிரம் லிட்டர் குடிநீருடன் பாலத்தில் நின்ற அந்த லாரியை அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால் ரெயில்வே பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக நின்றன.

    இதுபற்றி குடிநீர் வாரியத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மற்றொரு குடிநீர் லாரி வரவழைக்கப்பட்டு 6 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மாற்றப்பட்டது.

    மீதம் உள்ள 6 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பாலத்தில் திறந்து விடப்பட்டது. அது வெள்ளம்போல் ரோட்டில் கரைபுரண்டு ஓடியது. பின்னர் வேறு ஒரு வாகனம் மூலம் பழுதான லாரியை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதனால் இந்த சாலையில் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வியாசர்பாடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

    குடிநீர் லாரி ரெயில்வே பாலத்தில் நின்று போனதால் வியாசர்பாடி பகுதியில் மதியம் 12 மணி வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பழுதான லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகு போக்குவரத்து சீரானது. #WaterTruck

    ×