search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை அமைக்கும் பணி
    X

    சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.

    சாலை அமைக்கும் பணி

    • ரெயில்வே சாலை மிகவும் பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக சேதம் அடைந்திருந்தது.
    • 300 மீட்டர் நீளத்தில், 8 மீட்டர் அகலம் கொண்ட புதிய ஈரடுக்கு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

    பாபநாசம்:

    பாபநாசம் ரயில் நிலையத்தில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பாபநாசம் ரயில்வே சாலை மிகவும் பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக சேதம் அடைந்திருந்தது.

    இந்த சாலையினை புதுப்பிக்க வலியுறுத்தி பாபநாசம் ரயில் பயணிகள் சங்கம், தஞ்சை மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் பாபநாசம் வர்த்தக சங்கம் ஆகியோர் தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்தித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் பாபநாசம் ரயில்வே சாலைக்கு ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 300 மீட்டர் நீளத்தில், 8 மீட்டர் அகலம் கொண்ட ஈரடுக்கு புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

    இப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்த ரயில்வே கோட்ட பொது மேலாளருக்கு திருச்சி தென்னக ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் சரவணன், நெல்லை மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க செயலாளர் கிரி பாபநாசம் வர்த்தக சங்கத் தலைவர் குமார், தென்னக ரயில்வே கோட்ட முதல் நிலை ஒப்பந்தக்காரர் சுரேஷ் ரெட்டி ஆகியோர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    Next Story
    ×