search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை காலத்திற்கு முன்பு சாத்தான்குளம் வாரச்சந்தை பழுது பார்க்கப்படுமா?  - வியாபாரிகள் கோரிக்கை
    X

    பழமையான கட்டிடத்தில் இயங்கும் வாரச்சந்தையை படத்தில் காணலாம்

    மழை காலத்திற்கு முன்பு சாத்தான்குளம் வாரச்சந்தை பழுது பார்க்கப்படுமா? - வியாபாரிகள் கோரிக்கை

    • தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நாசரேத் மெயின் ரோட்டில் உள்ள இடத்தில் கூடுகிறது.
    • சந்தைக்கு வருகிற சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வசதியாக நின்று வாங்கி செல்ல முடியவில்லை.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நாசரேத் மெயின் ரோட்டில் உள்ள இடத்தில் கூடுகிறது.

    கடந்த பல வருட காலமாக இந்த சந்தையில் பழமையான கட்டிடத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தில் வைத்து தான் வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.

    சந்தைக்கு வருகிற சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வசதியாக நின்று வாங்கி செல்ல முடியவில்லை. மேலும் பழமையான கட்டிடத்தில் கழிப்பிடம் ஒன்று புழக்கத்தில் இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் மிகவும் சங்கடப்படுகின்றனர்.

    எனவே பொதுமக்கள் வியாபாரிகள் நலம் கருதி நவீன கழிப்பிட வசதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் மழைக்காலங்களில் வாரச்சந்தையில் ரோடுகளில் மணலில் தண்ணீர் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.

    இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக வாரச் சந்தையை பழுதுபார்த்து சீரமைக்காவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என பாரதிய ஜனதா கட்சியினர் அறிவித்துள்ளனர். எனவே பேரூராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக வரும் மழை காலத்திற்கு முன்பாக வாரச் சந்தையில் பழைய கட்டிடங்களை அப்புறப்படுத்தி புதிய பொழிவுடன் கட்டிடங்கள் கட்டி சந்தை முழுவதும் சிமெண்ட் சாலைகள் அமைத்து வியாபாரிகள் வியாபாரம் செய்யவும், பொதுமக்கள் கஷ்டமின்றி பொருட்கள் வாங்கி செல்லவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாரச் சந்தை வியாபாரிகளும், சுற்றுப்புற கிராம மக்களும் பேரூராட்சி நிர்வாகத்தினருக்கும் மற்றும் அனைத்து கட்சிகளுக்கும் கோரிக்கை மனுக்கள் கொடுத்துள்ளனர்.

    Next Story
    ×