search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramanathapuram"

    • இல்லம் தேடி இளைஞரணி தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாமை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • இளைஞரணி யூசுப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே உள்ள சாத்தான்குளம் ஊராட்சி யில் மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் மாவட்ட இளைஞரணி இளைஞரணி சார்பில் இல்லம் தேடி இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படியும், மாநில இளைஞ ரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவு றுத்தலின் படியும், மாநில இளை ஞரணி துணை செயலாளர் இன்பா ரகு ஆலோசனையின் பேரில் மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க மற்றும் மாவட்ட இளைஞரணி சார்பில் மேற்கு ஒன்றிய பொறுப்பா ளர் கே.ஜே.பிரவீன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா ஆகியோர் ஏற்பாட்டில் இல்லம் தேடி இளைஞரணி சேர்க்கை முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

    மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கோபிநாத், கவுன்சிலர் ரமேஷ் கண்ணன்,தௌபீக் ரஹ்மான், கீழக்கரை நகர் இளைஞரணி அமைப்பா ளரும், நகரசபை துணை தலைவருமான வழக்கறிஞர் ஹமீது சுல்தான், துணை அமைப்பாளர்கள் கவுன்சிலர் பயாஸ், நயீம், சாத்தான்குளம் தொழிலதிபர் ரம்லி, இளைஞரணி யூசுப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சக்கரக்கோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
    • முடிவில் ஊராட்சி செயலர் காசி நாதன் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மன்ற தலைவர் யாழினி புஷ்ப வள்ளி தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவ லர் முனீஸ்வரன் முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில் வரும் நிதியாண்டில் நிறை வேற்றப்பட வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் தேர்வு செய்யப்பட்டு கிராம சபையில் ஒப்புதல் பெறப் பட்டது. 100 நாள் வேலை திட்டம் சம்பந்தமான குறைகள் கிராம மக்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.

    பொது மக்கள் குடிநீர், மின் வசதி, கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

    இந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். முடிவில் ஊராட்சி செயலர் காசி நாதன் நன்றி கூறினார்.

    • நாளை விநாயகர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.
    • சிறப்பு மகா தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    ராமநாதபுரம்:

    விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உப்பூர் விநாயகர் கோவிலில் நாளை விநாயகர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அமைந்துள்ளது ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் கோவில். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா மிகச்சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி விழாவானது கடந்த 10-ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. திருவிழாவில் தினமும் விநாயகர் சிம்ம, மயில், யானை வாகனம் போன்ற வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதனிடையே திருவிழாவின் 6-வது நாளான நேற்று விநாயக பெருமானுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து சிறப்பு மகா தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து இரவு ரிஷப வாகனத்தில் விநாயகா் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 18-ந் தேதி (திங்கட்கிழமை) தேரோட்டமும், 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தீர்த்தவாரி மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.

    • முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடக்கிறது.
    • யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் லாந்தை கிராமத்தில் சந்தவழியான் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டது.

    இதையொட்டி நேற்று மாலை மங்கல இசை, எஜமான் சங்கல்பம், மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், கலாகர்ஷனம், முதல் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி நடந்தது. இன்று (சனிக்கிழமை) மங்கல இசை, சூரிய பூஜை, இரண்டாவது யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை மங்கல இசை கோமாதா பூஜை, நாடிசந்தானம், பரிஷாகுதி, உயிர் ஓட்டம், மகா பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடக்கிறது.

    சந்தவழியான் கோவில் விமான கோபுரங்கள் மற்றும் பரிவார தெய்வங்களான முனியப்ப சாமி, விநாயகர், பாதாள காளியம்மன், கருப்பணசாமி ஒச்சமை, நாச்சம்மை, நாகக்கன்னி, சோனை கருப்பர் ஆகிய சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பும் செய்யப்படுகிறது. மேலும் முதுகுளத்தூர், ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து கும்பாபிஷேக விழாவுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் அரசு உயர் அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு போலீசார் மூலம் பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாட்டினை சந்தவழியான் சுவாமி கோயில் குடிமக்கள் செய்து வருகின்றனர்.

    • ராமநாதபுரத்தில் பா.ஜ.க. கருத்தரங்கு நடந்தது.
    • நகர் தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கேணிக்கரை தனியார் விடுதியில் பா.ஜ.க. சார்பில் தேச பிரிவினை நாள் கருத்தரங்கு மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் தலைமையில் நடந்தது.

    இதில் மாவட்ட பார்வை யாளர் முரளி தரன், மாவட்ட பொதுச்செய லாளர்கள் பவர் நாகேந்தி ரன், மணிமாறன், அஜ்மல் கான், கவுன்சிலர் முருகன், மாவட்ட துணைத் தலை வர்கள் சங்கீதா, குமார், லண்டன் கேசவன், கலையரசி, நகர் தலைவர், ஒன்றிய தலைவர் சண்முக நாதன், சிவசங்கர், ராஜ்குமார், முனியசாமி ஆகியோர் கலந்து கொண்டு அகண்ட பாரதத்தின் தேச ஒற்றுமை குறித்து விளக்கி பேசினர்.

    இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் குமரன் செய்திருந்தார். நகர் தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • தொண்டி, திருவாடானை பகுதிகளில் பிரதோச வழிபாடு நடந்தது.
    • தொண்டி சிதம்பரேஸ்வரர் ஆகிய சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளை அன்ன பூரணேஸ்வரி சமேத ஸ்ரீ நம்பு ஈஸ்வரர் கோவிலில் பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு பால், பழம் பன்னீர், சந்தனம், இளநீர் விபூதி, அரிசி மாவு, தேன் பஞ்சாமிர்தம் மற்றும் அபிசேக பொடிகளால் நந்திக்கு சிறப்பு அபிஷேம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவ மூர்த்தி வீதி உலா வந்தது. இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர். அபிஷேக பால் மற்றும் சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. வாசு, கருப்பசாமி ஆகியோர் பூஜை ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதே போல் திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர், ஓரியூர் சேயுமானவர், எஸ்.பி.பட்டிணம் ஏகாம்பரேஸ்வரர் தீர்த்தாண்டதானம் சர்வ தீர்த்தேஸ்வரர், தொண்டி சிதம்பரேஸ்வரர் ஆகிய சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    • மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களை பெற்றோர்கள் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் முதல் 3 இடங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

    இப்போட்டியில் சிவகங்கை, மதுரை, திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர். இதில் ராமநாதபுரத்தில் இருந்து 24 மாணவர்கள் கலந்து கொண்டு 11 தங்கப்பதக்கம், 10 வெள்ளிப்பதக்கம், 3 வெண்கலப்பதக்கம் வென்று ராமநாதபுரம் மாணவர்கள் முதல் 3 இடங்களை பிடித்தனர். சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேல் உடன் இருந்தார். வெற்றி பெற்ற மாணவர்களை பெற்றோர்கள் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.
    • குர்பானி வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 200க்கும் மேற்பட்ட ஜூம்ஆ பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.

    இறைத்தூதர் இபுராகிம் (அலை) தியாகத்தை கொண்டாடும் வகையில் முஸ்லிம் மக்கள் ஆண்டு தோறும் துல்ஹஜ் மாதம் பிறை 10ல் பக்ரீத் பண்டிகையை தியாகத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து இன்று காலை 7 மணி முதல் தக்பீர் முழக்கத்துடன் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேலான பள்ளிவாசல்கள் மற்றும் திறந்தவெளி மைதானங்க ளில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    தொடர்ந்து பள்ளிவா சலில் பேஷ் இமாம்கள் பக்ரித் பண்டிகையின் சிறப்புகள் குறித்து பயான் (சொற்பொழிவு) நடைபெற்றது. பின்பு உலக மக்களின் அமைதிக்காகவும், மத நல்லிணக்கம் தொட ரவும் சிறப்பு துவா (பிரார்த்தனை) நடை பெற்றது.

    இதை தொடர்ந்து வீடுகளில் ஆடு, மாடுகள் குர்பானிக்காக அறுக்கப் பட்டு அதன் இறைச்சிகளை உறவினர்க ளுக்கும், ஏழைகளுக்கும் வழங்கினர்.

    ராமநாதபுரத்தில் வெளிப்பட்டணம், சின்னக்கடை, பாரதி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும், கீழக்கரையில் தெற்குத்தெரு, நடுத்தெரு, பழைய குத்பா பள்ளி, வடக்குத்தெரு, மேலத்தெரு உள்பட 13க்கும் அதிகமான பள்ளிவாசல்களில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதே போல் பனைக்குளம், என்ம னங்கொண்டான், ஏர்வாடி, மண்டபம், பாம்பன், ராமேசுவரம், பெருங்குளம், பெரிய பட்டினம், தேவிபட்டினம், சித்தார் கோட்டை, அழகன்குளம், தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளிவா சல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகை முடிந்ததும் சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஒருவருக்கொ ருவர் கட்டியணைத்து பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

    தொண்டி

    தொண்டியில் இன்று பக்ரீத் பண்டிகை உற்சாக மாக கொண்டாடப்பட்டது. பள்ளிவாசல்களில் பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் சிறப்பு தொழுகையில் ஈடு பட்டனர். மேலும் முஸ்லிம் கள் ஒருவருக்கொருவர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக் களை தெரிவித்து கொண்ட னர். மேலும் ஏழைகளுக்கு குர்பானி வழங்கப்பட்டது.

    விருதுநகர்-சிவகங்கை

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, நரிக்குடி, வீரசோழன், காரேந்தல், ராஜபாளையம், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டி கையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லீம்கள் பங்கேற்றனர்.

    சிவகங்கை மாவட்டத்தி லும் இன்று காலை பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழு கையில் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • கீழக்கரை பள்ளியில் இஹ்ராம் தின நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவ-மாணவிகள் விளக்கி கூறினர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள அல்பையினா மெட்ரிகுலேஷன் பள்ளியின் இஸ்லாமிய கல்வித்துறை சார்பாக இஹ்ராம் தின நிகழ்ச்சி நடந்தது.

    இதில் இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்றான ஹஜ் பயணம் செய்வது பற்றி விழிப்புணர்வு மற்றும் வழிமுறைகளை மாணவ-மாணவிகள் விளக்கி கூறினர்.

    இதில் ஹஜ் பயணம் செல்லும்போது எங்கு செல்வார்கள்? என்னென்ன முறையில் பயன்படுத்துவார்கள்? என்பது போன்ற பல்வேறு வழிமுறைகள் குறித்து மாணவ-மாணவிகள் நடித்துக்காட்டினர்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அல்பையினா மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் செய்திருந்தனர். 

    • ராமநாதபுரத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.
    • பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்.

    ராமநாதபுரம்

    ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத் திற்கு கடந்த 13-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப் பட்டிருந்தது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் இன்று (24-ந்தேதி) வேலை நாள் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்தி ருந்தார். அதன்படி இன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வேலை நாளாகும்.

    இந்தநிலையில் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு மண்டபம், திருப்புல்லாணி, ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடனை, நயினார்கோயில், போகலூர், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் மற்றும் கடலாடி ஆகிய11 ஒன்றியங்களில் சி.ஆர்.சி பயிற்சி வகுப்புகள் இன்று நடைபெறுகிறது.

    இதனால் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக தெரிவிக்கப் படுகிறது. மேலும் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை வழக்கம் போல் வகுப்புகள் நடக்கும் என தெரிவிக்கப் பட்டது. அதன்படி பள்ளிகள் இன்று செயல்பட்டன. 

    • பழந்தின்னி வவ்வால்கள் அழிந்து வருகிறது.
    • விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக மரங்கள் உள்ள இடங்களில் ஏராளமான பழந்தின்னி வவ்வால்கள் வாழ்கின்றன. இவற்றை சிலர் மருந்திற்காக வேட்டையாடுவதாக புகார் எழுந்துள்ளது. கூட்டமாக வாழும் மரங்களில் சிலர் கற்களை வீசி விரட்டுகின்றனர். எனவே குறைந்து வரும் பழந்தின்னி வவ்வால்களை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேணடும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பழங்களை உண்டு வாழும் வவ்வால்கள் கிராமப்பகுதி களில் காணப்படுகின்றன. வவ்வால்களால் யாருக்கும் பெரிய அளவில் தொல்லை கிடையாது. இரவில் மட்டுமே தங்களுக்குரிய இரையை தேடி செல்கின்றன. பழந்தின்னி வவ்வால்கள் இரவு நேரங்களில் பழத்தின் சாறை மட்டுமே உறிஞ்சி குடிக்கும். பழத்தின் சக்கையை உமிழ்ந்து விடும். பூக்களில் உள்ள தேனையும் குடிக்கும், என்கின்றனர்.

    வவ்வால்கள் பெரும்பாலும் பழைய கட்டிடங்கள், அடர்ந்த மரங்களில் வாழ்கின்றன. மருத்துவ குணமிக்கதாக கருதி சிலர் வவ்வால்களை வேட்டையாடு கின்றனர். இதன் விளைவாக ஆண்டு தோறும் பழந்தின்னி வவ்வால்க ளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

    இவற்றை காண்பதே அரிதாகி வரும் நிலையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மரங்களில் பல ஆயிரம் பழந்தின்னி வவ்வால்கள் வாழ்கின்றன. அவற்றை சிலர் கல்வீசி தாக்குவது உள்ளிட்ட தொந்தரவுகளை செய்வதால் அச்சத்தில் மின் கம்பிகளில் அடிபட்டும் இறக்கின்றன.

    எனவே தற்காலத்தில் குறைந்து வரும் பழந்தின்னி வவ்வால்களை பாதுகாக்க அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக, மாணவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவில் மேற்கொள் ளப்பட்டு வருகின்ற வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், மனித வள மேம்பாட்டுத்துறை அரசு செயலாளருமான நந்த குமார் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்களான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் மிஷின் சமத்துவபுரங்களின் பராமரிப்பு, பிரதம மந்திரி சுவாஸ் யோஜனா, நீலப் புரட்சி திட்டம், பசுமை வீடுகள் திட்டம், வேளாண்மைத்துறை சார்பில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் ஒழுங்கு முறை விற்பனை மையம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொதுசுகாதாரத் துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறைகளில் முடிவுற்ற பணிகள் மேற்கொள்ளப் படும் பணிகள் மற்றும் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் அந்த பணிகளை திட்டமிட்டபடி உரிய காலத்திற்குள் முடித்திட வேண்டும். முதலமைச்சர் அறிவுரைப்படி அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் கிடைத்திடும் வகையில் செயல்பெற்றிட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    கூட்டத்திற்கு பின் தொடர்ந்து அச்சுந்தன்வயல், தேவேந்திர நல்லூர் பகுதிகளில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு கணிப்பாய்வு அலுவலர் நந்தகுமார் அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, ராமநாத புரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, மகளிர் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×