என் மலர்
நீங்கள் தேடியது "Kumbabhishekam"
- காளியம்மன், புல்லாத்தாள் கோவில் விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
- விழாவிற்கு வரும் அனைவருக்கும் அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் :
பொங்கலூர் அருகே உள்ள தாயம்பாளையத்தில் கற்பக விநாயகர், மாகாளியம்மன், காளியம்மன், புல்லாத்தாள் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நாளை 17-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு நான்காம் காலயாக வேள்வி நடத்தப்பட்டு 5 மணிக்கு மேல் கற்பக விநாயகர், மாகாளியம்மன் விமான கோபுர கும்பாபிஷேகமும், காலை 6 மணிக்கு மேல் காளியம்மன், புல்லாத்தாள் கோவில் விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து மூல விக்கிரகங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது. விழாவிற்கு வரும் அனைவருக்கும் அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- கும்பாபிஷேக விழா கடந்த 9-ந் தேதி துவங்கியது.
- யாகபூஜை, நாடிசந்தானம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள சின்னியகவுண்டம்பாளையத்தில் விநாயகர், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 9-ந் தேதி துவங்கியது. கும்பாபிஷேக விழாவையொட்டி முளைப்பாரி, தீர்த்த கலசம், கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து யாக சாலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகாசனம், நான்காம் கால யாகபூஜை, பூர்ணாகுதி,தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்,அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், யாகபூஜை, நாடிசந்தானம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.இதைத்தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், யாக பூஜை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து மகா பூர்ணாகுதி தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. காலை 6:45 மணி முதல் விநாயகர், மாகாளியம்மன் கோவில் பரிவார மூர்த்திகள் மற்றும் விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விநாயகர் மற்றும் மாகாளியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, பூஜைகள் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதேபோல பல்லடம் அருகே உள்ள குண்ணங்கல் பாளையம் பிரிவில் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மகாதீபாராதனை, அன்னதானம் வழங்குதல் நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமென கோவில் கமிட்டியாளர்கள் தெரிவித்தனர்.
- பாலாலயம் செய்த பின்புதான் திருப்பணி செய்வதற்கு அனுமதி பெறமுடியும்.
பல்லடம் :
பல்லடம் கடைவீதியில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான பொன்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இந்நிலையில், கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் கோவில் செயல் அலுவலர் பிரேமா தலைமையில் நடைபெற்றது. இதில் கோவில் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில், கோவில் முறையாக அளவீடு செய்து அதன் பின்னர் சுற்றுச்சுவர் தளம் அமைக்கும் பணி செய்ய வேண்டும். திருப்பணி நடைபெறுவது குறித்து பக்தர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமென கோவில் கமிட்டியாளர்கள் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்து செயல் அலுவலர் பிரேமா பேசுகையில், பாலாலயம் செய்த பின்புதான் திருப்பணி செய்வதற்கு அனுமதி பெறமுடியும். எனவே கோவில் திருப்பணி செய்வதற்கான தேதியை முடிவு செய்ய வேண்டும். அக்டோபர் 23, 28, நவம்பர் 11, 13, 14, ஆகிய தேதிகள் திருப்பணி செய்வதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கோவில் திருப்பணிக்கு ஸ்தபதி, மற்றும் கும்பாபிஷேக தேதி ஆகியவற்றை தீர்மானித்து, சர்வேயர் மூலம் அளவீடு பணி செய்து ஆக்கிரமிப்புகள் ஏதும் இருந்தால் அவற்றை அகற்றிவிட்டு, கும்பாபிஷேகப் பணிகள் செய்யலாம், மேலும் இந்து அறநிலையத்துறை கோவில் என்பதால் அறநிலையத்துறை அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்ளாது. கோவில் கமிட்டியாளர்கள், நன்கொடையாளர்கள் மூலம், திருப்பணிகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஊராட்சி கோட்டை வேதகிரி மலை அடிவார பகுதியில் உள்ள ஜீவா நகர் பால தண்டாயுதபாணி கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
- இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
பவானி:
பவானி அருகே உள்ள ஊராட்சி கோட்டை வேதகிரி மலை அடிவார பகுதியில் உள்ள ஜீவா நகர் பால தண்டாயுதபாணி கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
முன்னதாக கும்பாபிஷேக விழா கடந்த 9-ந் தேதி விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. 10-ந் தேதி மகா கணபதி ஓமம் நடைபெற்றது. பின்னர் கூடுதுறையில் இருந்து ஏராளமான பக்தர்கள் புனித தீர்த்த குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கோவில் வந்து அடைந்தனர்.
தொடர்ந்து முதல் கால யாக பூஜை மற்றும் நான்கு கால யாக பூஜை வேள்வி பால தண்டாயுதபாணி சுவாமிக்கு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு மேல் கோவிலில் உள்ள ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவில் பவானி, ஊராட்சிகோட்டை, குருப்ப நாயக்கன் பாளையம், தொட்டி பாளையம், சேர்வராயன் பாளையம், காடையம்பட்டி உள்பட பல்வேறு கிராம பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
- ஆதிரத்தினேசுவரா் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- இன்று மாலை 4 மணிக்கு திருக்கல்யாணமும், சுவாமி மற்றும் பஞ்சமூா்த்திகளின் வீதி உலாவும் நடைபெறுகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் வெளிப்பட்டணம் சவுபாக்கிய நாயகி சமேத ஆதிரத்தினேசுவரர் கோவில் உள்ளது. மஞ்சப்புத்தூா் ஆயிர வைசிய சமுதாய மக்களுக்கு பாத்தியமான இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 9-ந் தேதி தொடங்கியது.
இதைத்தொடர்ந்து 3 யாக சாலை பூஜைகள் நடைபெற்று நிறைவடைந்தது.
இன்று (12-ந் தேதி) அதிகாலை 4-ம் கால யாகசாலை பூஜைக்கு பின் பூர்ணாஹுதி, தீபாராதனையை தொடர்ந்து விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று மாலை 4 மணிக்கு திருக்கல்யாணமும், சுவாமி மற்றும் பஞ்சமூா்த்திகளின் வீதி உலாவும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலா்கள் ஞானசேகரன், சாந்த மூர்த்தி, சரவணன், ஆயிர வைசிய மகாஜனசபை தலைவா் மோகன் மற்றும் நிர்வாகிகள், கும்பாபிஷேகம் மற்றும் திருப்பணிக் கமிட்டியினர் செய்திருந்தனர்.
- விநாயகர்-அழகு சவுந்தரி அம்பாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டம ங்கலம் நாட்டார்கள் மற்றும் நகரத்தார்கள் ஸ்தாணிகர்கள், திருப்பணி குழுவினர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் பட்டமங்கலத்தில் மதியாத கண்ட விநாயகர்-அழகு சவுந்தரி அம்பாள் கோவில் உள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
3 நாட்கள் 4 கால பூஜைகள், கணபதி ஹோமத்துடன் தொடங்கப்பட்டு யாக பூஜைகள் நடந்தன. இந்த நிறைவு பெற்று பூர்ணகுதி நடைபெற்று, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தக நாச்சியார் பங்கேற்றார். விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டமங்கலம் நாட்டார்கள் மற்றும் நகரத்தார்கள் ஸ்தாணிகர்கள், திருப்பணி குழுவினர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- செண்பகவள்ளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- பேரூராட்சி கவுன்சிலர் ரேகா ராமசந்திரன் சுதாரம் மற்றும் குடிநீர் வசதி செய்திருந்தார்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழ வந்தான் மேலரதவீதி, கிண்ணி மடத்தெருவில் குருநாதர் அருளானந்த சுவாமிகள் மடலாய வளாகத்தில் அமைந்துள்ள செண்பகவள்ளி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு கடந்த 6-ந் தேதி மாலை பிரசாத் சர்மா, தியாகராஜ தீட்ஷிதர், பட்டாச்சாரியார்கள் குழுவினர் விக்னேஷ்வரா பூஜையுடன் யாகசாலை பூஜைகள் முடிந்து நேற்று காலை யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய குடங்களுடன் கடம் புறப்பாடாகி மங்கள வாத்தியங்கள் முழுங்க புனித தீர்த்தங்கள் கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது வானில் கருட பகவான் வட்டமிட்டது.
இதையடுத்து அம்மனுக்கு 18 வகையான வாசனை திரவியம் கொண்டு அபிஷேகம் செய்தனர். பின்னர் மலர் அலங்காரம் செய்து அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டியினர் மற்றும் செண்பகம் பிள்ளை, முத்து பிள்ளை வகையறா பங்காளிகள் செய்திருந்தனர். பேரூராட்சி கவுன்சிலர் ரேகா ராமசந்திரன் சுதாரம் மற்றும் குடிநீர் வசதி செய்திருந்தார். பாதுகாப்பு பணியில் சோழவந்தான் போலீசார் ஈடுபட்டனர்.
- பாலமேடு அருகே கரந்தமலை, செல்லாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- விழா ஏற்பாடுகளை அய்யூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.
அலங்காநல்லூர்
பாலமேடு அருகே உள்ள அய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள செல்வவிநாயகர், கரந்தமலை, செல்லாயி அம்மன், மண்டுக்கருப்பு, அய்யனார், சப்தகண்ணிமார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
3 நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் 4 கால யாக பூஜையுடன் கடம் புறப்பாடாகி அழகர்கோவில், ராமேசுவரம் உள்ளிட்ட தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்தது. பின்னர் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அய்யூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.
- அம்பிளிக்கையில் பிறை கருப்பணசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கையில் பிறை கருப்பணசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு யாக பூஜை, சூரிய பூஜை, த்வாரா பூஜை, வேதி கார்ச்சனா நாடி சந்தானம்,ஸபர்சாஹீதி ஹமிதநாஜ்ய திரவிய ஹோமம் மஹாபூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ரா தானம்,கிரகபரீத்தி கலம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றது.
காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் பிறை கருப்பணசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காலை 10 மணிக்கு தச தரிசனம், மஹா அபிஷேகம் பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோடந்தூர் மணியம்குல பங்காளிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது.
- யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய குடங்களுடன் சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி வந்தனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி தினசரி காலை மற்றும் மாலையில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்து வந்தது.
விழாவின் 3-ம் நாளான நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலையில் மங்கள இசை, கணபதி பூஜைகளை தொடர்ந்து சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது. அதன் பின் நாடி சந்தனமும், 4-ம் கால யாகசாலை பூஜைகளும் இடம் பெற்றன. இதனையடுத்து மஹா பூர்ணாகுதியும், தீபாரா தனைகளும் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய குடங்களுடன் சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி வந்தனர்.
அதன் பின் சங்கு நாதம் முழங்க, மங்கள வாத்தியங்கள் ஒலிக்க கோவில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டது.
பின்னர் முத்தாரம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- கல்லல் அருகே பழமை வாய்ந்த சிவன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- தொடர்ந்து மாலையில் மாட்டு வண்டி பந்தயமும், இரவில் வள்ளி திருமணம் நாடகமும் நடந்தது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள கீழப்பூங்குடி கிராமத்தில் உள்ள 100 ஆண்டுக்கும் மேற்பட்ட பழமையான பசு ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
கீழப்பூங்குடி சிவாச்சாரியார் நேரு தலைமையில் யாக பூஜை தொடங்கி நடைபெற்றது. விக்னேஸ்வர பூஜையுடன் 3-ம் கால பூஜை தொடங்கியது. யாக சாலை பூஜைகளுடன் கும்ப கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது, ஊர் பொதுமக்கள் சார்பில் கும்ப மரியாதை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதைத் தொடர்ந்து கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
இந்த விழாவில் கீழப் பூங்குடி, மேலப்பூங்குடி, புதுவட்டி, கொடுங்குளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று வழிபாடு செய்னர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் மாட்டு வண்டி பந்தயமும், இரவில் வள்ளி திருமணம் நாடகமும் நடந்தது.கும்பாபிஷேகம் நடந்த சிவன்கோவில்






