பல்லடம் அருகே சித்தி விநாயகர்-மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக விழா கடந்த 9-ந் தேதி துவங்கியது.யாகபூஜை, நாடிசந்தானம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.
கும்பாபிஷேகம் நடைபெற்ற காட்சி.
கும்பாபிஷேகம் நடைபெற்ற காட்சி.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள சின்னியகவுண்டம்பாளையத்தில் விநாயகர், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 9-ந் தேதி துவங்கியது. கும்பாபிஷேக விழாவையொட்டி முளைப்பாரி, தீர்த்த கலசம், கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து யாக சாலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகாசனம், நான்காம் கால யாகபூஜை, பூர்ணாகுதி,தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்,அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், யாகபூஜை, நாடிசந்தானம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.இதைத்தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், யாக பூஜை நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து மகா பூர்ணாகுதி தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. காலை 6:45 மணி முதல் விநாயகர், மாகாளியம்மன் கோவில் பரிவார மூர்த்திகள் மற்றும் விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விநாயகர் மற்றும் மாகாளியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, பூஜைகள் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதேபோல பல்லடம் அருகே உள்ள குண்ணங்கல் பாளையம் பிரிவில் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மகாதீபாராதனை, அன்னதானம் வழங்குதல் நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com